மேலும் அறிய

TN Politics: கரையப்போகும் மூன்றாவது கட்சி எது? கம்யூ., காங்., வரிசையில் அதிமுகவா? TVK Vs DMK தானா?

TN Politics: தமிழ்நாடு தேர்தல் வரலாற்றில் ஒவ்வொருமுறை புதிய கட்சி ஆட்சியை பிடிக்கும்போதும், ஆண்ட கட்சி ஒன்று கரைந்து போவது அதிர்ச்சியளிக்கும் மரபாக உள்ளது.

TN Politics: தமிழ்நாடு தேர்தல் வரலாற்றில் 60 ஆண்டுகளுக்குப் பிறகு திராவிட கட்சிகள் இல்லாத ஒரு கட்சி ஆட்சி அமைத்துள்ளது.

828 நாட்களில் ஆட்சிக்கு வந்த தவெக:

கடந்த 27 மாதங்கள் சரியாக சொல்லப்போனால் 828 நாட்களுக்கு முன்பாக நடிகர் விஜயால் தொடங்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகம், இன்று ஆளுங்கட்சியாக உருவெடுத்து தமிழ்நாட்டின் 14வது முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றுள்ளார். இதன் மூலம் கடந்த அரைநூற்றாண்டாக தமிழ்நாட்டை ஆண்டு வந்த திராவிட கட்சிகள் இல்லாத, முதல் அரசு தமிழ்நாட்டில் உருவெடுத்துள்ளது. இந்த புதிய வரலாறானது சில அரசியல் கட்சிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. காரணம், தமிழ்நாட்டில் ஒவ்வொரு முறை ஒரு புதிய அரசியல்கட்சி உருவெடுத்து ஆளுங்கட்சியாக மாறும்போதும், அதுநாள் வரை ஆட்சி அதிகாரத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்த இரண்டு கட்சிகளில் ஒன்று கரைந்து தேய்ந்துபோகிறது. அந்த நிலைமை இந்த நூற்றாண்டில் யாருக்கு வரப்போகிறது என்பதே தற்போது மிகப்பெரும் கேள்வியாக உள்ளது.

காங்கிரஸ் Vs கம்யூனிஸ்ட்:

திராவிட கட்சிகளின் எழுச்சிக்கு முன்பாக தமிழ்நாட்டின் அரசியல் களம் என்பது காங்கிரஸ் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் என்ற இருமுனை போட்டியையே கொண்டிருந்தது. சுதந்திரத்திற்குப் பிறகு 1952ம் ஆண்டு நடைபெற்ற முதல் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் 152 இடங்களை வெற்றி பெற்றது. அதேநேரம், இந்திய கம்யூனிஸ்ட் 62 இடங்களை வெற்றி பெற்று இருந்தது.  5 ஆண்டுகள் கழித்து நடைபெற்ற தேர்தலில் இடதுசாரிகள் வென்ற இடங்களின் எண்ணிக்கை 4 ஆக குறைந்தது. அந்த தேர்தலில் முதல்முறையாக களமிறங்கிய திமுக 15 இடங்களில் வென்றது. தொடர்ந்து 1962ம் ஆண்டு காங்கிரஸ் 139 இடங்களில் வெற்றி பெற, திமுக 50 இடங்களை கைப்பற்றியது. இந்திய கம்யூனிஸ்ட் வெறும் 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. 1967ம் ஆண்டு தேர்தலின்போது இடதுசாரிகள் இரண்டாக உடைந்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திமுக கூட்டணியில் இடம்பெற்று 11 இடங்களில் வென்றது. தனித்து போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் வெறும் 2 இடங்களில் மட்டுமே வென்றது. அந்த தேர்தலில் திமுக ஆளுங்கட்சியாக உருவெடுக்க, அதுநாள் வரை காங்கிரஸ் Vs கம்யூனிஸ்ட் என்று இருந்த தேர்தல் களம் திமுக Vs காங்கிரஸ் ஆக உருமாற்றம் கண்டது.

