பிங்க் பஸ் வேண்டும் - மகளிருக்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்த தவெகவினர்...!
மகளிர் இலவச பேருந்து சேவை கோரி தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரகத்தில் மனு அளித்துள்ளனர்.

தமிழ்நாடு அரசின் மகளிர் இலவச பேருந்து சேவை வழங்க கோரி தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரகத்தில் மனு அளித்துள்ளனர்.
மகளிர் விடியல் பயணம் திட்டம்
தமிழ்நாடு அரசின் பேருந்துகளில் "மகளிர் விடியல் பயணம்" என்ற பெயரில் பெண்கள் கட்டணமில்லாமல் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 2021 -ம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அதனைத் தொடர்ந்து மு.க.ஸ்டாலின் தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றார். அவர் பொறுப்பேற்ற உடன் கையெழுத்திட்ட ஐந்து கோப்புகளில் ஒன்று மகளிர் இலவச பேருந்து பயண திட்டமும் ஒன்று.

மகளிர் மத்தியில் வரவேற்பு
2021 ஆண்டு மே 7-ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டு, அடுத்த நாளான மே 8-ம் தேதியே இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தது. அன்றைய தினம் முதல் அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் இயங்கும் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் மகளிருக்கு இலவச பேருந்து பயணம் வழங்கப்பட்டு வருகிறது. தொடக்கத்தில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தாலும், பின்னர் இந்த திட்டத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனால் தமிழ்நாடு முழுவதும் லட்சக்கணக்கான மகளிர் நாள்தோறும் இந்த திட்டத்தை பயன்படுத்தி பயனடைந்து வருகின்றனர்.

ஆய்வு முடிவு
தமிழ்நாடு மாநிலத் திட்டக்குழு, திருப்பூர் (தொழில்), மதுரை (வர்த்தகம்) மற்றும் நாகப்பட்டினம் (வேளாண்மை) ஆகிய மாவட்டங்களில் மேற்கொண்ட ஆய்வுகளின் மூலம், ஒவ்வொரு மகளிர் பயணியும் அவர்களது மாதாந்திரச் செலவில் சுமார் 888 ரூபாய் வரை இந்திட்டத்தால் சேமிக்கின்றனர் என்பது தெரிய வந்துள்ளது. இந்த மாபெரும் திட்டத்தில் 31.10.2024 வரையில் மட்டும் 570.86 கோடி பயணம் மகளிரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒரு நாளில் 57.07 இலட்சம் மகளிர் பயணம் மேற்கொள்வதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

தவெகவினர் கோரிக்கை மனு
இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறையில் இருந்து சேந்தங்குடி, நாகங்குடி, திருநன்றியூர், ஆத்துக்குடி, கதிராமங்கலம், வைத்தீஸ்வரன் கோயில், குன்றத்தூர், பாகசாலை வழியாக தேத்தாக்குடி செல்லும் மார்க்கத்தில் மப்ஸ்சல் பேருந்து (mofussil) சேவை மட்டும் இயக்கப்படுவதுவதாகவும், இதனால் இப்பகுதி பெண்கள் மகளிருக்கான இலவச பேருந்து சேவை பெரும் வகையில் இலவச பேருந்து சேவையை அனுமதிக்க கோரி தமிழக வெற்றிக் கழகத்தினர் மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் குட்டி. கோபிநாத் தலைமையில் நூற்றுக்கு மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
Mega Job Fair: பிப். 16-ம் தேதி வேலைவாய்ப்பு முகாம்; எங்கே நடைபெறுகிறது? முழு விவரம்!
மேலும் சீர்காழியை அடுத்த கதிராமங்கலம் கிராமத்தில் விவசாய நிலங்களுக்கு செல்லும் பாதையில் அமைந்துள்ள வாய்க்காலின் குறுக்கே இணைப்பு பாலம் கட்டித்தர வலியுறுத்தியும் அவர்கள் மனு அளித்தனர். இதில் மாவட்ட துணைச் செயலாளர் அறிவரசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சிவப்பிரகாசம், ஜாஸ்மின், ரம்யா, ஒன்றிய, நகர, பேரூராட்சி பொறுப்பாளர்கள், ராஜ்குமார், மனோகரன், ரமேஷ், கமல், ராஜா, ரவி, சந்தோஷ், ராஜ்குமார், ஹரிஷ், சதீஷ் மற்றும் மாவட்ட அணி நிர்வாகிகள், சதீஷ், அன்பு, பாரி, நடராஜன், ராகுல், கலையரசி, தவெகவினர் பலர் கலந்து கொண்டனர்.
ட்ரெண்டிங் செய்திகள்























