மேலும் அறிய

TVK Vijay: மீனவர்களுக்காக குரல் கொடுத்த விஜய் - ”உருப்படியாக எதையும் செய்யாத திமுக” என சாடல்

TVK Vijay on TN Fishermen Arrest: தமிழ்நாடு மீனவர்களின் விடுதலைக்காக திமுக அரசு எதையும் உருப்படியாக செய்யவில்லை என, தவெக தலைவர் விஜய் குற்றம்சாட்டியுள்ளார்.

TVK Vijay on TN Fishermen Arrest: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட, காரைக்காலைச் சேர்ந்த 25 மீனவர்களை உடனடியாக விடுவிக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தவெக தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.

மீனவர்களுக்காக குரல் கொடுத்த விஜய்

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், “ புதுச்சேரியின் காரைக்கால் மாவட்டம், காசாக்குடிமேடு, கிளிஞ்சல்மேடு கிராமங்களைச் சேர்ந்த 25 மீனவர்களை, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கைக் கடற்படை கைது செய்துள்ளது. அத்துடன், அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது. இந்த அடாத செயல், அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் 25 பேரையும் உடனடியாக விடுவித்து, அவர்களது படகுகளையும் மீட்டுத் தர ஒன்றிய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தவிக்கும் மீனவர்கள்

அதே நேரத்தில், இலங்கை நீதிமன்றத்தால் கடந்த 3ஆம் தேதி விடுவிக்கப்பட்ட பிறகும் தமிழ்நாட்டு மீனவர்கள் 9 பேர், சொந்த ஊருக்குத் திரும்ப முடியவில்லை. அவர்கள் அங்கே பரிதவித்து வருவதாக அவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளது வேதனை அளிக்கிறது. மேலும் தமிழக மீனவர்கள் 3 பேர், இலங்கை நீதிமன்றம் விதித்த அபராதத் தொகையைச் செலுத்த முடியாமல் சிறையில் வாடுகின்றனர்.

தமிழ்நாடு அரசு மீது குற்றச்சாட்டு

மீனவர்களுக்குத் தொடர்ந்து இதுபோல நிகழ்வதைத் தடுக்க, தமிழக அரசு உருப்படியான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தாம் கடிதம் எழுதுவதே போதும் என்று தமிழக முதல்வர் எண்ணுகிறாரா? இது ஒரு புரியாத புதிராகவே இருக்கிறது.  இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமி­ழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த மீனவர்கள் அனைவரையும் உரிய முறையில் மீட்டு, சொந்த ஊருக்கு அழைத்து வர வேண்டும். மனிதாபிமான முறையில் இலங்கை அரசிடம் பேசி, தாமதமின்றி உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இது தொடர்பாக, சம்பந்தப்பட்ட மாநில அரசுகள், ஒன்றிய அரசை உண்மையாகவே உணர்வுப்பூர்வமாக வலியுறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என விஜய் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கை கடற்படை அட்டூழியம்

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி, தமிழ்நாடு மற்றும் புதுவையை சேர்ந்த மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவது என்பது தொடர்கதையாகி வருகிறது. அந்த வகையில் இன்று காலை காரைக்காலைச் சேர்ந்த 25 பேரை இலங்கை கடற்படை கைது செய்து, காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்துச் சென்றது. விசாரணைக்குப் பின், யாழ்பானம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மீனவர்கள் கைது நடவடிக்கையை தடுக்கவும், தமிழக மாணவர்களை பத்திரமாக மீட்கவும் உரிய நடவடிக்கை எடுக்கும்படி, முதலமைச்சர் ஸ்டாலின் பலமுறை வெளியுறவு அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். ஆனாலும், இந்த சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருவது குறிப்பிடத்தக்கது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

