மேலும் அறிய

TVK: புதுசுகளுக்குத்தான் சீட்டு.. காலம் காலமா உழைச்சவனுக்கு வேட்டு! விஜய் முடிவால் அப்செட்டில் தவெக!

தமிழக வெற்றிக் கழகம் வரும் சட்டமன்ற தேர்தலில் தங்களது மாவட்டச் செயலாளர்கள் பலருக்கும் போட்டியிட வாய்ப்பு மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா முழுவதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது தமிழக சட்டமன்ற தேர்தல். இந்த தேர்தலில் தமிழ்நாடு முழுவதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அரசியல் கட்சி தமிழக வெற்றிக் கழகம். தமிழ் திரையுலகின் மிகப்பெரிய நடிகராக உலா வரும் விஜய் போட்டியிடும் முதல் தேர்தல் என்பதால் இந்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. 

புதியவர்களுக்கே முக்கியத்துவம்:

தமிழக வெற்றிக் கழகத்தினருடன் இதுவரை யாரும் கூட்டணி வைக்காத நிலையில், 234 தொகுதிகளிலும் அவர்களே போட்டியிடும் சூழல் உருவாகியுள்ளது. விஜய்யின் ஆரம்பகாலம் முதலே அவர்களது திரைப்படங்களை கொண்டாடி, அவரை உச்சநட்சத்திரமாக உயர்த்தியதில் அவரது ரசிகர்களின் பங்களிப்பு மிகப்பெரியதாக உள்ளது. விஜய்யின் தவெக-வின் மாவட்டச் செயலாளர்களாகவும் அவர்களே உள்ளனர்.

விஜய் மக்கள் இயக்கம் வரை பல்வேறு பணிகளையும் அவர்களே மேற்கொண்டு வந்த நிலையில், விஜய் கட்சி தொடங்கிய பிறகு செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன், அருண்ராஜ், சிடி நிர்மல்குமார் என பலரும் கட்சியில் இணைந்து முக்கிய நிர்வாகிகளாக உருவெடுத்துள்ளனர்.

உழைத்தவர்களுக்கு சீட் இல்லை:

இந்த நிலையில், இந்த தேர்தலில் பல தொகுதிகளிலும் விஜய்யின் ரசிகர் மன்றத்திற்காகவும், விஜய்யின் மக்கள் இயக்கத்திற்காகவும் உழைத்த பலருக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடையாது என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

சென்னையில் மொத்தம் உள்ள 16 தொகுதிகளில் 3 மட்டுமே விஜய்யின் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய்யின் மிகப்பெரிய பலமாக கருதப்படும் செங்கோட்டையன் கோபிச்செட்டிப்பாளையத்திலும், அவரது ஆதரவாளர்கள் 8 பேர் கொங்கு மண்டலத்திலும் களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், அந்த பகுதியில் பல வருடமாக விஜய்யின் ரசிகர் மன்றம், மக்கள் இயக்கத்திற்காக உழைத்தவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

அதிமுக-வில் இருந்து தவெக-வில் இணைந்த ஜேசிடி பிரபாகருக்கு அம்பத்தூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. ராஜ்மோகன் பெரம்பலூரிலும், அருண்ராஜ் திருச்செங்கோட்டிலும் போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது. இவர்கள் மட்டுமின்றி பெலிக்ஸ், போன்ற புதியவர்களுக்கும் கட்சியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

ஆதங்கம்:

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் விஜய்யைத் தவிர மற்ற பெரிய முகங்கள் யாருமில்லை. அரசியல் அனுபவம் கொண்டவராக செங்கோட்டையன் மட்டுமே உள்ளார். இதனால், கட்சியின் முக்கிய நிர்வாகிகளாக கருதப்படும் ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன் போன்ற முகங்களுக்கும் வாய்ப்பு வழங்குவது அவசியம் என்று தவெக ஆதரவாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். 

கடந்த இரு தினங்களுக்கு முன்பு நடந்த தவெக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்களாக இருப்பவர்கள் இந்த தேர்தலில் சீட்டை எதிர்பார்க்காதீர்கள். தளபதிக்காக உழையுங்கள் என்று தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் பேசியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அதேசமயம், வேறு கட்சியில் இருந்து வந்தவர்களுக்காக சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக விஜய்க்காக உழைத்தவர்களுக்கு அங்கீகாரம் மறுக்கப்பட்டுள்ளதாக சிலர் வேதனையுடன் தெரிவித்துள்ளனர். 

