மேலும் அறிய

நமக்கான அதிகாரத்தை நாமே உருவாக்கிக்கொள்ளும் காலம் கணியும் - திருமாவளவன் பரபரப்பு பேச்சு

ஆட்சி அதிகாரத்தில் பங்கு தருவோம் என ஆசை காட்டி நம்மை அழைத்தார்கள். நமக்கான அதிகாரத்தை நாமே உருவாக்கிக்கொள்ளும் காலம் கணியும் - திருமாவளவன்

விழுப்புரம் : திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்துள்ளது. இதன் மூலம் பாஜக, அதிமுக தலையில் இடி விழுந்துள்ளது. இது தேமுதிக எடுத்த அரசியல் என்பதை விட, ஸ்டாலின் எடுத்த ராஜதந்திரம். ஸ்டாலின் எடுத்துள்ள இந்த நிலைப்பாடு தமிழ்நாடு அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. செஞ்சியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திருமாவளவன் பேச்சு.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் அம்பேத்கர் மக்கள் கட்சி இணைப்பு மற்றும் சட்டமன்றத் தேர்தலுக்கான நிதியளிப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்பொழுது அவர் பேசுகையில்:

ரஜினி திரைப்படத்தில், ஒரு முறை சொன்னால், நூறு முறை சொல்ற மாதிரி என கூறுவது போல விடுதலை சிறுத்தைகள் ஒரு சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற்றால் நூறு பேர் வெற்றி பெற்றதற்கு சமம். தொகுதிகள் ஆறு, எட்டு என உயர்வதால் திருமாவளவன் முதலமைச்சராக போவதில்லை. எடப்பாடி.பழனிச்சாமியிடம் பெறும் அதனைத்து தொகுதியிலும் வெற்றி பெற்றாலும் ஆட்சி, அதிகாரத்தில் பங்கு தருவாரா?. இரணடரை ஆண்டுகள் நீங்கள் முதல்வர், இரண்டரை ஆண்டுகள் நாங்கள் முதல் என பகிர்ந்தளிக்க தயாராக இருப்பாரா? என கேள்வி எழுப்பினார்.

திமுக கூட்டணியை பலவீனப்படுத்துவது பாஜகவின் செயல் திட்டங்களில் ஒன்று. தேர்தல் நெருங்கிவிட்டது நம்முடைய கூட்டணி 200 இடங்களுக்கு மேல் வெற்றி பெற வேண்டும். அப்போதுதான் தமிழ்நாட்டையும், இந்தியாவையும், அரசியலமைப்புச் சட்டத்தையும் பாதுக்காக்க முடியும். இன்றைக்கு தேமுதிக திமுக கூட்டணியில் இணைந்துள்ளது. இதனை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். பாஜகவினர் கதறுகிறார்கள். தேமுதிக, பாஜகவினருடன் செல்வார்கள் என எதிர்பார்த்தனர்.

எடப்பாடி பழனிச்சாமிக்கு இடியே விழுந்திருக்கும். அவரும் எதிர்பார்த்திருக்க மாட்டார். இது தேமுதிக அடுத்த அரசியல் என்பதை விட, ஸ்டாலின் எடுத்த ராஜதந்திரம். ஸ்டாலின் எடுத்துள்ள இந்த நிலைப்பாடு தமிழ்நாடு அரசியலில் பரபரப்பை அல்ல, பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஐந்தாயிரம் கொடுப்பார்கள் என்றும் யாரும் எதிர்பார்க்கவில்லை. அது முதலில் அடிவயிற்றில் விழுந்த இடி, இது உச்சந்தலையில் விழுந்த இடி. அதிமுக பாஜக கூட்டணி நிலை குலைந்து போய்யுள்ளது.

இந்தியாவிலேயே கட்டுக்கோப்பாக ஒரு கூட்டணி இருக்கிறது என்றால் அது மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி தான். விசில் அடித்து நம்மை அழைத்தார்கள். ஆட்சி, அதிகாரத்தில் பங்கு தருவோம் என கூறினார்கள். அதை எங்களாலேயே உருவாக்கிக் கொள்ள முடியும் அதற்கான காலம் கனியும். எதிர்காலத்தில் அதிகார பகிர்வையும் வென்றெடுக்க முடியும். ஆனால் அதற்கான காலம் தற்போது இல்லை என்பதை நாங்கள் உணர்ந்துள்ளோம்.

எனவே காங்கிரஸ் தோழமை என்ற உணர்வோடு கேட்கிறது அது தவறில்லை அதனாலேயே இந்த அணி உடையும் என எதிர்பார்த்தார்கள். எதிர்பார்த்தவர்களின் மண்டை உடையும்படி தேமுதிக திமுக கூட்டணிக்கு வந்துள்ளது. நம்முடைய கூட்டணி நாளுக்கு நாள் வலிமையடைந்து வருகிறது. எதிர்க்கட்சிகள் இன்னும் ஒன்று சேரவில்லை. விஜயை தேடி ஒரு கட்சியும் சென்று சேரவில்லை. ஏற்கனவே கூட்டணியில் இருந்த கட்சிகளும் அதிமுக கூட்டணியில் சேர தயக்கம் காட்டுகின்றன. திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி, விடுதலை சிறுத்தைகள் அங்கம் வகிக்கும் கூட்டணி வலதுசாரிகளை, சனாதன சக்திகளை இந்த மண்ணிலிருந்து விரட்டியடிக்கும் வலிமையுள்ள கூட்டணி வெற்றி என்ற செய்தி வரலாற்றில் பதிவாக வேண்டும்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