TVK Vijay Speech: விஜய்க்கு ஒரு வாய்ப்பு கொடுப்பீர்களா? அடுத்த ஜென்மத்தில் இப்படி பிறக்க ஆசை- நெக்குருகிய விஜய்!
TVK Vijay Speech: விஜய்க்கு ஒரு வாய்ப்பு கொடுப்பீர்களா? அடுத்த ஜென்மத்தில் இப்படி பிறக்க ஆசை- நெக்குருகிய விஜய்!
பதவி வெறியில் திமுக.. மிரட்டலுக்கு பணியும் காங்கிரஸ்! - புதுச்சேரி அரசியலில் புயலைக் கிளப்பிய அதிமுக அன்பழகன்!
பதவி வெறியில் திமுக.. மிரட்டலுக்கு பணியும் காங்கிரஸ்! - புதுச்சேரி அரசியலில் புயலைக் கிளப்பிய அதிமுக அன்பழகன்!
ராஜ்ய சபா சீட்: தேமுதிக-வை விட விசிக, மதிமுக கட்சிகள் குறைவா? கடம்பூர் ராஜூவின் பரபரப்பு கேள்வி!
ராஜ்ய சபா சீட்: தேமுதிக-வை விட விசிக, மதிமுக கட்சிகள் குறைவா? கடம்பூர் ராஜூவின் பரபரப்பு கேள்வி!
DMK CONGRESS Alliance : திமுகவிற்கு அடிபணிந்த காங்கிரஸ்.! உறுதியானது கூட்டணி.? ஒரே நாளில் ஏற்பட்ட ட்விஸ்ட்
திமுகவிற்கு அடிபணிந்த காங்கிரஸ்.! உறுதியானது கூட்டணி.? ஒரே நாளில் ஏற்பட்ட ட்விஸ்ட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Mammootty | கொத்து கொத்தாகமடியும் உயிர்கள்மனிதநேயம் எங்கே? மம்மூட்டி EMOTIONAL! | Iran Israel Attack
Iran Israel conflict | சீனுக்கு வந்த 3 நாடுகள்! அமெரிக்காவுடன் கூட்டு! சமாளிக்குமா ஈரான்? | America
Gold Price Hike | ஷாக் கொடுத்த தங்கம் ஈரான் தான் காரணமா? எப்போது குறையும் Gold Price | Iran War
Iran IRGC | ஈரானின் வலிமையான படை! US-க்கு பயம் காட்டிய IRGC தரைமட்டமாக்கிய ட்ரம்ப்! பகீர் காட்சி
Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay Speech: விஜய்க்கு ஒரு வாய்ப்பு கொடுப்பீர்களா? அடுத்த ஜென்மத்தில் இப்படி பிறக்க ஆசை- நெக்குருகிய விஜய்!
TVK Vijay Speech: விஜய்க்கு ஒரு வாய்ப்பு கொடுப்பீர்களா? அடுத்த ஜென்மத்தில் இப்படி பிறக்க ஆசை- நெக்குருகிய விஜய்!
TVK Vijay Speech: தமிழகத்தை காப்பாற்றுவது திமுகவா? - இனி நான் தான்.. தஞ்சையில் விஜய் பேச்சு!
TVK Vijay Speech: தமிழகத்தை காப்பாற்றுவது திமுகவா? - இனி நான் தான்.. தஞ்சையில் விஜய் பேச்சு!
DMK CONGRESS Alliance : திமுகவிற்கு அடிபணிந்த காங்கிரஸ்.! உறுதியானது கூட்டணி.? ஒரே நாளில் ஏற்பட்ட ட்விஸ்ட்
திமுகவிற்கு அடிபணிந்த காங்கிரஸ்.! உறுதியானது கூட்டணி.? ஒரே நாளில் ஏற்பட்ட ட்விஸ்ட்
Pentagon Warns Trump.?: ஏவுகணைகள் காலியாகப் போகுது.! கதறும் பென்டகன்; அதிர்ச்சியில் ட்ரம்ப்.. போர் தொடருமா.?
ஏவுகணைகள் காலியாகப் போகுது.! கதறும் பென்டகன்; அதிர்ச்சியில் ட்ரம்ப்.. போர் தொடருமா.?
Top 10 News Headlines: சரிந்த தங்கம் விலை, இந்தியாவில் X அதிரடி, ஈரான் பகிரங்க மிரட்டல், ட்ரம்ப்பை எச்சரித்த பென்டகன் - 11 மணி செய்திகள்
சரிந்த தங்கம் விலை, இந்தியாவில் X அதிரடி, ஈரான் பகிரங்க மிரட்டல், ட்ரம்ப்பை எச்சரித்த பென்டகன் - 11 மணி செய்திகள்
GOLD AND SILVER RATE TODAY : சரிந்தது 4,600 ரூபாய்.! 3 நாளில் தங்கம் விலையில் தலைகீழ் மாற்றம்- நகைப்பிரியர்கள் குஷியோ குஷி
சரிந்தது 4,600 ரூபாய்.! 3 நாளில் தங்கம் விலையில் தலைகீழ் மாற்றம்- நகைப்பிரியர்கள் குஷியோ குஷி
TN Roundup: திமுக உடன் லாக்கான காங்கிரஸ், தஞ்சாவூரில் விஜய், அதிமுக கூட்டம்- தமிழகத்தில் இதுவரை
TN Roundup: திமுக உடன் லாக்கான காங்கிரஸ், தஞ்சாவூரில் விஜய், அதிமுக கூட்டம்- தமிழகத்தில் இதுவரை
DMK CONGRESS Alliance : இன்று தான் கடைசி.! லாஸ்ட் சான்ஸ் கொடுத்த திமுக- என்ன முடிவு எடுக்கப்போகிறது காங்கிரஸ்.?
இன்று தான் கடைசி.! லாஸ்ட் சான்ஸ் கொடுத்த திமுக- என்ன முடிவு எடுக்கப்போகிறது காங்கிரஸ்.?
Embed widget