பிரதமரின் மக்கள் நலத் திட்டங்கள் - புதிய இந்தியா 2022 என்ற நூல் வெளியீட்டு விழா பாஜக தலைமையகமான கமலாலயத்தில் ஏப்.20ம் தேதி நடைபெற்றது. அதில் பங்கேற்று பேசிய பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை, திருமாவளவனுக்கு சவால் விட்டார். "இளையராஜா மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டதில் என்ன தவறு இருக்கிறது? ஆர்எஸ்எஸ் குறித்து அம்பேத்கர் கூறிய கருத்து தொடர்பாக என்னுடன் நேருக்கு நேர் விவாதிக்க திருமாவளவன் தயாராக இருக்கிறாரா? நான் இதுவரை 2000 புத்தகங்கள் படித்துள்ளேன்.


அருந்ததியர் சமூகத்தில் மிகப்பெரும் தலைவரான வி.பி.துரைசாமி அம்பேத்கர் கொள்கையை பாஜக பின்பற்றுவதால்தான் பாஜகவில் இணைந்தார்" என்றும் கூறினார்.


இதற்கு பதில் கொடுத்த திருமா, ’’பெரியார், அம்பேத்கர் விமர்சனத்துக்கு உட்பட்டவர்கள் தான் என்றபோது மோடி விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர் அல்ல. மோடியின் அக்கறை எல்லாம் அதானி, அம்பானி மீது மட்டுமே. அவர் வறுமை ஒழிப்புக்கு என்ன செய்திருக்கிறார். அதனால் அவரை விமர்சிப்பதில் என்ன தவறு. விளையாட்டில் பல்வேறு படிநிலை உண்டு. ஜூனியர், சப் ஜூனியர் என்று அழைப்பார்கள். அதுபோல் அரசியலில் அண்ணாமலை ஒரு சப் ஜூனியர். அவருடன் விவாதிக்க விடுதலை சிறுத்தை கட்சியிலிருந்து ஒரு சப்-ஜூனியரை வேண்டுமென்றால் அனுப்பி வைக்கிறோம்.




இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சங்கத்தமிழன் அண்ணாமலைக்கு போனில் பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் பேசிய சங்கத்தமிழன், '' 24ம் தேதி உங்களை நேரில் சந்திக்க முடியுமா? நேரில் விவாதம் செய்ய வேண்டும் என்கிறார். மேலும் அம்பேத்கரின் தொகுப்பு நம்பர் 8 என்ற புத்தகத்தை படித்து வைத்திருங்கள் என்றும் கூறுகிறார். அதற்கு பதில் அளித்த அண்ணாமலை, '' 24ம் தேதி பிஸியாக இருப்பதாகவும், 26ம் தேதி நேரில் சந்திக்கலாம் என்றும் தெரிவிக்கிறார். 


மேலும் நான் ஏற்கெனவே அம்பேத்கரின் புத்தகத்தை படித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அண்ணாமலை அழைத்தது போலவே விவாதத்துக்கு  விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அழைப்பு விடுக்கும் நிலையில் 26ம் தேதி நேரடி விவாதம் நடக்குமா என்று இணையவாசிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர். 






மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண