திமுக எம்பி செந்தில்குமார் ட்விட்டர் பதிவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக கோவை தெற்கு தொகுதி தமிழக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் ரீ- ட்வீட் செய்திருந்தார்.
திமுக எம்பி திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா தன்னை பாஜகவில் இணைத்துக்கொண்டார். பாஜக தமிழக தலைவர் அண்ணாமலையை நேற்று நேரில் சந்தித்த சூர்யா சிவா பாஜகவில் இணைந்தார். இதையடுத்து, திமுக, பாஜக வட்டாரம் முழுவதும் இந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தொடர்ந்து, தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் பாஜக கட்சியினர் திமுக எம்பி திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா பாஜகவில் இணைந்ததை கொண்டாடி வந்தனர். இந்தநிலையில், ஒரு முக்கிய எம்பியான திருச்சி சிவாவின் மகனே பாஜகவில் இணைந்தது குறித்து பாஜக கட்சியினர் கடுமையான பதிவுகளின் மூலம் திமுகவை வறுத்தெடுத்து வந்தனர். திமுக எம்பி செந்தில்குமார் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ஒரு ட்வீட்டை பதிவு செய்தார்.
அதில், ''திமுகவில் எந்த பதவியிலும் இல்லாத ஒருவர் உங்கள் கட்சியில் இணைவதை கொண்டாடும் தமிழக பாஜக உங்களுக்கு ஒரு தகவல். உங்க கட்சியின் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் உள்ளார்கள். எங்கள் தலைமை இசைவு தெரிவித்தால் இரண்டு பேரையும் தூக்கிவிடுவோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில், இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கோவை தெற்கு தொகுதி தமிழக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் ரீ- ட்வீட் செய்திருந்தார். அதில், முடிந்தால் ”தூக்குங்கள்.. பார்க்கிறோம்… என்று பதிவிட்டுள்ளார். தற்போது இந்த ட்வீட் வைரலாகி வருகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்