மேலும் அறிய

TVK Vijay: ”உங்க விஜய் நா வரேன்" திருச்சியில் மக்கள் சந்திப்பு.. நேரம் குறித்த விஜய்

தமிழ்நாட்டு அரசியலிலேயே இதுவரை இல்லாத வகையில், எந்த அரசியல் தலைவருக்கும் செய்யாத வகையில், மக்கள் சந்திப்பு சார்ந்த பாதுகாப்பு நிபந்தனைகளை நம் கழகத்தின மீது மட்டும் காவல்துறை விதித்துள்ளது.

தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் நாளை முதல் முறையாக தேர்தல் பரப்புரையை தொடங்க உள்ள எந்த அரசியல் கட்சி தலைவருக்கும் தராத நிபந்தனைகளை காவல்துறையினர் விதித்துள்ளதாக விஜய் தெரிவித்துள்ளார்.

விஜய் அறிக்கை

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில். பொய்யான வாக்குறுதிகளைத் தந்து மக்களை ஏமாற்றி வரும் வெற்று விளம்பர மாடல் தி.மு.க. அரசின் மீதான நம்பிக்கையை மக்கள் முற்றிலும் இழந்து விட்டனர். தங்களுக்கென்றே உண்மையான தோழமை மற்றும் பாரபட்சமற்றத் தன்மையுடன் கூடிய ஓர் அரசு அமைய வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.

மக்கள் சந்திப்புப் பயணம்

மக்களின் மனமறிந்து அரசியல் களம் காணும் தமிழக வெற்றிக் கழகம். மக்களுக்காக 'மனசாட்சி உள்ள மக்களாட்சி'யை அமைக்கும் உன்னத லட்சிய நோக்குடன் களமாடி வருகிறது. மக்களுடன் மக்களாக இணைந்து நிற்கும் "வாகை சூடும் வரலாறு திரும்புகிறது; உங்க விஜய் நா வரேன்" என்கிற நமது பயணம்தான் தமிழகம் முழுவதுமான மக்கள் சந்திப்புப் பயணம்.’

நேரம் குறித்த விஜய்

நாளை (13.09.2025) காலை 10.35 மணிக்கு திருச்சி காந்தி மார்க்கெட் காவல் சரகம் மரக்கடை எம்.ஜி.ஆர். சிலை அருகே தொடங்கி அடுத்தடுத்து, நமது மதுரை மாநாட்டில் சொன்னதுபோலவே, என் குடும்ப உறவுகளாகிய உங்களைச் சந்திக்க, உங்களுக்காகவே குரல் கொடுக்க உங்கள் விஜய், நம் கொள்கைத் தலைவர்கள் தந்தை பெரியார். பெருந்தலைவர் காமராஜர், அண்ணல் அம்பேத்கர். வீரமங்கை வேலுநாச்சியார். மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள் ஆகியோரின் வழியில், "மக்களிடம் செல்" என்ற பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் ஆணையை மானசீகமாக ஏற்று. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் வருகிறேன். ஓர் அரசியல் கட்சியின் தலைவராக, நாம் ஜனநாயக முறையில் மக்களைச் சந்திக்க விழைகிறோம். 

யாருக்கும் இல்லாத நிபந்தனை

இந்நிலையில், தமிழ்நாட்டு அரசியலிலேயே இதுவரை இல்லாத வகையில், எந்த அரசியல் தலைவருக்கும் செய்யாத வகையில், மக்கள் சந்திப்பு சார்ந்த பாதுகாப்பு நிபந்தனைகளை நம் கழகத்தின மீது மட்டும் காவல்துறை விதித்துள்ளது. இப்படி பாதுகாப்பு சார்ந்த தமது பொறுப்பைத் தட்டிக் கழிக்காமல், அரசியல் நிலைப்பாடுகளைக் கடந்து தார்மீகக் கடமையோடு நமது கழகத் தோழர்களுக்கும் பொதுமக்களுக்கும் பாதுகாப்பு வழங்குவதை இந்த அரசும் காவல்துறையை வழிநடத்தும் தமிழ்நாட்டு முதலமைச்சரும் உறுதி செய்ய வேண்டும்.

ராணுவக் கட்டுப்பாட்டுடன் பின்பற்றுதல்

கழகத் தோழர்களாகிய நீங்களும் நமது பொது மக்கள் சந்திப்பிற்கு ஏதுவாக, அந்தந்த மாவட்டங்களில் பங்கு பெற்றும் சமூக வலைத்தளங்கள் மற்றும் தொலைக்காட்சி நேரலைகளில் கண்டும், ஏற்கெனவே பொதுமக்களுக்கு இடையூறின்றி மக்கள் சந்திப்புகளை நடத்த நாம் தேர்ந்தெடுத்துள்ள நாட்களில் அவர்களைச் சந்திக்க ஏதுவாகப் பாதுகாவலர்கள். தன்னார்வலர்கள் மற்றும் காவல்துறைக்கு உறுதுணையாகக் காவல்துறை அளித்துள்ள வழிமுறைகளைக் கடமை, கண்ணியம் மற்றும் ராணுவக் கட்டுப்பாட்டுடன் பின்பற்றி, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களான மாவட்டப் பொறுப்பாளர்களுக்கு உறுதுணையாக இருந்து உதவ வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.'

