TVK Vijay: ரெண்டு நாட்களில் CM விஜய் கற்ற பாதி அரசியல்..! மாஸ்டர் ஆவாரா? கூட்டணி ஆபத்தை சமாளிப்பாரா?
TVK Vijay: தவெக தலைவர் விஜய் அமைத்துள்ள தேர்தலுக்கு பிந்தைய சிக்கலான கூட்டணி, திமுகவிற்கு என்ன மாதிரியான சாதகமான சூழலை அமைத்துள்ளது என கீழே விவரிக்கப்பட்டுள்ளது.

TVK Vijay: தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க ஆதரவு அளித்தாலும், திமுக கூட்டணியிலேயே தொடர்வதாக விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் அறிவித்துள்ளன.
கூட்டணி ஆட்சி அமைக்கும் விஜய்:
தமிழ்நடு சட்டமன்ற தேர்தலுக்கு பிந்தைய கடும் போராட்டங்கள் மற்றும் நீண்ட இழுபறிக்குப் பிறகு, பல்வேறு கட்சிகளின் ஆதரவுடன் விஜய் இன்று மாநிலத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ளார். ஆளுநர் எதிர்பார்த்த பெரும்பான்மையை நிரூபித்த அவர், வரும் 13ம் தேதிக்குள் தனது பெரும்பான்மையை சட்டமன்றத்திலும் நிரூபிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளார். விசிக மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய இரண்டு கட்சிகள் கொண்டுள்ள தலா இரண்டு எம்.எல்.ஏக்களின் ஆதரவே, விஜய் தனது இலக்கை அடைய உதவியுள்ளது. அதேநேரம், ஆட்சி அமைக்க மட்டுமே விஜய்க்கு ஆதரவு அளிப்பதாகவும், அவரது அரசியல் எதிரியான திமுக உடனான கூட்டணியில் தொடர்ந்து பயணிப்பதாகவும் அந்த அரசியல் கட்சிகள் தெரிவித்துள்ளன.
பகிரங்கமாக அறிவித்த விசிக
செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், “திமுக கூட்டணியில் தொடர்ந்து பயணிக்கிறோம். அதேநேரம், மாநிலத்தில் அரசியலமைப்பு நெருக்கடியையும் குடியரசுத் தலைவர் ஆட்சியையும் நாங்கள் விரும்பவில்லை என்பதால் விஜய் ஆட்சி அமைக்க ஆதரவு அளிக்கிறோம்” என தெரிவித்துள்ளார். இதே நிலைப்பாட்டையே தாங்களும் தொடர்வதாக இந்திய யூனியன் முஸ்லீம் கட்சியும் அறிவித்துள்ளது. பிரதான எதிர்க்கட்சியான திமுகவுடனான தங்கள் உறவைத் துண்டிக்காமல், இரண்டு சிறிய கட்சிகள் தவெக ஆட்சி அமைக்க ஆதரவளிக்கின்றன. இந்திய அரசியலில் இத்தகைய சூழல் நிலவுவது இதுவே முதல் முறையாக இருக்கும் என கூறப்படுகிறது. விஜய் அரசு, பெரும்பான்பை பலத்திற்காக விசிக மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கைச் சார்ந்துள்ளது.
Vijay CM Oath Ceremony LIVE: விஜய் பதவியேற்பு விழா லைவ்
காங்கிரசை விஜய் நம்பலாமா?
விஜயின் கூட்டணி ஆட்சிக்கு தவெகவின் 107 உறுப்பினர்கள் போக, காங்கிரஸின் 5 பேர் உடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளின் தலா இரண்டு உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது. திமுகவுடனான தனது கூட்டணியை காங்கிரஸ் கட்சி மட்டுமே முற்றிலுமாக துண்டித்துள்ளது. இருப்பினும், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு திமுகவுடன் நெருங்கிய தொடர்புகள் உள்ளன. கட்சியின் தலைமையை மீறி பல இடங்களில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் செயல்படுவதை பல முறை வடமாநிலங்களில் கண்டு இருக்கிறோம். அத்தகைய கட்சியின் ஆதரவை முழுமையாக நம்பி இருப்பது, எந்த நேரத்திலும் விஜயின் அரசுக்கு ஆபத்தாக அமையலாம் என அரசியல் விமர்சகர்கள் எச்சரிக்கின்றனர்.