மயிலாடுதுறை: சுதந்திரத்திற்குப் பிறகு முதன்முறையாக அரசுப் பேருந்து - நெகிழ்ச்சியில் கிராம மக்கள்!
மயிலாடுதுறை: சுதந்திரத்திற்குப் பிறகு முதன்முறையாக அரசுப் பேருந்து - நெகிழ்ச்சியில் கிராம மக்கள்!
TVK Candidate List: 2 தொகுதிகளில் விஜய் போட்டியா? தவெக தலைவர்கள் களமிறங்கும் இடங்கள் இதானா?
TVK Candidate List: 2 தொகுதிகளில் விஜய் போட்டியா? தவெக தலைவர்கள் களமிறங்கும் இடங்கள் இதானா?
BJP on TVK Vijay: கூட்டணிக்கு வரும் தவெக? ஓபிஎஸ் முடிவு சாபமா? குழாயடி சண்டை, கூட்டணி மாற்றம்: பாஜக பரபர!
BJP on TVK Vijay: கூட்டணிக்கு வரும் தவெக? ஓபிஎஸ் முடிவு சாபமா? குழாயடி சண்டை, கூட்டணி மாற்றம்: பாஜக பரபர!
தேர்தலில் போட்டியில்லை… ஆனால் திமுகக்கு முழு ஆதரவு – பெரியார் கழகம் விளக்கம்
தேர்தலில் போட்டியில்லை… ஆனால் திமுகக்கு முழு ஆதரவு – பெரியார் கழகம் விளக்கம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

கிருத்திகா போட்ட ட்வீட்
Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்
Parthiban Trisha | பொளந்தெடுத்த த்ரிஷா! ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்! ”பெண்ணே ஆகப்பெரும் சக்தி”
Trisha vs Parthiban | ”உங்க தரம் தெரிஞ்சிருச்சு! இதெல்லாம் JOKE-ஆ” பார்த்திபனை பொளந்த த்ரிஷா
ஜனநாயகன் ரிலீஸ் தேதி ரசிகர்களுக்கு GOOD NEWS குறுக்க இந்த தேர்தல் வந்தா...

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gas Cylinder: அடுத்த ஆப்பு..! கேஸ் சிலிண்டர் புக் செய்ய புதிய கட்டுப்பாடுகள், என்ன செய்யனும்? மத்திய அரசு அறிவிப்பு
Gas Cylinder: அடுத்த ஆப்பு..! கேஸ் சிலிண்டர் புக் செய்ய புதிய கட்டுப்பாடுகள், என்ன செய்யனும்? மத்திய அரசு அறிவிப்பு
TVK Candidate List: 2 தொகுதிகளில் விஜய் போட்டியா? தவெக தலைவர்கள் களமிறங்கும் இடங்கள் இதானா?
TVK Candidate List: 2 தொகுதிகளில் விஜய் போட்டியா? தவெக தலைவர்கள் களமிறங்கும் இடங்கள் இதானா?
LPG Gas Bengaluru: கேஸ் தட்டுப்பாடு: முடங்கும் உணவகங்கள்! கர்நாடகாவைத் தொடர்ந்து தமிழகத்திற்கும் ஆபத்தா?
LPG Gas Bengaluru: கேஸ் தட்டுப்பாடு: முடங்கும் உணவகங்கள்! கர்நாடகாவைத் தொடர்ந்து தமிழகத்திற்கும் ஆபத்தா?
Bike Taxi Ban: ஓலா, உபர், ராபிடோ பைக் டாக்சி சேவைக்கு தடை! அரசின் அதிரடி முடிவு! காரணம் என்ன?
Bike Taxi Ban: ஓலா, உபர், ராபிடோ பைக் டாக்சி சேவைக்கு தடை! அரசின் அதிரடி முடிவு! காரணம் என்ன?
BJP on TVK Vijay: கூட்டணிக்கு வரும் தவெக? ஓபிஎஸ் முடிவு சாபமா? குழாயடி சண்டை, கூட்டணி மாற்றம்: பாஜக பரபர!
BJP on TVK Vijay: கூட்டணிக்கு வரும் தவெக? ஓபிஎஸ் முடிவு சாபமா? குழாயடி சண்டை, கூட்டணி மாற்றம்: பாஜக பரபர!
Sanju Samson:
Sanju Samson: "இது ஒரு கனவு!" வலிகளே எனது பலம்.. உலகக்கோப்பை வெற்றிக்குப் பின் சஞ்சு சாம்சன் உருக்கம்
Kadaga Rasi Sani Peyarchi Palan: கடக ராசிக்காரர்களே! சனிப்பெயர்ச்சியால் உங்கள் வாழ்க்கையில் இதெல்லாம் நடக்கப்போது!
Kadaga Rasi Sani Peyarchi Palan: கடக ராசிக்காரர்களே! சனிப்பெயர்ச்சியால் உங்கள் வாழ்க்கையில் இதெல்லாம் நடக்கப்போது!
MP-க்களான அன்புமணி, எல்.கே.சுதீஷ்; 6 பேர் போட்டியின்றி தேர்வு- அதிகாரப்பூர்வ அறிவிப்பு
MP-க்களான அன்புமணி, எல்.கே.சுதீஷ்; 6 பேர் போட்டியின்றி தேர்வு- அதிகாரப்பூர்வ அறிவிப்பு
Embed widget