தேர்தல் தேதி இன்னும் ஓரிரு வாரங்களுக்குள் அறிவிக்கப்பட உள்ள நிலையில், தவெக தங்களது வேட்பாளர்கள் பட்டியல் தேர்வையும் தீவிரமாக தயாரித்து வருகிறது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Vijay Trisha: கோர்ட்டில் டைவர்ஸ் கேஸ்! த்ரிஷாவுடன் ஜோடியாக கல்யாணத்திற்கு வந்த விஜய்!
Vijay Trisha: கோர்ட்டில் டைவர்ஸ் கேஸ்! த்ரிஷாவுடன் ஜோடியாக கல்யாணத்திற்கு வந்த விஜய்!
இன்பன் - இனியன்.. தொடரும் 4 தலைமுறை நட்பு!
இன்பன் - இனியன்.. தொடரும் 4 தலைமுறை நட்பு!" - அன்பில் மகேஸ் இல்ல விழாவில் முதல்வர் ஸ்டாலின் உருக்கம்!
‘முக்குலத்தோர் வாக்குகளுக்கு ஸ்கெட்ச்’ மு.க.ஸ்டாலின் தலைமையில் இணைப்பு விழா நடத்தும் ஒபிஎஸ்..!
’முக்குலத்தோர் வாக்குகளுக்கு ஸ்கெட்ச்’ மு.க.ஸ்டாலினின் மெகா பிளான்..!
TN Assembly Election: காட்டாற்றில் அடித்துச் செல்லப்பட்ட ஓட்டுப்பெட்டிகள்! எலெக்ஷன் ரிசல்ட் என்னாச்சு?
TN Assembly Election: காட்டாற்றில் அடித்துச் செல்லப்பட்ட ஓட்டுப்பெட்டிகள்! எலெக்ஷன் ரிசல்ட் என்னாச்சு?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Mammootty | கொத்து கொத்தாகமடியும் உயிர்கள்மனிதநேயம் எங்கே? மம்மூட்டி EMOTIONAL! | Iran Israel Attack
Iran Israel conflict | சீனுக்கு வந்த 3 நாடுகள்! அமெரிக்காவுடன் கூட்டு! சமாளிக்குமா ஈரான்? | America
Gold Price Hike | ஷாக் கொடுத்த தங்கம் ஈரான் தான் காரணமா? எப்போது குறையும் Gold Price | Iran War
Iran IRGC | ஈரானின் வலிமையான படை! US-க்கு பயம் காட்டிய IRGC தரைமட்டமாக்கிய ட்ரம்ப்! பகீர் காட்சி
Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Semi Final IND vs ENG: பொத்தல் போட பாத்த பெத்தேல்! 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி! இறுதிப்போட்டிக்கு ரெடி!
Semi Final IND vs ENG: பொத்தல் போட பாத்த பெத்தேல்! 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி! இறுதிப்போட்டிக்கு ரெடி!
Vijay Trisha: கோர்ட்டில் டைவர்ஸ் கேஸ்! த்ரிஷாவுடன் ஜோடியாக கல்யாணத்திற்கு வந்த விஜய்!
Vijay Trisha: கோர்ட்டில் டைவர்ஸ் கேஸ்! த்ரிஷாவுடன் ஜோடியாக கல்யாணத்திற்கு வந்த விஜய்!
IND vs ENG Semi Final: இந்தியா vs இங்கிலாந்து அரையிறுதி! இறுதிப்போட்டியில் யார்? கோப்பை வெல்லும் வாய்ப்பு யாருக்கு?
இந்தியா vs இங்கிலாந்து அரையிறுதி! இறுதிப்போட்டியில் யார்? கோப்பை வெல்லும் வாய்ப்பு யாருக்கு?
Vijay Trisha : ஜோடியாக வந்த விஜய் த்ரிஷா...தவெக தொண்டர்களின் ரியாக்‌ஷன் என்ன ?
Vijay Trisha : ஜோடியாக வந்த விஜய் த்ரிஷா...தவெக தொண்டர்களின் ரியாக்‌ஷன் என்ன ?
பெற்றோர்களே! குழந்தைகளுக்கு உடல் பருமன் பிரச்சினை! இந்தியாதான் 2வது இடம் - அதிர்ச்சி ரிப்போர்ட்
பெற்றோர்களே! குழந்தைகளுக்கு உடல் பருமன் பிரச்சினை! இந்தியாதான் 2வது இடம் - அதிர்ச்சி ரிப்போர்ட்
இன்பன் - இனியன்.. தொடரும் 4 தலைமுறை நட்பு!
இன்பன் - இனியன்.. தொடரும் 4 தலைமுறை நட்பு!" - அன்பில் மகேஸ் இல்ல விழாவில் முதல்வர் ஸ்டாலின் உருக்கம்!
Sani Peyarchi: ஜென்ம சனி, பாத சனி, விரய சனி என்ன செய்யும்? சம்பவம் செய்யப்போகும் சனிப்பெயர்ச்சி!
Sani Peyarchi: ஜென்ம சனி, பாத சனி, விரய சனி என்ன செய்யும்? சம்பவம் செய்யப்போகும் சனிப்பெயர்ச்சி!
நாங்குநேரி டூ இடைக்காட்டூர்: தொடரும் சாதிவெறித் தாக்குதல்கள்! முடங்கிக் கிடக்கிறதா திமுக அரசு? அன்புமணி காட்டம்!
நாங்குநேரி டூ இடைக்காட்டூர்: தொடரும் சாதிவெறித் தாக்குதல்கள்! முடங்கிக் கிடக்கிறதா திமுக அரசு? அன்புமணி காட்டம்!
Embed widget