மேலும் அறிய

TVK Vijay: காங்கிரசுக்கு தூக்கிக் கொடுத்தது ஏன்? திமுக இருக்கக் கூடாது, டார்கெட் 2029? தவெகவின் திட்டம் என்ன?

TVK Vijay Rajyasabha: மாநிலங்களவை உறுப்பினர் பதவி மூலம் நாடாளுமன்றத்திற்குள் நுழையும் முதல் வாய்ப்பை, காங்கிரசுக்கு தவெக தலைவர் விஜய் விட்டுக்கொடுத்ததற்கு பின்னாள் பல அரசியல் காரணங்கள் நிலவுகிறதாம்.

TVK Vijay Rajyasabha:  மாநிலங்களவை உறுப்பினர் பதவியை காங்கிரசுக்கு ஏன் தவெக விட்டுக் கொடுத்தது என்பது தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.

காங்கிரஸ் மீது குவியும் விமர்சனங்கள்:

சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக திமுக கூட்டணியில் நீடித்து, வெறும் 18 எம்.எல்.ஏக்களை மட்டுமே வைத்து இருந்தாலும், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை காங்கிரஸ் வசமாக்கியது. தேர்தலுக்கு பிறகு கூட்டணியில் இருந்து விலகி தவெக உடன் சேர்ந்து ஆட்சி அதிகாரத்தில் பங்கு பெற்றது. அதாவது 60 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு சார்பில் காலியாக உள்ள ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை பெறும் வாய்ப்பு ஆளுங்கட்சியான தவெகவிற்கு கிடைத்தது. ஆனால், அந்தனை வெறும் 5 எம்.எல்.ஏக்களை மட்டுமே கொண்டுள்ள காங்கிரஸ் கட்சிக்கு விஜய் விட்டுக் கொடுத்துள்ளார். இதன் மூலம், பெரிய உழைப்பு எதுவுமே இன்றி 3 மாதங்களில் 2 மாநிலங்களவை உறுப்பினர் மற்றும் 2 அமைச்சர் பதவியை பெற்று காங்கிரஸ் சுகம் காண்பதாக கடும் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.

திமுக நெருக்கத்தை விரும்பாத தவெக?

தவெக தலைவர் விஜயை நேற்று தமிழ்நாட்டிற்கான காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் க்ரிஷ் சோடங்கர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். பிறகு செய்தியாளர்களை சந்திக்கையில், மாநிலங்களவை உறுப்பினர் பதவி தொடர்பாக முதலமைச்சர் உரிய முடிவெடுப்பார் என பதிலளித்தார். இந்தியா கூட்டணியில் திமுக தொடர்கிறதா? என்ற கேள்விக்கு, “தேசிய அளவிலான அந்த கூட்டணியில் இப்போதும் திமுக தொடர்கிறது. ஏதேனும் மாற்றம் இருந்தால் முறைப்படி அறிவிக்கப்படும்”என பதிலளித்தார். ஆனால், இதனை தவெக தலைமை விரும்பவில்லையாம். இந்தியா கூட்டணியில் தங்களுக்கான இடத்தை உறுதி செய்யவே மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ஆளுங்கட்சி விட்டுக்கொடுத்துள்ளதாம். 

தீவிர ஆலோசனைக்குப் பிறகே முடிவு

மாநிலங்களவைக்குள் நுழையும் முதல் வாய்ப்பையே ஏன் காங்கிரசுக்கு விட்டுக் கொடுக்க வேண்டும், லொயோலா மணி மற்றும் சம்பத் போன்ற பட்டியல் சமூத்தை சேர்ந்தவர்களை டெல்லிக்கு அனுப்பலாமே என்பது குறித்தும் பனையூரில் தீவிர ஆலோசனைகளும், விவாதங்களும் முன்னெடுக்கப்பட்டனவாம். இதனிடையே, தமிழ்நாட்டில் இல்லாத காங்கிரசுக்கு அமைச்சரவையில் இடம் கொடுத்து தவெக சார்பில் வளர்த்து விடுவதை பாஜக மேலிடம் விரும்பவில்லையாம். இதன் காரணமாகவே அமித் ஷா உள்ளிட்டோர் விஜயை சந்திக்கவும் நேரம் ஒதுக்கவில்லையாம். இதனால் காங்கிரசுக்கு ராஜ்யசபா உறுப்பினர் பதவியை வழங்கலாமா? வேண்டாமா? எனவும் விவாதித்துள்ளனர். 

