திமுக மாஜிக்களுக்கு குறி
தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தை பிடித்துள்ளது விஜய் தலைமையிலான தவெக அரசு, இந்த நிலையில், முந்தைய ஆளுங்கட்சியான திமுகவிற்கும்- தவெகவிற்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. அந்த வகையில், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் திமுக மாஜி அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் குறிவைத்து கைது செய்யப்பட்டு வருகிறார்கள். அனிதா ராதாகிருஷ்ணன், மார்கண்டேயன் என அடுத்தடுத்து எம்எல்ஏக்கள் கைது செய்யப்பட்ட நிலையில், நேற்று அதிரடியாக முன்னாள் துணை முதலமைச்சரும், எதிர்கட்சி தலைவருமான உதயநிதி கைது செய்யப்பட்டார். தஞ்சையில் நடைபெற்ற போராடத்தில் நடிகை திரிஷா தொடர்பாக அவதூறு கருத்து தெரிவித்ததாக கூறி கைது செய்யப்பட்டார்.
உதயநிதியை வரவேற்ற திமுக எம்எல்ஏக்கள்
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழகம் முழுவதும் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து நேற்று காலை சென்னையில் இருந்து தஞ்சாவூருக்கு அழைத்து செல்லப்பட்ட உதயநிதி, இரவு 7.30 மணியளவில் தஞ்சையில் விசாரணை நடைபெற்றது. இதனையடுத்து சுமார் 9.30 மணியளவில் உதயநிதி விடுவிக்கப்பட்டார். இதனையடுத்து சென்னை திரும்பிய உதயநிதி, இன்று காலை சட்டசபைக்கு வந்தார்.
தவெக அரசின் தேர்தல் வாக்குறுதி
முன்னதாக தலைமைச்செயலகம் வந்த எதிர்கட்சி தலைவர் உதயநிதியை வரவேற்க திமுக எம்எல்ஏக்கள் சட்டசபை வாசலில் காத்திருந்தனர். இதனையடுத்து திமுக எம்எல்ஏக்களோடு திமுக சட்டமன்ற கட்சி அலுவலகத்திற்கு சென்ற உதயநிதி சிறிது நேரம் ஆலோசனை மேற்கொண்டார். அதேநேரம் முதலமைச்சர் விஜய் சட்டசபைக்குள் வந்த போது திமுக எம்எல்ஏக்கள் யாரும் இல்லை, அப்போது அங்கிருந்த மற்ற கட்சி எம்எல்ஏக்களுக்கு முதலமைச்சர் வணக்கம் தெரிவித்து தனது இருக்கையில் அமர்ந்தார்.
நேருக்கு நேர் விஜய்- உதயநிதி
இதனையடுத்து திமுக எம்எல்ஏக்கள் உதயநிதி தலைமையில் சட்டசபைக்குள் வந்தனர். அப்போது உதயநிதி அங்கிருந்த அனைவருக்கும் வணக்கம் தெரிவித்தார். ஆனால் முதலமைச்சரை முகத்தை பார்க்காமல் மற்றவர்களுக்கு வணக்கம் தெரிவித்தார். இதனையடுத்து நிதி அமைச்சர் மரிய வில்சன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில், முதல்வர் விஜயின் பெயரை கேட்டாலே ஊழல்வாதிகள் ஓடி ஒளிவதை தினந்தோறும் பார்த்துக்கொண்டு இருக்கிறோம் என கூறினார். 2036ஆம் ஆண்டிற்குள் 1.5 ட்ரில்லியன் பொருளாதாரம் கொண்ட மாநிலமாக தமிழ்நாட்டை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நிதி அமைச்சர் மரிய வில்சன் தெரிவித்தார்.
