மேலும் அறிய

Thiruma: ”பொய் எல்லாம் இல்லை, விஜயை தடுக்க திமுக-அதிமுக கூட்டணி பேசுனாங்க” உண்மையை போட்டுடைத்த திருமா

Thirumavalavan TVK Vijay: தவெக ஆட்சி அமைப்பதை தடுக்கும் விதமாக திமுக- அதிமுக இணைந்து ஆட்சி அமைக்க பேச்சுவார்த்தை நடத்தியது உண்மை தான் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Thirumavalavan TVK Vijay: அதிமுகவுடன் கூட்டணி வைத்து ஆட்சி அமைப்பது திமுகவிற்கே மிகப்பெரிய பின்னடைவாக போய்விடும் என எச்சரித்ததாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். 

உண்மையை போட்டுடைத்த திருமாவளவன்:

விசிக தலைவர் திருமாவளவன் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி ஒன்று அளித்துள்ளார். அதில் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு திமுக மற்றும் அதிமுக இணைந்து ஆட்சி அமைப்பது குறித்து பரவும் பல்வேறு தகவல்கள் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளிக்கையில், “கூட்டணி கட்சிகள் இணைந்து வலுவான எதிரணியாக செயல்படலாம் என திமுக தலைவர் ஸ்டாலின் கடந்த 5ம் தேதி வலியுறுத்தினார். 7ம் தேதி விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தனித்தனியாக ஒரு அழைப்பு வந்தது. ஸ்டாலின் எங்களை பார்க்க விரும்புவதாக ஒரு அழைப்பு வந்தது. தொடர்ந்து நாங்கள் நேரில் சென்றோம். அப்போது திமுக மற்றும் அதிமுக கூட்டணியே இணைந்து ஆட்சி அமைக்கும் முடியும் என ஒரு பரிந்துரை வந்துள்ளது. இதுபற்றிய உங்கள் கருத்து என்னவென கேட்டனர். இது திமுகவிற்கே சூனியமாக மாறிவிடும், எதிர்காலமே கேள்விக்குறியாகலாம் என நான் கூறினேன். கம்யூனிஸ்டுகளும் கிட்டத்தட்ட அதே மாதிரியான கருத்துகளையே முன்வைத்தனர். பின்பு நாங்கள் அங்கிருந்து கிளம்பிவிட்டோம். பின்பு எங்களிடையே தொலைபேசி உரையாடல்கள் மட்டுமே இருந்தன” என திருமாவளவன் பேசியுள்ளார்.

இல்லவே இல்லை என பேசிய திமுக - அதிமுக

தவெக தனிப்பெரும்பான்மை பெறமுடியாத நிலையில், ஆதரவு கேட்டு பல்வேறு கட்சிகளை நாடியது. அந்த நேரத்தில் புதியதாக வந்தவரை ஆட்சி அமைக்க விடுவது தங்களது எதிர்காலத்திற்கே கேள்விகுறியாகலாம் என, பரம எதிரிகளான திராவிட கட்சிகள் கூட்டணி அமைக்க ஆலோசிப்பதாக தகவல்கள் வெளியாகின. இதனை திமுக மற்றும் அதிமுக கடுமையாக மறுத்தன. தவெகவினர் திட்டமிட்டு பொய் செய்திகளை பரப்புவதாக குற்றம்சாட்டினர். இதே குற்றச்சாட்டை சி.வி,. சண்முகம் முன்வைத்தபோது கூட, அமைச்சரவையில் இடம்பெறுவதற்காக பொய் சொல்வதாக அதிமுக மற்றும் திமுக தரப்பினர் விமர்சித்தனர். ஆனால். விஜய் ஆட்சி அமைக்காமல் தடுக்க திமுக மற்றும் அதிமுக கூட்டணி முயற்சிகள் உண்மையிலேயே நடந்ததாக, திருமாவளவன் உறுதிப்படுத்தியுள்ளார்.

திருமாவளவனுக்கு முதலமைச்சர் ஆஃபர்

பேட்டியில் தொடர்ந்து பேசுகையில், “கடந்த 8ம் தேதி இரவு ஸ்டாலினை சந்தித்து பேசியபோது, கம்யூனிஸ்ட் கட்சிகளின் முடிவினை பின்பற்றி நிலைப்பாடை அறிவிக்க உள்ளதாக தெரிவித்துள்ளீர்கள். எனவே, நீங்கள் விஜய் ஆட்சி அமைக்க ஆதரவு அளியுங்கள் என ஸ்டாலின் கூறினார். பின்பு அங்கிருந்து அவர் செல்லவே, அங்கிருந்தவர்கள் மத்தியில் ஒரு கருத்து வருகிறது. ஒரு சிறிய முன்னேற்றம் ஏற்பட்ட, உங்களை ஒரு பொது முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்த திட்டமிடப்பட்டுள்ளது. உங்களுடன் எடப்பாடி உள்ளிட்ட இருவர் துணை முதலமைச்சராக பொறுப்பேற்பார்கள் என அதிமுக தரப்பில் பேசுவதாக திமுகவில் இருந்து தகவல் வந்தது. அப்படி ஒரு நிலை வந்தால் வெளியில் இருந்து நாங்கள் ஆதரவளிப்போம். அட்சி அதிகாரத்தில் வரமாட்டோம் என்று தெரிவித்தனர். அதற்கும், இதெல்லாம் நடக்குற கதையா? தமிழ்நாட்டில் அப்படி நடக்குமா? என கேள்வி எழுப்பினேன். இல்லை தீவிரமாகவே இதற்கான நடவடிக்கைகள் நடைபெற்று கொண்டுள்ளன என்றனர்” என திருமாவளவன் பேசியுள்ளார்.

