TN By-Election: இடைத்தேர்தலுக்கு ரெடி.. ADMK MLA-க்களுக்கு வாய்ப்பு மறுத்த TVK? சொந்த பாய்ஸிற்கு ஜாக்பாட்..!
TN By-Election TVK: அதிமுகவில் இருந்து எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்த நான்கு பேரில் மூன்று பேருக்கு இடைத்தேர்தலில் வாய்ப்பளிக்க வேண்டாம் என ஆளுங்கட்சி முடிவெடுத்துள்ளதாம்.

TN By-Election TVK: அதிமுகவில் இருந்து எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்த நான்கு பேரில் ஒருவருக்கு மட்டுமே இடைத்தேர்தலில் வாய்ப்பளிக்க ஆளுங்கட்சி பரிசீலித்து வருகிறதாம்.
தமிழ்நாடு இடைத்தேர்தல்:
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றி பெற்ற முதலமைச்சர் விஜய், திருச்சி கிழக்கு தொகுதிக்கான தனது எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்தார். ஏதேனும் ஒரு தொகுதியின் பிரதிநிதியாக மட்டுமே சட்டசபைக்குள் நீடிக்க முடியும் என்பதால் அவர் இந்த முடிவை எடுத்தார். தொடர்ந்து அதிமுக சார்பில் மதுராந்தகம், தாராபுரம், பெருந்துறை மற்றும் அம்பாசமுத்திரம் ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள், தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். இதனால், ஒட்டுமொத்தமாக 5 தொகுதிகள் தற்போது காலியாக உள்ளன. இங்கு இடைத்தேர்தல் நடத்துவதற்கான பணிகள் தொடங்கியுள்ள நிலையில், அடுத்த மாதம் இதுதொடர்பான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னாள் MLA-க்களுக்கு வாய்ப்பு மறுத்த TVK?
பொதுதேர்தலின் போது மதுராந்தகம் தொகுதியில் வெற்றி பெற்ற மரகதம் குமாரவேல், தாராபுரம் தொகுதியில் வெற்றி பெற்ற சத்தியபாமா, பெருந்துறை தொகுதியில் வெற்றி பெற்ற ஜெயக்குமார் மற்றும் அம்பாசமுத்திரம் தொகுதியில் வெற்றி பெற்ற இசக்கி சுப்பையா ஆகியோருக்கே, இடைத்தேர்தலின் போது தவெக சார்பில் மீண்டும் வாய்ப்பளிக்கப்படும் என கூறப்பட்டு வந்தது. ஆனால், தற்போது பனையூர் தரப்பில் இருந்து வெளியாகியுள்ள தகவலின்படி, மேற்குறிப்பிடப்பட்ட நான்கு பேரில் மூவருக்கு இடைத்தேர்தலில் வாய்ப்பளிக்க சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவு எனவே கூறப்படுகிறது. குறிப்பாக தனிப்பட்ட செல்வாக்கு ஏதும் பெரிய அளவில் இல்லாத மரகதம் குமாரவேல், சத்தியபாமா மற்றும் ஜெயக்குமார் ஆகியோருக்கு இடைத்தேர்தலில் வாய்ப்பு வழங்கப்படபோவதில்லையாம். மாறாக சிறிது காலத்திற்குப் பிறகு அவர்களுக்கு ஏதேனும் வாரிய தலைவர்கள் பதவி வழங்கப்படுமாம். அதேநேரம், அம்பாசமுத்திரம் பகுதியில் தனக்கென தனி செல்வாக்கு கொண்டுள்ள இசக்கி சுப்பையா மட்டுமே இடைத்தேர்தலில் களமிறங்கக் கூடுமாம்.
திருச்சி கிழக்கு வேட்பாளர் யார்?
முதலமைச்சர் விஜய் போட்டியிட்டு வெற்றி பெற்ற திருச்சி கிழக்கு தொகுதியில், நடிகர் ராகவா லாரன்ஸ் அல்லது கு.ப. கிருஷ்ணனின் மகன் சிரஞ்சீவி ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்பளிக்கப்படலாம் என கூறப்படுகிறது. கிறிஸ்துவர்கள் அதிகம் உள்ள தொகுதி என்பதால் லாரன்ஸின் பெயரையும், பொதுத்தேர்தலின் போது விஜய்க்கான மாற்று வேட்பாளராக பரிந்துரைக்கப்பட்டு இருந்ததால் சிரஞ்சீவியின் பெயரும் தற்போது பரிசீலனையில் உள்ளதாம். இதுதொடர்பாக வரும் 11ம் தேதி முக்கிய அறிவிப்பு வெளியிட உள்ளதாக லாரன்ஸ் தெரிவித்துள்ளார். இதனால் அந்த தேதியில் திருச்சி கிழக்கு தொகுதியில் தவெகவின் வேட்பாளர் யார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தவெகவின் 3 வேட்பாளர்கள் யார்?
மற்றபடி மதுராந்தகம், தாராபுரம் மற்றும் பெருந்துறை ஆகிய தொகுதிகளில் தவெகவே நேரடியாக களமிறங்க உள்ளதாம். குறிப்பாக பொதுத்தேர்தலின் போது மதுராந்தகம் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்ட எழில் காத்ரின் எழில்மலை, பெருதுறை தொகுதியில் போட்டியிட்ட அருணாச்சலம், தாராபுரம் தொகுதியில் போட்டியிட்ட கௌரி சித்ரா ஆகியோரே மீண்டும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாம். இதனிடையே, இடைத்தேர்தலில் மதுராந்தகம் தொகுதியை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என விசிக கோரிக்கை விடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவிலேயே வெளியாகும் என கூறப்படுகிறது.
Before You Go
"அனாதையா நிக்கிறோம் வீட்டை இடிச்சா எங்க போவோம்" கள்ளக்குறிச்சியில் கதறி அழும் பெண்கள்
ட்ரெண்டிங் செய்திகள்























