மேலும் அறிய

TVK Meeting Death: மீண்டுமா? விஜய்யின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற இளைஞர் மரணம் - சேலத்தில் நடந்தது என்ன?

சேலத்தில் விஜய்யின் தவெக கூட்டத்தில் பங்கேற்ற இளைஞர் மயக்கம் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று சேலத்தில் பரப்புரை மேற்கொண்டார். 

விஜய் பரப்புரையில் ஒருவர் மரணம்:

இந்த பரப்புரைக் கூட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் சூரஜ் என்ற இளைஞர் பங்கேற்றார். சேலத்தில் உள்ள வெள்ளிப்பட்டறையில் பணியாற்றி வரும் அவருக்கு, இந்த கூட்டத்தின்போது வலிப்பு ஏற்பட்டுள்ளது. வலிப்பு ஏற்பட்டு மயக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். 

ஆனால், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரது மரணம் பெரும் அதிர்ச்சியை தவெக-வினருக்கும், தமிழக மக்கள் மத்தியிலும் ஏற்படுத்தியுள்ளது. கடந்தாண்டு விஜய் கரூரில் பரப்புரை செய்தபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் சோகத்தில் ஆழ்த்தியது.

தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்களுக்கு குறைவாகவே இருப்பதால் தமிழ்நாட்டில் ஒவ்வொரு கட்சியினரும் மக்கள் மத்தியில் தங்கள் பரப்புரையை தீவிரமாக மேற்கொள்ளும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 

ஆயிரக்கணக்கில் குவிந்த தொண்டர்கள்:

தமிழ்நாட்டில் இந்த தேர்தலில் அனைவரது மத்தியிலும் அதிகளவு எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள கட்சி தவெக. கரூர் சம்பவத்திற்கு பிறகு தனது ஒவ்வொரு அரசியல் நடவடிக்கைகளையும் கவனமாக மேற்கொண்டு வரும் விஜய், மீண்டும் தனது தீவிர பரப்புரையை மேற்கொள்ளத் தாெடங்கியுள்ளார். 

இதனால், இன்று சேலம் சீலநாயக்கன்பட்டியில் நிர்வாகிகள் சந்திப்பை நடத்தினார். விஜய் சேலம் வருவதை முன்னிட்டு மாநாடு நடைபெறும் இடத்தில் காலை முதலே குவியத் தொடங்கினார். 5 ஆயிரம் பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி என்று அரசு நிபந்தனை விதித்திருந்தாலும், அதிகளவில் தவெக தொண்டர்களும், ரசிகர்களும் குவியத் தொடங்கினார்.  

அசம்பாவிதம்:

இந்த கூட்டத்தில் பங்கேற்ற தொண்டர்களுக்காக நாற்காலிகள் போடப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற சூரஜிற்கு திடீரென வலிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்பின்னரே, இந்த அசம்பாவிதம் அரங்கேறியுள்ளது. உயிரிழந்த  சுராஜ் மகாராஷ்ட்ராவைப் பூர்வீகமாக கொண்டவர். 35 வயதான அவருக்கு மகனும், மகளும் உள்ளனர். அவர் 20 ஆண்டுகளாக வெள்ளிப்பட்டறையில் பணியாற்றி வருகிறார்.

விஜய்யின் அரசியல் வாழ்வில் மிகப்பெரிய கரும்புள்ளியாக கரூர் துயர சம்பவம் உள்ளது. இந்த சம்பவத்திற்கு பிறகு, சுமார் 2 மாதங்களுக்கு பொதுவெளியில் வராமல் இருந்த விஜய் பின்னர் மிகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடனே பொதுக்கூட்டம், கட்சி நிர்வாகிகள் கூட்டத்தை நடத்தி வருகிறார். 

வட மாநில இளைஞர்:

