TVK Kanimozhi:அரியணையில் அமர்ந்து பேச்சு; அதிகாரிகளுக்கு அவமரியாதை? தவெக எம்எல்ஏ கனிமொழி விளக்கம்
TVK MLA Kanimozhi: சிம்மாசனத்தில் அமர்ந்து அதிகாரிகளிடம் பேச்சு,அவமரியாதையா? இதுதான் காரணம்: தவெக எம்எல்ஏ கனிமொழி விளக்கம்

கவுண்டம்பாளையம் எம்எல்ஏ கனிமொழி, சிம்மாசனம் போன்ற இருக்கை ஒன்றில் அமர்ந்து அதிகாரிகளைச் சந்தித்துப் பேசியது விமர்சனத்துக்கு உள்ளான நிலையில், அது வீடு இல்லை, தன்னுடைய ஜோதிட அலுவலகம் என்று கனிமொழி விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ள அவர் கூறி உள்ளதாவது:
’’எனது அன்பு மக்களுக்கும், நண்பர்களுக்கும் ஒரு தகவல்… பல ஆண்டுகளாக நான் ஜோதிடராக மக்களை சந்தித்து வந்த எனது பழைய ஜோதிட அலுவலகம் இன்று வரை மக்களின் நம்பிக்கையையும் அன்பையும் சுமந்து நிற்கிறது. அந்த அலுவலகம் எனது வாழ்க்கைப் பயணத்தின் முக்கியமான நினைவுகளை தாங்கி நிற்கும் ஒரு இடம். தற்போது, எனது புதிய MLA அலுவலகத்தின் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
புதிய அலுவலகத்தில் திறப்பு பணிகள்
அலுவலகத்தின் painting மற்றும் பிற பணிகள் முழு வேகத்தில் நடைபெற்று வருகின்றன. மக்கள் பயன்பாட்டிற்கு சிறப்பாகவும், அனைவரும் எளிதாக சந்தித்து தங்களது கோரிக்கைகளை முன்வைக்கக்கூடிய வகையிலும் அதை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

அந்தப் பணிகள் முழுமையாக நிறைவடையும் வரை, வழக்கம்போல நான் எனது பழைய ஜோதிட அலுவலகத்திலேயே பொதுமக்கள், அதிகாரிகள் மற்றும் என்னைச் சந்திக்க விரும்பும் அனைவரையும் சந்தித்து அவர்களின் கோரிக்கைகள் மற்றும் தேவைகளை கேட்டறிந்து வருகிறேன். எனக்கு மக்கள் சேவையே முதன்மை.
அலுவலகம் எந்த இடத்தில் இருந்தாலும், மக்களின் நலனுக்காக என் கதவுகள் என்றும் திறந்தே இருக்கும். புதிய MLA அலுவலகம் முழுமையாக தயார் ஆனவுடன், மேலும் சிறப்பான சூழலில் அனைத்து பொதுமக்களையும் அங்கு சந்தித்து, உங்கள் தேவைகள் மற்றும் குறைகளை நேரில் கேட்டறிந்து உடனடி நடவடிக்கை எடுக்க உறுதியாக உள்ளேன். உங்கள் அன்பும், ஆதரவும், நம்பிக்கையும் எனக்கு என்றும் உறுதுணையாக இருக்கிறது. என்றும் உங்கள் சேவையில்!’’
இவ்வாறு கவுண்டம்பாளையம் தொகுதி MLA கனிமொழி சந்தோஷ் தெரிவித்துள்ளார்.
எனது அன்பு மக்களுக்கும், நண்பர்களுக்கும் ஒரு தகவல்…
— Kanimozhi Santhosh (@Kanimozhi_tvk) May 19, 2026
பல ஆண்டுகளாக நான் ஜோதிடராக மக்களை சந்தித்து வந்த எனது பழைய ஜோதிட அலுவலகம் இன்று வரை மக்களின் நம்பிக்கையையும் அன்பையும் சுமந்து நிற்கிறது. அந்த அலுவலகம் எனது வாழ்க்கைப் பயணத்தின் முக்கியமான நினைவுகளை தாங்கி நிற்கும் ஒரு இடம்.… pic.twitter.com/ZebRnrG5jq
முன்னதாக ஜோதிட அலுவலகத்தில் அவர் அரியணை போன்ற இருக்கையில் அமர்ந்து, எதிரில் அதிகாரிகள் பிளாஸ்டிக் சேரில் அமர்ன்ந்து இருந்தது சர்ச்சைகளை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
Before You Go
Iran US War: அமெரிக்கா-ஈரான் அமைதி ஒப்பந்தம்! குறையும் பெட்ரோல் டீசல் விலை?ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு!
ட்ரெண்டிங் செய்திகள்























