தமிழ் சினிமாவின் உச்சநட்சத்திரமாக திகழ்பவர் நடிகர் விஜய். இவர் கடந்தாண்டு தமிழக வெற்றிக் கழகம் கட்சியைத் தொடங்கினார். கட்சியைத் தொடங்கி சில மாதங்கள் அமைதியாக இருந்த விஜய், கடந்தாண்டு இறுதி முதல் பரபரப்பாக செயல்படத் தொடங்கினார். 

Continues below advertisement

விஜய் தொடங்கிய கையெழுத்து இயக்கம்:

இந்த நிலையில், செங்கல்பட்டில் உள்ள பூஞ்சேரியில் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா பிரம்மாண்டமாக நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யுடன் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரும் பங்கேற்றார். 

Continues below advertisement

தவெக தொடக்க விழாவில் கெட் அவுட் என்ற ஹேஷ்டேக் அடங்கிய கையெழுத்து இயக்கத்தை மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு எதிராக நடிகர் விஜய் கையெழுத்து இட்டு தொடங்கி வைத்தார். நடிகர் விஜய் தொடங்கி வைத்த இந்த கெட் அவுட் என்ற மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தில் விஜய்யைத் தொடர்ந்து மாநில பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கையெழுத்திட்டார். 

கையெழுத்திட மறுத்த பிரசாந்த் கிஷோர்:

அவர் கையெழுத்திட்ட பிறகு தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரையும் கையெழுத்திட பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அழைத்தார். அதற்கு பிரசாந்த் கிஷோர் மறுப்பு தெரிவித்தார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

தமிழ்நாட்டில் கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக-விற்கு தேர்தல் வியூக வகுப்பாளராக செயல்பட்டவர் பிரசாந்த்  கிஷோர். இவர் தற்போது நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்காக பணியாற்றுகிறார். 2014ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக-விற்காக, மோடிக்காக தேர்தல் வியூக வகுப்பாளராக செயல்பட்டார். அதன்பின்பு, பீகார் அரசியலிலும் முக்கிய தேர்தல் வியூக வகுப்பாளராக செயல்பட்டார். 

பீகாரில் கட்சித் தொடங்கிய பிரசாந்த் கிஷோர் பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் அந்த மாநில தேர்தலில் படுதோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

கெட் அவுட்:

கடந்த சில தினங்களுக்கு முன்பு திமுக - பா.ஜ.க. இடையேயான மோதலை முன்னிட்டு கெட் அவுட் ஸ்டாலின் மற்றும் கெட் அவுட் மோடி என்ற ஹேஷ்டேக்கில் திமுகவினரும், பா.ஜ.க.வினரும் மாறி மாறி இணையத்தில் சரமாரியாக விமர்சித்துக் கொண்டனர். இந்த சூழலில், தங்களுடைய கொள்கை எதிரியான  பா.ஜ.க. மற்றும் அரசியல் எதிரியான திமுக ஆகிய இரண்டு கட்சிகளையும் ஒரு சேர கெட் அவுட் என்ற ஹேஷ்டேக் மூலமாக வெளியேறுமாறு கையெழுத்து இயக்கத்தை தொடங்கியுள்ளனர்.