தவெகவின் டார்கெட் 2029

இதனிடையே, 2029 நாடாளுமன்ற தேர்தலில் தேசிய அளவில் முக்கியத்துவம் பெற வேண்டும் எனவும், அதற்கு இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்க வேண்டியது அவசியம் என்றும் தவெக விரும்புகிறதாம். ஆனால், அந்த கூட்டணியில் திமுக தொடர்ந்தால் தங்களுக்கான முக்கியத்துவம் குறையும் எனவும் கருதுகிறதாம். இதற்காகவே காங்கிரசுக்கு அந்த மாநிலங்களவை உறுப்பினர் பதவியை கொடுத்து, எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் தங்களுக்கான இடத்தை உறுதி செய்யும் நடவடிக்கைகளை எடுத்துள்ளதாம். அதோடு, தற்போதைய சூழலில் தங்களுக்காக டெல்லியில் குரல் கொடுக்க காங்கிரஸின் ஆதரவு தேவை எனவும் கருதுகிறதாம். 

இதையும் படியுங்கள்:TNEB-யில் திருடப்பட்ட 18 ஹார்ட் டிஸ்குகள் - டெண்டர், கொள்முதல், விசாரணை ஆவணங்கள் எங்கே? சிக்குவது யார்?

அதோடு, பா. சிதம்பரம், தர்மர், கிரிராஜன், கல்யாண சுந்தரம், ராஜேஷ்குமார் மற்றும் புதியதாக நியமிக்கப்பட உள்ள காங்கிரஸ் எம்.பி., ஆகியோரின் பதவிக்காலம் வரும் 2028ம் ஆண்டுடன் முடிவடைய உள்ளது. அப்போது குறைந்தபட்சம் 3 எம்.பிக்கள் பதவியை தவெகவால் பெற முடியும். அதன் மூலம் 2029ம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கு முன்னதாகவே, நாடாளுமன்றத்திற்குள் நுழையலாம் என தவெக திட்டமிட்டுள்ளதாம்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

