மேலும் அறிய

TVK Vijay DMK: திருச்சியில் மாஸ் காட்டிய விஜய்.. ”கேட்கல, பாக்கல.. படிச்சுட்டு வாங்க” திமுக அமைச்சர்கள் பதிலடி

TVK Vijay DMK: தேர்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை என்ற விஜயின் குற்றச்சாட்டிற்கு, அமைச்சர்கள் பதிலடி தந்து வருகின்றனர்.

TVK Vijay DMK: தேர்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை என்ற விஜயின் குற்றச்சாட்டுகள் பொய் என, அமைச்சர்கள் சாடியுள்ளனர்.

விஜயின் திருச்சி பயணம்:

தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை தொடங்கிய இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, முதல்முறையாக விஜய் மக்கள் சந்திப்பை நடத்தினார். இதற்காக திருச்சி வந்த அவரை தொண்டர்கள் அலைகடலென சூழ்ந்து உற்சாக வரவேற்பு அளித்தனர். திட்டமிட்ட நேரத்தையும் தாண்டி இரவு 9 மணி வரை விஜயின் பயணம் நீடித்தது. திருச்சி மற்றும் அரியலூர் பகுதிகளில் பேசியபோது, ”திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் பொய் சொல்லி ஏமாற்றி வருகிறது. திருச்சி மற்றும் அரியலூர் மாவட்டங்களுக்கு என வளர்ச்சி திட்டங்கள் எதையும் அரசு முன்னெடுக்கவில்லை” என கடும் விமர்சனங்களை முன்வைத்தார். திருச்சியை ஸ்தம்பிக்க வைக்கும் வகையில், விஜய்க்கு கூடிய கூட்டம் தமிழக அரசியலில் சலசலைப்பை ஏற்படுத்தியுள்ளது.

அன்பில் மகேஷ் பதிலடி

விஜயின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த அமைச்சர் அன்பில் மகேஷ், “ சட்டமன்ற தேர்தல் வந்தாலே எதிர்க்கட்சிகள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும். எந்தெந்த கட்சிகள் என்னென்ன செய்துள்ளன? நாங்கள் வந்தால் என்ன செய்வோம்? என்றெல்லாம் மக்கள் மன்றத்தில் எடுத்து வைப்பர். நேற்று கூட திருச்சியில் கூட்டத்தை கூட்டியதாக செய்தியில் பார்த்தேன். அப்போது நான் சென்னையில் இருந்தேன். விஜய் அவர்கள் கேக்கலையா, கேக்கலையா என்று பேசியதை இன்று காலை செய்தித்தாள்களில் பார்த்தேன். கேக்கலை, கேக்கலை என்று சொல்வதை விட திருச்சியின் வளர்ச்சியை சரியாக பார்க்கவில்லை என்று தான் தெரிகிறது. 

அமைச்சர் நேரு மற்றும் நானும் திருச்சி மாவட்ட வளர்ச்சியில் எங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளோம்; திருவெறும்பூர் அருகே மாதிரி பள்ளி, ஒலிம்பிக் அகாடமி, பஞ்சபூர் பேருந்து நிலையம் என பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. திமுக திருச்சிக்கு எதுவும் செய்யவில்லை என்ற விஜயின் பொத்தாம் பொதுவான பேச்சை மக்கள் ஏற்கமாட்டார்கள். மத்திய அரசு தமிழ்நாட்டிற்கான கல்வி நிதியை ஒதுக்காதது, தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் திருத்த பட்டியல் குறித்து விஜய் கேள்வி கேட்காதது ஏன்?” என அன்பில் மகேஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.

”விஜய் படிக்கணும்” - மா.சுப்பிரமணியன்

விஜயின் குற்றச்சாட்டு தொடர்பாக பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன், "தி.மு.க. அரசை விமர்சிப்பதற்கு முன்பு விஜய் படித்துவிட்டு வந்து பேச வேண்டும். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை போன்ற மக்கள் நலத் திட்டங்கள் விஜய் போன்றவர்கள் சொல்லிக் கொண்டுவந்தவை அல்ல. இந்த அரசின் திட்டங்களால் பயன்பெறும் மக்களுக்கு அரசின் செயல்பாடுகள் நன்கு தெரியும். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி தற்போது 6.5 சதவீதம். ஆனால் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 11.19 சதவீதம். இதையெல்லாம் விஜய் படித்து அறிந்து கொண்ட பின் தான் குற்றம்சாட்டுவது நல்லது," என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