திமுக Vs காங்கிரஸ்

1967ம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, அதுநாள் வரை ஆளுங்கட்சியாக இருந்து வந்த காங்கிஸ் எதிர்க்கட்சி நிலைக்கு தள்ளப்பட்டது. 1976ம் ஆண்டு வரை திமுகவை வீழ்த்தி மீண்டும் ஆளுங்கட்சியாகவே உருவெடுக்க முடியவில்லை. இதனால் திமுக Vs காங்கிரஸ் என்ற இருமுனை போட்டி நிலவிய நிலையில், எம்.ஜி.ஆர்., தொடங்கிய அதிமுக எனும் கட்சி 1977ம் ஆண்டு எதிர்கொண்ட முதல் தேர்தலிலேயே ஆட்சி அமைத்தது. அதன் பிறகு தமிழ்நாடு அரசியல் ஒட்டுமொத்தமாக திராவிடமயமானது. திமுக மற்றும் அதிமுக என்ற இருமுனை போட்டி பற்றி எரிந்ததில், காங்கிரஸ் கட்சி கரைந்தேபோனது. 

அதிமுக Vs திமுக:

60 ஆண்டுகளாக ஆட்சியில் பங்கு என்ற நிலையை கூட காங்கிரசால் எட்டமுடியாமல் போனது. எம்.ஜி.ஆர்., மறையும் வரை முதலமைச்சராகவே இருந்து அதிமுகவை ஆளுங்கட்சியாக நிலைநாட்டினார். அதன் பிறகு கருணாநிதி மற்றும் ஜெயலலிதா ஆகியோர் மாறி மாறி முதலமைச்சர் இருக்கையை அலங்கரித்தனர். இதனிடையே எத்தனையோ நடிகர்கள் கட்சி தொடங்கி காணாமல் போனார்கள். தேசிய கட்சியான காங்கிரசும் மாநிலக் கட்சிகளை அண்டி செயல்பட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது. இதனால், திராவிட கட்சிகளை தாண்டி எந்தவொரு கட்சியாலும் தமிழ்நாட்டில் ஆதிக்கம் செலுத்த முடியாத என்ற வலுவான மற்றும் தீவிரமான பிம்பத்தை ஏற்படுத்தி இருந்தது. அந்த நிலையை தான், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் உடைத்து எறிந்துள்ளார். அவரது இந்த எழுச்சியால் கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் வரிசையில் கரையப்போகும் கட்சி எது? என்பதே இப்போது கேள்வியாக உள்ளது.

திமுக Vs தவெக என மாறும் களம்?

2026 தேர்தலில் விஜய் வென்றதன் மூலம் களம் தவெக Vs திமுக என மாற்றம் கண்டுள்ளது. இதனை அப்படியே வலுவாக பிடித்து இருபெரும் திராவிட கட்சிகளுக்கும் வலுவான மாற்றாக தவெகவை விஜய் கட்டமைப்பாரா? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். இதனிடையே, பிரதான எதிர்க்கட்சியாக இருந்து வந்த அதிமுக மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. தொடர் தோல்விகளால் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீதும் கட்சி நிர்வாகிகள் இடையே கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இதனால், எம்.எல்.ஏக்கள் இரண்டு பிரிவுகளாகவும் இயங்குவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இருந்து மீண்டு வந்து மீண்டும் திமுக Vs அதிமுக என்ற நிலையை எடப்பாடி எட்டுவாரா? அல்லது கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் பாணியில் அதிமுக கரைந்துபோகுமா? என்பதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Vijay: கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாள்; முக்கிய பதிவை வெளியிட்ட முதல்வர் விஜய்!
CM Vijay: கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாள்; முக்கிய பதிவை வெளியிட்ட முதல்வர் விஜய்!
TMC Rift: ”கட்சிக்கு நீங்க தான் தலைவர், ஆனா சட்டமன்றத்த நாங்க பாத்துக்குறோம்” மம்தாவுக்கு ஆர்டர் போடும் MLAக்கள்
”கட்சிக்கு நீங்க தான் தலைவர், ஆனா சட்டமன்றத்த நாங்க பாத்துக்குறோம்” மம்தாவுக்கு ஆர்டர் போடும் MLAக்கள்
கலைஞர் படம் ஏன் அகற்றப்பட்டது ? கலைஞர் இல்லாமல் தமிழ் உண்டா ? – வைரமுத்து ஆவேசம்
கலைஞர் படம் ஏன் அகற்றப்பட்டது ? கலைஞர் இல்லாமல் தமிழ் உண்டா ? – வைரமுத்து ஆவேசம்
தகுதி இருந்தும் அங்கீகாரமில்லை: மீன்வளப் பல்கலைக்கழகத்தின் மீது ராமதாஸ் அதிருப்தி!
தகுதி இருந்தும் அங்கீகாரமில்லை: மீன்வளப் பல்கலைக்கழகத்தின் மீது ராமதாஸ் அதிருப்தி!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”
Nara Lokesh on Keerathana | Troll-ல் சிக்கிய கீர்த்தனா! சந்திரபாபு மகன் Support