விஜயின் ஆட்சியில் திமுகவின் கூட்டணி:
சட்டமன்றத்தில் விஜய் பெருன்பான்மையை நிரூபிக்க உள்ள நிலையில், அவரது ஆட்சியை தற்போது கவிழ்க்கலாம் என்ற என திமுக கருதினால், அது பொதுமக்களிடையே கடும் எதிர்ப்பை ஏற்படுத்தக்கூடும். ஆனால், அதற்கான சரியான வாய்ப்பிற்காக திமுக காத்திருக்கும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. இதற்கு சாதகமாகவே தங்களது பழைய கூட்டாளிகளை விஜய் ஆட்சிக்கு ஆதரவளிக்கச் செய்துள்ளதால், தவெக தரப்பு மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியுள்ளது. தற்போதைக்கு தங்களுக்கு கிடைத்துள்ள பெரும்பான்மையைக் கொண்டு ஒரு நல்ல அரசாங்கத்தை நடத்திவிட்டு, பின்னர் மீண்டும் மக்கள் ஆணையைப் பெறுவதற்காக வாக்காளர்களை நாடுவதே தவெகவின் திட்டமாக தெரிகிறது. இந்த அணுகுமுறை வலுவான எதிர்க்கட்சிகளை பலவீனமாக்க வழிவகுக்கும் என விஜய் நம்புகிறாராம்.
விஜய் கற்ற பாடம்:
பேசாமல் ரோட் ஷோ மட்டுமே நடத்தினால் எம்.எல்.ஏக்கள் வேண்டுமானால் கிடைக்கலாம், ஆனால் ஆட்சியும், கூட்டணி கட்சிகளும் கிடைக்காது என்பதை, கடந்த இரண்டு நாட்களில் அவருக்கு கடினமான பாடங்கள் நிச்சயமாக உணர்த்தி இருக்கும். ஆதரவிற்காக மீண்டும் மீண்டும் கோரிக்கை விடுக்க வேண்டி இருந்தது. ஆளுநர் மாளிகைக்கு திரிய வேண்டி இருந்தது. உண்மையான அரசியல் என்றால் என்ன? அது எவ்வாறு கையாளப்படுகிறது? என்பது குறித்த லேசான அனுபவத்தை விஜய் பெற்றுள்ளார். அரசாங்கத்தை அமைப்பதே இவ்வளவு கடினமானது என்றால், அதை வெற்றிகரமாக நடத்துவது அதைவிடவும் சவாலான ஒரு பணி என்பதை விஜய் சிந்திக்க வேண்டும். கூட்டணி ஆட்சி என்பதே சிக்கல் என்றால், பரம எதிரியின் கூட்டாளிகளே அதில் செல்வாக்கு மிக்கவர்களாக இருப்பது தவெகவிற்கு மேலும் தலைவலியாக உள்ளது.
உஷாராக இருக்க வேண்டிய நேரம்..!
எதிர்வரும் நாட்கள் முதலமைச்சர் விஜய்க்கு மிகவும் சவாலானதாக இருக்கலாம். அவரது ஒவ்வொரு தவறும் ஒவ்வொரு நகர்வும் உன்னிப்பாகக் கவனிக்கப்படும். தற்போது அவருக்கு மகத்தான மக்கள் ஆணையும் ஆதரவும் கிடைத்துள்ளது. ஆனால், நட்சத்திர அந்தஸ்தில் இருந்து மக்களின் தலைவராகவும், தகுதியான முதலமைச்சராகவும் எப்படி மேம்பட உள்ளார் என்பதைப் பொறுத்தே, மக்களின் ஆதரவு எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது தீர்மானிக்கப்படும்.
Before You Go
C Vijayabaskar: திமுக போகும் விஜயபாஸ்கர்? கட்சியில் முக்கிய பொறுப்பு ஸ்டாலின் கணக்கு என்ன?
ட்ரெண்டிங் செய்திகள்






