தவெக ஆட்சிக்கு ரெட் அலர்ட்! இவ்வளவு வீக்கான முதல்வரை தமிழகம் பார்த்தது இல்லை! அட்டாக் மோடில் ஸ்டாலின்
தவெக ஆட்சிக்கு ரெட் அலர்ட்! இவ்வளவு வீக்கான முதல்வரை தமிழகம் பார்த்தது இல்லை! அட்டாக் மோடில் ஸ்டாலின்
Dummy CM-க்கு வெங்காயம் வாங்கக்கூட.. மறைக்க புளுகுணி ஆட்டம் ஆடியவர்கள் யார்? காய்ச்சி எடுக்கும் உதயநிதி
Dummy CM-க்கு வெங்காயம் வாங்கக்கூட.. மறைக்க புளுகுணி ஆட்டம் ஆடியவர்கள் யார்? காய்ச்சி எடுக்கும் உதயநிதி
ஆளுநர் அலுவலகத்தில் இருந்து தீபாவளிக்கு நல்ல செய்தி வரும்: அமைச்சர் விஸ்வநாதன் சொன்னது எதற்காக?
ஆளுநர் அலுவலகத்தில் இருந்து தீபாவளிக்கு நல்ல செய்தி வரும்: அமைச்சர் விஸ்வநாதன் சொன்னது எதற்காக?
அதிகாரிகளின் ஆக்கிரமிப்பில் திருச்செந்தூர் பக்தர்கள் விடுதியா? சாமானியர்கள் சங்கடம் தீருமா?
அதிகாரிகளின் ஆக்கிரமிப்பில் திருச்செந்தூர் பக்தர்கள் விடுதியா? சாமானியர்கள் சங்கடம் தீருமா?

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தவெக ஆட்சிக்கு ரெட் அலர்ட்! இவ்வளவு வீக்கான முதல்வரை தமிழகம் பார்த்தது இல்லை! அட்டாக் மோடில் ஸ்டாலின்
தவெக ஆட்சிக்கு ரெட் அலர்ட்! இவ்வளவு வீக்கான முதல்வரை தமிழகம் பார்த்தது இல்லை! அட்டாக் மோடில் ஸ்டாலின்
TNPSC Group-4: டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. குரூப் 4 தேர்வு விண்ணப்ப தேதி நீட்டிப்பு.. எப்போது வரை?
TNPSC Group-4: டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. குரூப் 4 தேர்வு விண்ணப்ப தேதி நீட்டிப்பு.. எப்போது வரை?
Diwali Bonus: குஷியில் துள்ளிக்குதிக்கும் ஊழியர்கள்! தீபாவளி போனஸ் தொடர்பான அடுத்த அறிவிப்பு!
Diwali Bonus: குஷியில் துள்ளிக்குதிக்கும் ஊழியர்கள்! தீபாவளி போனஸ் தொடர்பான அடுத்த அறிவிப்பு!
தீபாவளி வியாபாரத்தை மொத்தமா கெடுத்த மழை! சேலத்தை புரட்டிப்போட்ட கனமழை... மிதக்கும் வாகனங்கள்!
தீபாவளி வியாபாரத்தை மொத்தமா கெடுத்த மழை! சேலத்தை புரட்டிப்போட்ட கனமழை... மிதக்கும் வாகனங்கள்!
அடுத்த 7 நாளைக்கு மழை பொளக்கப்போகுது! எந்தெந்த ஊருக்கு கனமழை எச்சரிக்கை - லிஸ்ட் இதோ
அடுத்த 7 நாளைக்கு மழை பொளக்கப்போகுது! எந்தெந்த ஊருக்கு கனமழை எச்சரிக்கை - லிஸ்ட் இதோ
வெந்து தணிந்தது காடு என்றதும் சிரிப்பலை...மாணவர்களுக்கு கலகலப்பாக முதல்வர் விஜய் அட்வைஸ்
வெந்து தணிந்தது காடு என்றதும் சிரிப்பலை...மாணவர்களுக்கு கலகலப்பாக முதல்வர் விஜய் அட்வைஸ்
இன்னோவா கிரிஸ்டா சீரிஸ் விலை உயர்வு: வேரியன்ட் வாரியாக எவ்வளவு அதிகரித்துள்ளது? புதிய விலைப்பட்டியல் இதோ
இன்னோவா கிரிஸ்டா சீரிஸ் விலை உயர்வு: வேரியன்ட் வாரியாக எவ்வளவு அதிகரித்துள்ளது? புதிய விலைப்பட்டியல் இதோ
Diwali Special Train: தீபாவளிக்கு சொந்த ஊருக்கு போறீங்களா? சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! எந்தெந்த ஊர்களுக்கு! முழு விவரம்!
Diwali Special Train: தீபாவளிக்கு சொந்த ஊருக்கு போறீங்களா? சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! எந்தெந்த ஊர்களுக்கு! முழு விவரம்!
Embed widget