CM Vijay: போட்டியே இல்லை..! CM விஜய்க்கு சட்டசபையில் கிடைத்த முதல் வெற்றி - முக்கிய பதவிகளின் அதிகாரம் என்ன?
CM Vijay TN Speaker: தமிழ்நாடு சட்டப்பேரவைக்கான சபாநாயகர் தேர்தலில் முதலமைச்சர் விஜயால் முன்னிறுத்தப்பட்ட, தவெக எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

CM Vijay TN Speaker: தமிழ்நாடு சட்டப்பேரவைக்கான சபாநாயகர் தேர்தலில் தவெக வேட்பாளருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் யாரும் வேட்பாளர்களை களமிறக்கவில்லை.
தவெக அரசின் முதல் வெற்றி:
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவில் தனிப்பெருங்கட்சியாக உருவெடுத்த விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம், சில சிறிய கட்சிகளின் ஆதரவுடன் கடந்த 10ம் தேதி ஆட்சி அமைத்தது. அப்போது வரும் 13ம் தேதிக்குள் அரசு சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் கெடு விதித்தார். இதைமுன்னிட்டு நேற்று எம்.எல்.ஏக்களின் பதவிபிரமாணம் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக இன்று சபாநாயகர் மற்றும் துணைசபாநாயகர் பதவிக்கான தேர்தல் பேரவையில் நடைபெற உள்ளது. இதற்காக தவெக சார்பில் இருவர் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர். ஆனால், எதிர்க்கட்சிகள் சார்பில் போட்டியாளர்கள் யாரும் களமிறக்கப்படாததால் சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் ஆகிய இரண்டு முக்கிய பதவிகளும் தவெகவிற்கு கிடைத்துள்ளது.
முக்கிய பதவிகளை கைப்பற்றிய தவெக:
தனிப்பெரும்பான்மை இல்லாத நிலையில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பல்வேறு அரசியல் கட்சிகளின் ஆதரவுடனே, முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு அமைந்துள்ளது. இதனால், சபாநாயகர் பதவிக்கு பொதுவேட்பாளர் களமிறக்கப்பட்டு, விஜய் தலைமையிலான அரசுக்கு முட்டுக்கட்டை போடக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது.அதன்படி, எம்.எல்.ஏக்களின் பதவி பிரமாணத்தை தொடர்ந்து இன்று சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் பதவிகளுக்கான தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. இதற்காக கட்சியின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரும், ஆயிரம் விளக்கு தொகுதி தவெக எம்.எல்.ஏவுமான ஜேசிடி பிரபாகரை சபாநாயகர் வேட்பாளராக முதலமைச்சர் விஜய் பரிந்துரைத்தார். அதோடு, துணை சபாநாயகர் பதவிக்கு துறையூர் தவெக எம்.எல்.ஏவான ரவிசங்கரும் வேட்புமனு தாக்கல் செய்தார். தொடர்ந்து வேட்புமனு தாக்கல் செய்வதற்கான அவகாசம் நேற்று மாலையுடன் முடிவடைந்த நிலையில், எதிர்க்கட்சிகள் சார்பில் யாரும் வேட்பாளர்களை களமிறக்கப்படவில்லை. இதனால், போட்டியே இன்றி தவெகவின் இரண்டு பேரும் சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகராக வெற்றி பெற்றுள்ளனர்.
இன்று சபாநாயகர் பதவியேற்பு:
சபாநாயகர் தேர்தல் முடிவுகள் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு, ஜேசிடி பிரபாகர் மற்றும் ரவிசங்கர் ஆகியோர் பொறுப்பேற்க உள்ளனர். தொடர்ந்து முதலமைச்சர் விஜய் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஆகியோர் சேர்ந்து, சபாநாயகர் இருக்கையில் ஜேடிசி பிரபாகரை அமரவைக்க உள்ளனர். அதன் பிறகு தற்காலிக சபாநாயகரான சோழவந்தான் கருப்பையா தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளார். அவையை நடத்துவது உள்ளிட்ட முக்கிய அதிகாரங்களை கொண்டுள்ள சபாநாயகர் பதவியை போட்டியின்றி கைப்பற்றியது, முதலமைச்சர் விஜய்க்கு சட்டப்பேரவையில் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக கருதப்படுகிறது.
சபாநாயகரின் பணிகளும், அதிகாரங்களும்..
- சபாநாயகர் அவையின் நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துகிறார் மற்றும் விவாதங்களில் யாருக்குப் பேச அனுமதி அளிப்பது என்பதை முடிவு செய்கிறார்
- ஒரு மசோதா விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளக்கூடியதா இல்லையா என்பதை முடிவு செய்யும் இறுதி அதிகாரம் சபாநாயகருக்கு மட்டுமே உண்டு.
- அவையில் ஏதேனும் ஒரு விவகாரத்தில் சமமான வாக்குகள் (Tie) வரும்போது, சபாநாயகர் தனது தீர்மானிக்கும் வாக்கை (Casting Vote) பயன்படுத்தி முடிவை அறிவிக்கலாம்
- அவையில் ஒழுங்கீனமாக நடந்துகொள்ளும் உறுப்பினர்களை வெளியேற்றவோ, இடைநீக்கம் செய்யவோ சபாநாயகருக்கு அதிகாரம் உண்டு.
- 10-வது அட்டவணையின்படி, கட்சித் தாவல் அடிப்படையில் உறுப்பினர்கள் தகுதியிழப்பு தொடர்பான வழக்குகளில் சபாநாயகரின் முடிவே இறுதியானது.
- சபாநாயகர் அவை கலைக்கப்படும்போதும் பதவியில் தொடர்வார்.
Before You Go
கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
ட்ரெண்டிங் செய்திகள்






















