தமிழ் திரையுலகின் பிரபல நடிகராக உலா வரும் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் நாஞ்சில் சம்பத் கடந்த சில நாட்களுக்கு முன்பு இணைந்தார். இவர் தவெக-வில் இணைவதற்கு  முன்பு திமுக-வில் இணைய முயற்சித்ததாகவும், அதற்காக நாஞ்சில் சம்பத் பணம் கேட்டதாகவும் நாஞ்சில் சம்பத் மீது குற்றம் சாட்டப்பட்டது. 

Continues below advertisement

பணம் கேட்டேனா?

இதுதொடர்பாக அவரிடம் தனியார் யூ டியூப் நேர்காணலில் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த நாஞ்சில் சம்பத், திமுக-வில் யாரிடம் 1 கோடி கேட்பது? நான் அமைச்சர் சேகர்பாபுவிடம் என்னுடைய மகன் எம்டி முடிச்சுட்டான். சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிக்கனும்னு ஆசைப்பட்றான். அவனுக்கு ரூபாய் கொடுக்க என்கிட்ட இல்லை. 

அவன் ரூபாய் 1 கோடியே 20 லட்சம் ஆகும். 60 லட்சம் ரூபாய் எனக்கு  கடன் கிடைக்கும். அப்பா எப்படியாவது 60 லட்சம் ரூபாய் புரட்டித் தாங்க, நானே டாக்டர் ஆகி அந்த கடனை அடைச்சுட்றேன்னு சொன்னாரு. கடனாகதான் சேகர்பாபுவிடம் கேட்டேன். இதை கேட்டு 2 மாசம் இருக்கும். ஆனால், அவர் அதை கண்டுகொள்ளவில்லை. 

Continues below advertisement

தவெக-வினர்கிட்ட ஏதும் சொல்லவில்லை. அந்த நோக்கமும் எனக்கு இல்லை. என் மகனே அதை பாத்துக்குவான். எனக்கு நிறைய மிரட்டல்கள் வந்துச்சு. உதயநிதியை எதிர்க்கனும்னு முடிவு பண்ணிட்டியா? உதயநிதி யாருனு தெரியுமா? போன்ல மிரட்டுனாங்க. டேய் தெரியாதாடா உனக்குனு? கேட்டாங்க. 

இவ்வாறு அவர் பேட்டியில் கூறியிருப்பார். 

நாஞ்சில் சம்பத்:

நாஞ்சில் சம்பத் அடிப்படையில் திமுக-வில் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். வைகோ திமுகவில் இருந்து வெளியேறிய பிறகு மதிமுக-வில் அவருக்கு பக்கபலமாக இருந்தார். பின்னர், மதிமுக-வில் இருந்து அதிமுக-வில் இணைந்தார். பின்னர், மீண்டும் திமுக-வில் இணைந்தார். 

இந்த நிலையில், தற்போது தவெக-வில் இணைந்துள்ளார். தவெக-வின் கொள்கை பரப்புச் செயலாளராக அந்த கட்சியில் இணைந்துள்ளார். தவெக-வில் விஜய்யுடன் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ் ஆகிய நிர்வாகிகள் இருந்தாலும் பேச்சாளர்கள் யாரும் இல்லாத சூழல் இருந்து வருகிறது. நாஞ்சில் சம்பத் அக்கட்சியில் இணைந்தது தவெக-விற்கு பலமாக உள்ளது. நாஞ்சில் சம்பத்திற்கு முன்பு அக்கட்சியில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இணைந்தார். 

இனி வரும் நாட்களில் தவெக-வின் அரசியல் மேடைகளில் முக்கிய பேச்சாளராக நாஞ்சில் சம்பத் இடம்பெற உள்ளார்.