TVK Vijay: All is Well.! ஒப்புதல் அளித்த ஆளுநர்; முதலமைச்சராக விஜய் பதவியேற்பது எப்போது.? வெளியான விவரங்கள்
TVK Vijay CM Swearing In: தவெகவிற்கு பெரும்பான்மையை விட கூடுதல் இடங்கள் கிடைத்துவிட்ட நிலையில், ஆளுநரை சந்தித்து ஒப்புதல் பெற்றார் விஜய். இதைத் தொடர்ந்து, அவரது பதவியேற்பு எப்போது என்பது குறித்து முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு அரசியலில், பெரும் குழப்பங்களுக்கு மத்தியில், ஒருவழியாக பெரும்பான்மையைவிட கூடுதலாகவே இடங்களை பெற்றுவிட்டது தமிழக வெற்றிக் கழகம். இதைத் தொடர்ந்து, ஆட்சி அமைக்க உரிமை கோரி ஆளுநரை சந்தித்த மாலையில் விஜய் புறப்பட்ட நிலையில், அனுமதி மறுக்கப்பட்டதால் பாதியிலேயே வீடு திரும்பினார் விஜய். ஆனால், சற்று நேரத்திலேயே மீண்டும் அழைக்கப்பட்டதால், ஆளுநரை சென்று சந்தித்தார் விஜய். அதைத் தொடர்ந்து, ஆளுநர் ஒப்புதல் அளித்த நிலையில், விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்பது எப்போது என்பது குறித்து முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. அது குறித்து இப்போது பார்க்கலாம்.
120 இடங்களை பெற்ற தமிழக வெற்றிக் கழகம்
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் 108 இடங்களில் வெற்றிபெற்று தனிப்பெரும் கட்சியாக விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் உருவெடுத்தது. அந்த அடிப்படையில், ஆளுநரை சந்தித்த விஜய், ஆட்சி அமைக்க அழைக்குமாறு கடிதம் வழங்கினார். ஆனால், ஆளுநர் அவரை அழைக்கவில்லை.
இதனிடையே, பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை பெற, திமுக கூட்டணி கட்சிகளிடம் விஜய் ஆதரவு கோரினார். அதைத் தொடர்ந்து, 5 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்ற காங்கிரஸ் உடனடியாக விஜய்யுடன் கூட்டணி சேர்வதாக அறிவித்து, திமுகவிற்கு அதிர்ச்சி அளித்தது.
தொடர்ந்து, சிபிஐ மற்றும் சிபிஎம் கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன. ஆனால், அவர்கள் திமுக கூட்டணியில் தொடர்வதாகவும், வெளியில் இருந்து தவெகவிற்கு ஆதரவு அளிப்பதாகவும் தெளிவுபடுத்தியுள்ளனர். இதனிடையே, விசிக மட்டும் தங்களது முடிவை கூறாமல் இரண்டு நாட்களாக இழுத்தடித்து வந்தது.
இந்நிலையில், சற்று முன்னர் தான் தங்களது ஆதரவு கடிதத்தை விசிக தவெகவிடம் வழங்கியது. அதோடு, புதிய திருப்பமாக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக்-ம் தவெகவிற்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்தது. இதையடுத்து, தவெகவிற்கு மொத்தம் 120 இடங்கள் கிடைத்துள்ளன.
4-வது முறையாக ஆளுநரை சந்தித்த விஜய்
தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில், தவெகவை தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு ஏற்கனவே மூன்று முறை ஆளுநரை விஜய் சந்தித்திருந்தார். ஆனால், பெரும்பான்மை இல்லாமல் அழைப்பு விடுக்க முடியாது என்று ஆளுநர் கூறிவிட்ட நிலையில், தற்போது அந்த பெரும்பான்மை கிடைத்துள்ளதால், 4-வது முறையாக ஆளுநரை சந்தித்து, ஆட்சி அமைக்க உரிமை கோரி விஜய் கடிதம் மற்றும் ஆதரவு எம்எல்ஏ-க்களின் கடிதங்களையும் வழங்கினார்.
பதவியேற்பு எப்போது.?
அதைத் தொடர்ந்து, ஆளுநர் அழைப்பு விடுத்த நிலையில், நாளை(ஞாயிறு) காலை 10 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, நாளை காலை 10 மணிக்கு நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் விழாவில், தமிழ்நாட்டின் முதலமைச்சராக C. ஜோசப் விஜய் பதவியேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு ஆளுநர் அர்லேகர் பதவிப் பிரமாணம் செய்து வைப்பார்.
விஜய்யுடன் நாளை, செங்கோட்டையன், புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல்குமார், அருண்ராஜ், வெங்கட்ரமணன் உள்ளிட்டோரும் நாளை பதவி ஏற்பார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.
Before You Go
DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
ட்ரெண்டிங் செய்திகள்





