இறைவன் அருளால், இயற்கையின் துணையால் உங்கள் அனைவரின் பேரன்பால் நம்முடைய இந்த மக்கள் சந்திப்புப் பயணம் மகத்தான வெற்றி பெறும் என்கிற அசைக்கமுடியாத நம்பிக்கையுடன் "உங்க விஜய். நான் வரேன்" என்று தனது அறிக்கையில் விஜய் குறிப்பிட்டுள்ளார்.

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

Nainar Nagendran : அமைச்சரவையில் இருந்து மரிய வில்சனை நீக்குங்க.! தவெக அரசுக்கு எதிராக அடித்து ஆடும் நயினார் நாகேந்திரன்
அமைச்சரவையில் இருந்து மரிய வில்சனை நீக்குங்க.! தவெக அரசுக்கு எதிராக அடித்து ஆடும் நயினார் நாகேந்திரன்
உதயநிதியை விடாமல் குறிவைக்கும் தவெக.! உடனே ஆக்‌ஷன் எடுக்க பறந்த அதிரடி உத்தரவு- ஷாக்கில் திமுக
உதயநிதியை விடாமல் குறிவைக்கும் தவெக.! உடனே ஆக்‌ஷன் எடுக்க பறந்த அதிரடி உத்தரவு- ஷாக்கில் திமுக
ADMK To TVK : தவெகவிற்கு தாவ 5 அதிமுக MLA-க்கள் ரெடி.? இபிஎஸ்க்கு ஷாக் கொடுக்கும் விஜய்- நடப்பது என்ன.?
தவெகவிற்கு தாவ 5 அதிமுக MLA-க்கள் ரெடி.? இபிஎஸ்க்கு ஷாக் கொடுக்கும் விஜய்- நடப்பது என்ன.?
"அதிமுகவிற்கு உண்மையிலேயே அக்கறை இருந்தா இதப் பண்ணட்டும்!" எம்பி சுதா..

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
உதயநிதியை விடாமல் குறிவைக்கும் தவெக.! உடனே ஆக்‌ஷன் எடுக்க பறந்த அதிரடி உத்தரவு- ஷாக்கில் திமுக
உதயநிதியை விடாமல் குறிவைக்கும் தவெக.! உடனே ஆக்‌ஷன் எடுக்க பறந்த அதிரடி உத்தரவு- ஷாக்கில் திமுக
ADMK To TVK : தவெகவிற்கு தாவ 5 அதிமுக MLA-க்கள் ரெடி.? இபிஎஸ்க்கு ஷாக் கொடுக்கும் விஜய்- நடப்பது என்ன.?
தவெகவிற்கு தாவ 5 அதிமுக MLA-க்கள் ரெடி.? இபிஎஸ்க்கு ஷாக் கொடுக்கும் விஜய்- நடப்பது என்ன.?
Leema Rose Martin: என் கணவர் தான் கிடைச்சாரா? .. சும்மா சும்மா இழுக்குறீங்க.. திமுக மீது லீமா ரோஸ் டென்ஷன்!
Leema Rose Martin: என் கணவர் தான் கிடைச்சாரா? .. சும்மா சும்மா இழுக்குறீங்க.. திமுக மீது லீமா ரோஸ் டென்ஷன்!
Tenkasi: சைடிஷ் வாங்க லேட் ஆனதால் ஆத்திரம்.. இளைஞர் வெட்டிக்கொலை.. 3 சிறுவர்கள் கைது!
Tenkasi: சைடிஷ் வாங்க லேட் ஆனதால் ஆத்திரம்.. இளைஞர் வெட்டிக்கொலை.. 3 சிறுவர்கள் கைது!
இங்க இருந்த மலையை காணோம் சார்.. சட்டசபையில் பட்டியல் போட்ட அமைச்சர் பிரபு! சுரண்டிட்டாங்க போலயே!
இங்க இருந்த மலையை காணோம் சார்.. சட்டசபையில் பட்டியல் போட்ட அமைச்சர் பிரபு! சுரண்டிட்டாங்க போலயே!
Gold and silver rate today : ஓணம் பண்டிகையில் தங்கம் விலையில் ஜாக்பாட்டா.!! இன்று தங்கம், வெள்ளி விலை என்ன தெரியுமா.?
ஓணம் பண்டிகையில் தங்கம் விலையில் ஜாக்பாட்டா.!! இன்று தங்கம், வெள்ளி விலை என்ன தெரியுமா.?
Nainar Nagendran : அமைச்சரவையில் இருந்து மரிய வில்சனை நீக்குங்க.! தவெக அரசுக்கு எதிராக அடித்து ஆடும் நயினார் நாகேந்திரன்
அமைச்சரவையில் இருந்து மரிய வில்சனை நீக்குங்க.! தவெக அரசுக்கு எதிராக அடித்து ஆடும் நயினார் நாகேந்திரன்
RATION CARD : ரேஷன் கார்டில் பெயரை தூக்க போறாங்க.! இந்த சான்ஸை மிஸ் பண்ணாதீங்க- வெளியான முக்கிய அறிவிப்பு
ரேஷன் கார்டில் பெயரை தூக்க போறாங்க.! இந்த சான்ஸை மிஸ் பண்ணாதீங்க- வெளியான முக்கிய அறிவிப்பு
Embed widget