மேலும் அறிய

TVK Vijay: தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு - பட்ஜெட் உரையிலேயே அறிவிப்பு? பாமக கூட்டத்தில் தவெக பேச்சு

TVK Vijay: தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்துவது குறித்து முதலமைச்சர் விஜய் உரிய நேரத்தில் அறிவிப்பார் என, ஆளுங்கட்சியாக தவெக தரப்பில் பாமக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TVK Vijay: தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்துவது தொடர்பான அறிவிப்பு, ஆளுநர் உரையிலேயே இடம்பெற்றால் மகிழ்ச்சி என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

பாமக ஆலோசனை கூட்டம்:

சாதி வாரி சர்வே நடத்துவதன் தேவை குறித்து அனைத்து கட்சிகள் மற்றும் சமுதாய தலைவர்கள் பங்கேற்ற கலந்தாய்வு கூட்டம், பாமக தலைவர் அன்புமணி தலைமையில் சென்னை தியாகராய நகரில் நடைபெற்றது. அதில் பங்கேற்று பேசிய ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில செய்தி தொடர்பாளர் வீர விக்னேஷ்வரன், இந்தியாவிற்கான சமூக நீதியின் வேராக தமிழ்நாடு உள்ளது என அன்புமணி குறிப்பிட்டதில் இன்றைய நிகழ்வு மைல்கல்லாக இருக்கும் என நம்புகிறேன். இன்றைய காலகட்டத்தில் இந்த கூட்டம் முக்கியத்துவமானது. தவெகவின் அடிப்படை கோட்பான மதச்சார்பற்ற சமூகநீதி செயல்படுத்தும் வண்ணம், முதல் நாளிலேயே பெரியாரின் பெரியார் வலியுறுத்திய விகிதாச்சார பிரதிநிதித்துவத்தை செயல்வடிவம் பெற மாநில அளவில் சாதிவாரி கணக்கெடுப்பும், ஒன்றிய அளவில் மக்கள் தொகை கணக்கெடுப்பும் எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தார். அதற்கு மத்திய மாநில அரசுகள் வழிவகை செய்ய வேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.

தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு

தவெகவும் தனது முதல் தேர்தல் வாக்குறுதியாக, விகிதாச்சார பிரதிநிதித்துவம் சாதிவாரி கணக்கெடுப்பின் மூலம் அமல்படுத்தப்படும் என தெரிவித்துள்ளது. அதன்படி சரியான நேரத்தில் தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும். தமிழ்நாட்டில் மட்டுமின்றி இந்தியா முழுமைக்கும் எடுக்க வேண்டும். கர்நாடகாவில் கடந்த ஆண்டுகளில் இரண்டு முறை சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்பட்டுள்ளது. 69 சதவிகித இடஒதுக்கீடு நாளை நீதிமன்ற வழக்கிற்கு உட்படுத்தப்பட்டால், அதை பாதுகாக்க சாதி வாரி கணக்கெடு தரவுகள் அவசியம். இடஒதுக்கீடுகள் தொடர்பான வழக்குகளில் அண்மையில் சேகரிக்கப்பட்ட பெருவாரியான தரவுகளையே உச்சநீதிமன்றம் கேட்டுள்ளது. அந்த தரவுகள் இல்லாததன் காரணமாகவே வன்னியர் உள் இட ஒதுக்கீடு மட்டுமின்றி மராத்தியம் மற்றும் ஜாட் சமூகத்தினர் தொடர்பான இடஒதுக்கீடுகளும் ரத்து செய்யப்பட்டன. 

விரிவான கணக்கெடுப்பு அவசியம்

எனவே தந்தை பெரியாரை கொள்கை தலைவராக ஏற்றுக்கொண்ட தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான அமைச்சரவையில், பிரதித்துவத்திற்கு இணையாக 8 பட்டியலின மக்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இது ஒரு மிகப்பெரிய சமூக நீதி புரட்சி. அதன் வழியில் விரைவில் சாதி வாரி கணக்கெடுப்பு எடுக்கப்படும். மத்திய அரசு சாதி வாரி கணக்கெடுப்பு என வெளியிட்ட வரவேற்பை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால் குறிப்பிட்ட பிரிவில் எத்தனை பேர் இருக்கிறார்கள் என பொதுவாக கணக்கெடுப்பு நடத்தக்கூடாது. அதன் மூலம் இடஒதுக்கீடு வழங்க முடியாது. எனவே விரிவான தரவுகளுடன் கூடிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி முன்னெடுக்கப்பட வேண்டும்” என வீர விக்னேஷ்வரன் பேசினார்.

இதையும் படியுங்கள்: Annamalai: தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும் மொழியில் பாஜக பேசவில்லை - அண்ணாமலை ராஜினாமா கடித விவரங்கள்

அன்புமணி கோரிக்கை

தொடர்ந்து அன்புமணி பேசுகையில், “மத்திய அரசு மிகப்பெரிய அளவில் மக்கள் தொகையை எண்ணும் பணிகளை தான் செய்கிறது. மாநில அரசு முன்னெடுப்பது என்பது மிகவும் தீவிரமான ஆய்வு தரவுகள். சமூகத்தின் பின் தங்கிய நிலை, சாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு போன்ற தரவுகள் அதில் இடம்பெறும். அதுதான் நமக்கு அவசியமானது. அதுதொடர்பான அறிவிப்பு வருகின்ற சட்டமன்றக் கூட்டத்தொடரின் ஆளுநர் உரையிலேயே இடம்பெற்றால் மிகவும் மகிழ்ச்சி. இதுதொடர்பாக முதலமைச்சரிடமும் நேரடியாக வலியுறுத்துவோம்” என தெரிவித்தார்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