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாள்; முக்கிய பதிவை வெளியிட்ட முதல்வர் விஜய்!
CM Vijay: கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாள்; முக்கிய பதிவை வெளியிட்ட முதல்வர் விஜய்!
ஸ்கூலே முடிக்கலை, அதுக்குள்ளயா? ஐஐஎம்மில் வைபவ் மாடல்! ஐபிஎல்லில் அசத்தும் சூர்யவன்ஷி!
ஸ்கூலே முடிக்கலை, அதுக்குள்ளயா? ஐஐஎம்மில் வைபவ் மாடல்! ஐபிஎல்லில் அசத்தும் சூர்யவன்ஷி!
TMC Rift: ”கட்சிக்கு நீங்க தான் தலைவர், ஆனா சட்டமன்றத்த நாங்க பாத்துக்குறோம்” மம்தாவுக்கு ஆர்டர் போடும் MLAக்கள்
”கட்சிக்கு நீங்க தான் தலைவர், ஆனா சட்டமன்றத்த நாங்க பாத்துக்குறோம்” மம்தாவுக்கு ஆர்டர் போடும் MLAக்கள்
Central Minister on Aviation: 2 ஆண்டுகளில் மேலும் பல விமான நிறுவனங்கள் வர வாய்ப்பு; ஏபிபி மாநாட்டில் மத்திய அமைச்சர் தகவல்
2 ஆண்டுகளில் மேலும் பல விமான நிறுவனங்கள் வர வாய்ப்பு; ஏபிபி மாநாட்டில் மத்திய அமைச்சர் தகவல்
Central Minister on Hormuz: ஹார்முஸில் இப்போது ஒரே ஒரு இந்திய கப்பல் தான் வருகிறது.! ABP மாநாட்டில் மத்திய அமைச்சர் ஷாக் தகவல்
ஹார்முஸில் இப்போது ஒரே ஒரு இந்திய கப்பல் தான் வருகிறது.! ABP மாநாட்டில் மத்திய அமைச்சர் ஷாக் தகவல்
Cheapest 360 Degree Camera Cars: காஸ்ட்லி SUV-க்களுக்கே டஃப்.! வெறும் ரூ.6.99 லட்சம் பட்ஜெட்லயே 360 டிகிரி கேமரா.! டாப் 5 கார்கள் லிஸ்ட்
காஸ்ட்லி SUV-க்களுக்கே டஃப்.! வெறும் ரூ.6.99 லட்சம் பட்ஜெட்லயே 360 டிகிரி கேமரா.! டாப் 5 கார்கள் லிஸ்ட்
Trump New Tariff: மீண்டும் வரி ஆட்டத்தை தொடங்கிய ட்ரம்ப்; 60 நாடுகள் மீது கூடுதலாக 12.5%; US பரிந்துரையால் அதிர்ச்சி
மீண்டும் வரி ஆட்டத்தை தொடங்கிய ட்ரம்ப்; 60 நாடுகள் மீது கூடுதலாக 12.5%; US பரிந்துரையால் அதிர்ச்சி
ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.! யார் யார் எந்த மாவட்டத்திற்கு.? இதோ முழு லிஸ்ட்
ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.! யார் யார் எந்த மாவட்டத்திற்கு.? இதோ முழு லிஸ்ட்
Embed widget