இந்த நிலையில், இன்று சேலத்தில் நடந்துள்ள இந்த உயிரிழப்பு சம்பவம் மீண்டும் தவெக நிர்வாகிகள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விஜய் சுமார் அரைமணி நேரம் பேசினாலும், அவர் பேசுவதை பார்ப்பதற்காக சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக தொண்டர்கள், ரசிகர்கள் காத்திருந்தனர். சூரஜ் மயக்கம் அடைந்து உயிரிழந்ததற்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாக உள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Jose charles martin Vs Aadhav Arjuna : திமுகவின் ‘Sleeper Cell’ தான் ஆதவ் அர்ஜூனா..! பட்டியலிட்டு விஜய்யை அலர்ட்டு செய்யும் மச்சான் ஜோஸ் சார்லஸ்
திமுகவின் ‘Sleeper Cell’ தான் ஆதவ் அர்ஜூனா..! பட்டியலிட்டு விஜய்யை அலர்ட்டு செய்யும் மச்சான் ஜோஸ் சார்லஸ்
'சட்டமன்ற தேர்தலில் போட்டி?’ அதிரடி முடிவு எடுத்த வைகோ? - முழு விவரம்..!
'சட்டமன்ற தேர்தலில் போட்டி?’ அதிரடி முடிவு எடுத்த வைகோ? - முழு விவரம்..!
Kanimozhi: பூசி மொழுகிய கனிமொழி.. உங்க தொகுதினா மட்டும் வலிக்குதா? அண்ணனுக்கு ஆதரவா? - நெட்டிசன்கள் ஆவேசம்
Kanimozhi: பூசி மொழுகிய கனிமொழி.. உங்க தொகுதினா மட்டும் வலிக்குதா? அண்ணனுக்கு ஆதரவா? - நெட்டிசன்கள் ஆவேசம்
TVK VIJAY : கல்லாப்பெட்டி கூட்டணியைத் தக்க வைப்பதில் மட்டுமே திமுக முழு கவனம்.! பெண்களுக்கு பாதுகாப்பு எங்கே.? விளாசும் விஜய்
கல்லாப்பெட்டி கூட்டணியைத் தக்க வைப்பதில் மட்டுமே திமுக முழு கவனம்.! இப்படி ஒரு ஆட்சி தேவையா.? விளாசும் விஜய்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
LPG Gas Booking: கேஸ் சிலிண்டர் புக் பண்ண முடியலையா? 6 எளிய வழிகள் இதோ! மிஸ் பண்ணாதீங்க!
LPG Gas Booking: கேஸ் சிலிண்டர் புக் பண்ண முடியலையா? 6 எளிய வழிகள் இதோ! மிஸ் பண்ணாதீங்க!
'சட்டமன்ற தேர்தலில் போட்டி?’ அதிரடி முடிவு எடுத்த வைகோ? - முழு விவரம்..!
'சட்டமன்ற தேர்தலில் போட்டி?’ அதிரடி முடிவு எடுத்த வைகோ? - முழு விவரம்..!
Petrol Diesel Stock : வாகன ஓட்டிகளுக்கு குஷியான நியூஸ்.! 90 நாட்களுக்கு தேவையான பெட்ரோல், டீசல் இருக்கு- மத்திய அரசு அறிவிப்பு
வாகன ஓட்டிகளுக்கு குஷியான நியூஸ்.! 90 நாட்களுக்கு தேவையான பெட்ரோல், டீசல் இருக்கு- மத்திய அரசு அறிவிப்பு
படிக்க வரும் மாணவிகளுக்குக்கூட பாதுகாப்பில்லை; பாலியல் கொடுமைகள் நடக்காத நாளே இல்லை- சீறிய அன்புமணி!
படிக்க வரும் மாணவிகளுக்குக்கூட பாதுகாப்பில்லை; பாலியல் கொடுமைகள் நடக்காத நாளே இல்லை- சீறிய அன்புமணி!
Made in India Cars: ”வெத நான் போட்டது” இந்திய சந்தையை புரட்டிப்போட்ட 5 உள்ளூர் கார் மாடல்கள் - லெஜண்டு டா..
Made in India Cars: ”வெத நான் போட்டது” இந்திய சந்தையை புரட்டிப்போட்ட 5 உள்ளூர் கார் மாடல்கள் - லெஜண்டு டா..
Kanimozhi: பூசி மொழுகிய கனிமொழி.. உங்க தொகுதினா மட்டும் வலிக்குதா? அண்ணனுக்கு ஆதரவா? - நெட்டிசன்கள் ஆவேசம்
Kanimozhi: பூசி மொழுகிய கனிமொழி.. உங்க தொகுதினா மட்டும் வலிக்குதா? அண்ணனுக்கு ஆதரவா? - நெட்டிசன்கள் ஆவேசம்
மாநிலம் முழுவதும் தொடரும் பாலியல் குற்றங்கள்; அருமை பெருமைபேசி சுகம் காணும் திமுக அரசு- விளாசிய ராமதாஸ்!

Embed widget