Meghalaya Project : ’தவெக ஆட்சியை கவிழ்க்க சதி – ஆபரேஷன் மேகாலயா’ பெயருக்கான காரணம் என்ன?
’தவெக ஆட்சியை கவிழ்க்க சதி – ஆபரேஷன் மேகாலயா’ பெயருக்கான காரணம் என்ன?
Resto-Bar : உணவகங்களில் குடிப்பகமா? தவெகஅரசுக்கு பா.ம.க. பகிரங்க எச்சரிக்கை!
Resto-Bar : உணவகங்களில் குடிப்பகமா? தவெகஅரசுக்கு பா.ம.க. பகிரங்க எச்சரிக்கை!
Vaiko : என் வாழ்க்கையில் நான் செய்த இரண்டு மிகப்பெரிய தவறுகள்.! பட்டியலிட்டு கொந்தளித்த வைகோ
என் வாழ்க்கையில் நான் செய்த இரண்டு மிகப்பெரிய தவறுகள்.! பட்டியலிட்டு கொந்தளித்த வைகோ
TVK Govt: ”ப்ராஜெக்ட் மேகாலயா” தவெக ஆட்சிக்கு போட்ட ஸ்கெட்ச் - விசாரணையில் பிரபல ஊடகவியலாளர்
”ப்ராஜெக்ட் மேகாலயா” தவெக ஆட்சிக்கு போட்ட ஸ்கெட்ச் - விசாரணையில் பிரபல ஊடகவியலாளர்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

காங்., கவுன்சிலர் புடவையை இழுத்த திமுக கவுன்சிலர்கள்! வெளியான பகீர் வீடியோ!
மீண்டும் DELIMITATION மசோதா திமுக-வை நாடிய பாஜக? ஸ்டாலின் அவசர ஆலோசனை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Meghalaya Project : ’தவெக ஆட்சியை கவிழ்க்க சதி – ஆபரேஷன் மேகாலயா’ பெயருக்கான காரணம் என்ன?
’தவெக ஆட்சியை கவிழ்க்க சதி – ஆபரேஷன் மேகாலயா’ பெயருக்கான காரணம் என்ன?
NEET UG Result 2026: நீட் மறுதேர்வில் யார் முதலிடம், தேர்ச்சி சதவீதம், பெண்களே அதிகம், கட் ஆஃப்- முக்கிய ஹைலைட்ஸ்!
NEET UG Result 2026: நீட் மறுதேர்வில் யார் முதலிடம், தேர்ச்சி சதவீதம், பெண்களே அதிகம், கட் ஆஃப்- முக்கிய ஹைலைட்ஸ்!
மாணவர்கள் உயர்கல்விக்கு பிணையில்லா கடன்: சிஎம் விஜய் திட்டம்!- தனி அலுவலர் நியமனம்!
மாணவர்கள் உயர்கல்விக்கு பிணையில்லா கடன்: சிஎம் விஜய் திட்டம்!- தனி அலுவலர் நியமனம்!
Vaiko : என் வாழ்க்கையில் நான் செய்த இரண்டு மிகப்பெரிய தவறுகள்.! பட்டியலிட்டு கொந்தளித்த வைகோ
என் வாழ்க்கையில் நான் செய்த இரண்டு மிகப்பெரிய தவறுகள்.! பட்டியலிட்டு கொந்தளித்த வைகோ
Hyundai EV: ரூ.12 லட்சம் பட்ஜெட்டில் 500KM ரேஞ்ச் - ஹுண்டாயின் காம்பேக்ட் எஸ்யுவி - மற்ற அம்சங்கள் எப்படி?
ரூ.12 லட்சம் பட்ஜெட்டில் 500KM ரேஞ்ச் - ஹுண்டாயின் காம்பேக்ட் எஸ்யுவி - மற்ற அம்சங்கள் எப்படி?
TVK Govt: ”ப்ராஜெக்ட் மேகாலயா” தவெக ஆட்சிக்கு போட்ட ஸ்கெட்ச் - விசாரணையில் பிரபல ஊடகவியலாளர்
”ப்ராஜெக்ட் மேகாலயா” தவெக ஆட்சிக்கு போட்ட ஸ்கெட்ச் - விசாரணையில் பிரபல ஊடகவியலாளர்
Rohit Sharma: ”2027 ODI உலகக் கோப்பைக்கு நீங்க வேண்டாம்” ரோகித் சர்மாவிற்கு தகவல் சொன்ன பிசிசிஐ? ஜுலை.19
”2027 ODI உலகக் கோப்பைக்கு நீங்க வேண்டாம்” ரோகித் சர்மாவிற்கு தகவல் சொன்ன பிசிசிஐ? ஜுலை.19
Cheapest Diesel SUV: நாட்டின் மலிவான டீசல் எஸ்யுவி, 24KM மைலேஜ், ப்ரீமியம் அம்சங்கள், 3 ஸ்டார் ரேட்டிங் - EMI விவரங்கள்
நாட்டின் மலிவான டீசல் எஸ்யுவி, 24KM மைலேஜ், ப்ரீமியம் அம்சங்கள், 3 ஸ்டார் ரேட்டிங் - EMI விவரங்கள்
Embed widget