விஜய்க்கு வில்லனாக மருமகனை களமிறக்கும் ரஜினிகாந்த்? ஆஃப் ஸ்கிரினில் ஆடப்போகும் சூப்பர்ஸ்டார்!
விஜய்க்கு வில்லனாக மருமகனை களமிறக்கும் ரஜினிகாந்த்? ஆஃப் ஸ்கிரினில் ஆடப்போகும் சூப்பர்ஸ்டார்!
வயிற்றில் உள்ள பிள்ளையை வெட்டி எடுத்தது போல அண்ணாமலை மாற்றினார்கள் - பாஜக முன்னாள் நிர்வாகிகள் ஆவேசம் !
வயிற்றில் உள்ள பிள்ளையை வெட்டி எடுத்தது போல அண்ணாமலை மாற்றினார்கள் - பாஜக முன்னாள் நிர்வாகிகள் ஆவேசம் !
ஆகஸ்ட் 15 வரைதான் டைம்! நயினார் நாகேந்திரனுக்கு கெடு விதித்த பாஜக நிர்வாகிகள் - கமலாலயத்தில் நடந்தது என்ன?
ஆகஸ்ட் 15 வரைதான் டைம்! நயினார் நாகேந்திரனுக்கு கெடு விதித்த பாஜக நிர்வாகிகள் - கமலாலயத்தில் நடந்தது என்ன?
Power Cut DMK Protest : விஜய் அரசுக்கு செக்.! திமுக கையில் எடுத்த முக்கிய ஆயுதம்- ஸ்டாலினின் மெகா பிளான்
விஜய் அரசுக்கு செக்.! திமுக கையில் எடுத்த முக்கிய ஆயுதம்- ஸ்டாலினின் மெகா பிளான்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Raghava Lawrence | TARGET விஜய்!TEAM அண்ணாமலை?லாரன்ஸ் மெகா ட்விஸ்ட்
Tindivanam Murder: தீர்த்துக்கட்ட சொன்ன தாய்..திட்டம் போட்டு முடித்த மகன்!குப்பை கொட்டியதால் கொடூரம்
Rahul gandhi | ”காலை வாரி விடக்கூடாது! காங்கிரஸை விமர்சிக்காதீங்க” நேரடியாகவே சொன்ன ராகுல்
Nellai brother murdered sister | காதலித்த அக்காவை வெட்டி கொலை செய்த தம்பி! நெல்லையில் பகீர் சம்பவம்
C Vijayabaskar: திமுக போகும் விஜயபாஸ்கர்? கட்சியில் முக்கிய பொறுப்பு ஸ்டாலின் கணக்கு என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Lance Naik Meenatchi Sundaram : ’முகத்திலும் தோளிலும் குண்டு’ தீவிரவாதிகளை துவம்சம் செய்த தமிழர் – யார் இந்த மீனாட்சி சுந்தரம்..?
’முகத்திலும் தோளிலும் குண்டு’ தீவிரவாதிகளை துவம்சம் செய்த தமிழர்..!
விஜய்க்கு வில்லனாக மருமகனை களமிறக்கும் ரஜினிகாந்த்? ஆஃப் ஸ்கிரினில் ஆடப்போகும் சூப்பர்ஸ்டார்!
விஜய்க்கு வில்லனாக மருமகனை களமிறக்கும் ரஜினிகாந்த்? ஆஃப் ஸ்கிரினில் ஆடப்போகும் சூப்பர்ஸ்டார்!
விரைவில் வெளியாகும் சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்; காண்பது எப்படி?
விரைவில் வெளியாகும் சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்; காண்பது எப்படி?
டெல்லியில் சிஎம் விஜய்; தமிழக உரிமைகளை வென்றெடுக்கஎன்ன செய்யணும்? 8 முக்கிய கோரிக்கைகள்
டெல்லியில் சிஎம் விஜய்; தமிழக உரிமைகளை வென்றெடுக்கஎன்ன செய்யணும்? 8 முக்கிய கோரிக்கைகள்
ஆகஸ்ட் 15 வரைதான் டைம்! நயினார் நாகேந்திரனுக்கு கெடு விதித்த பாஜக நிர்வாகிகள் - கமலாலயத்தில் நடந்தது என்ன?
ஆகஸ்ட் 15 வரைதான் டைம்! நயினார் நாகேந்திரனுக்கு கெடு விதித்த பாஜக நிர்வாகிகள் - கமலாலயத்தில் நடந்தது என்ன?
Rasi Palan Alert : ‘உங்க ராசி இதுவா?’ 5 ராசிக்கு எச்சரிக்கை – அலெர்ட் செய்யும் கிரகங்கள்..!
‘உங்க ராசி இதுவா?’ 5 ராசிக்கு எச்சரிக்கை – அலெர்ட் செய்யும் கிரகங்கள்..!
FIFA World Cup 2026: நாளை உலகக்கோப்பை திருவிழா ஸ்டார்ட்! கண்டிப்பா தெரிஞ்சுக்க வேண்டிய விஷயமுங்கோ இதெல்லாம்!
FIFA World Cup 2026: நாளை உலகக்கோப்பை திருவிழா ஸ்டார்ட்! கண்டிப்பா தெரிஞ்சுக்க வேண்டிய விஷயமுங்கோ இதெல்லாம்!
DMK Reshuffle : ’துரைமுருகன் ராஜினாமா?’ திமுகவின் புதிய பொதுச்செயலாளர் யார்..?
’துரைமுருகன் ராஜினாமா?’ திமுகவின் புதிய பொதுச்செயலாளர் யார்..?
Embed widget