இதையும் படியுங்கள்:CM Vijay: அப்செட்..! கடைசி நேரத்தில் கேரள பயணத்தை ரத்து செய்த CM விஜய் - இவ்ளோ காரணங்கள் இருக்கா?

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

அரிவாளை எடுத்து வெட்டனும்.. தப்பு செய்ய விடுங்க..! டி.ஆர்.பாலு பேசுன பேச்சை பாருங்க
அரிவாளை எடுத்து வெட்டனும்.. தப்பு செய்ய விடுங்க..! டி.ஆர்.பாலு பேசுன பேச்சை பாருங்க
Sathyaraj: கட்டப்பா கண்ணீர் வடிக்கலாமா? சத்யராஜை கலாய்த்து தள்ளும் தவெக பாய்ஸ் - இணையத்தில் இதான் ட்ரெண்ட்
Sathyaraj: கட்டப்பா கண்ணீர் வடிக்கலாமா? சத்யராஜை கலாய்த்து தள்ளும் தவெக பாய்ஸ் - இணையத்தில் இதான் ட்ரெண்ட்
இந்தியா கூட்டணி சிதறிவிடக் கூடாது; திமுக பங்கேற்காதது வருத்தமளிக்கிறது: விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி!
இந்தியா கூட்டணி சிதறிவிடக் கூடாது; திமுக பங்கேற்காதது வருத்தமளிக்கிறது: விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி!
Annamalai: அண்ணாமலையும் இல்ல.. யாரை வச்சு தாமரைக்கு தண்ணி ஊத்துறது? புலம்பும் பாஜக
Annamalai: அண்ணாமலையும் இல்ல.. யாரை வச்சு தாமரைக்கு தண்ணி ஊத்துறது? புலம்பும் பாஜக
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |
NEET Exam Student Suicide |
Illegal Relationship | மனைவி உயிரோடுதான் இருக்காங்க குழந்தையுடன் கணவன் தலைமறைவு போலீஸார் விசாரணை!
Annamalai Resignation | பாஜகவுக்கு Bye Bye! புதிய பாதையில் அண்ணாமலை.. வெளியான அறிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thirumavalavan: கூட்டணியில் திமுக இல்லாதது வருத்தம் தான்.. ஓபனாக சொன்ன திருமாவளவன்!
Thirumavalavan: கூட்டணியில் திமுக இல்லாதது வருத்தம் தான்.. ஓபனாக சொன்ன திருமாவளவன்!
Aadhav Arjuna: MLAவை அசிங்கப்படுத்துறீங்களா?.. ஒரு மேயர் சீட் ஜெயிக்க முடியுமா? - திமுகவுக்கு ஆதவ் சவால்!
Aadhav Arjuna: MLAவை அசிங்கப்படுத்துறீங்களா?.. ஒரு மேயர் சீட் ஜெயிக்க முடியுமா? - திமுகவுக்கு ஆதவ் சவால்!
அரிவாளை எடுத்து வெட்டனும்.. தப்பு செய்ய விடுங்க..! டி.ஆர்.பாலு பேசுன பேச்சை பாருங்க
அரிவாளை எடுத்து வெட்டனும்.. தப்பு செய்ய விடுங்க..! டி.ஆர்.பாலு பேசுன பேச்சை பாருங்க
Annamalai: அண்ணாமலையும் இல்ல.. யாரை வச்சு தாமரைக்கு தண்ணி ஊத்துறது? புலம்பும் பாஜக
Annamalai: அண்ணாமலையும் இல்ல.. யாரை வச்சு தாமரைக்கு தண்ணி ஊத்துறது? புலம்பும் பாஜக
சிட்டாய் சிட்டியில் பறக்க! 175 சிசி எஞ்ஜின்.. Aprilia SR 175 ஸ்கூட்டர் வாங்கலாமா?
சிட்டாய் சிட்டியில் பறக்க! 175 சிசி எஞ்ஜின்.. Aprilia SR 175 ஸ்கூட்டர் வாங்கலாமா?
வெறும் 1 லட்சம் டெபாசிட்... சென்னையில் ஆவின் கடை வைக்க சூப்பர் வாய்ப்பு - ஜூன் 10 கடைசி நாள்!
வெறும் 1 லட்சம் டெபாசிட்... சென்னையில் ஆவின் கடை வைக்க சூப்பர் வாய்ப்பு - ஜூன் 10 கடைசி நாள்!
Annamalai: 18 மாதமாக பாஜகவில் பிரச்னை.. புது கட்சி தொடங்கப்போவதாக அண்ணாமலை அறிவிப்பு!
Annamalai: 18 மாதமாக பாஜகவில் பிரச்னை.. புது கட்சி தொடங்கப்போவதாக அண்ணாமலை அறிவிப்பு!
TVK Vijay: தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு - பட்ஜெட் உரையிலேயே அறிவிப்பு? பாமக கூட்டத்தில் தவெக பேச்சு
தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு - பட்ஜெட் உரையிலேயே அறிவிப்பு? PMK கூட்டத்தில் TVK பேச்சு
Embed widget