Udhayanidhi: ”ஏது ரீல்ஸ் ஆட்சியா? உங்க அப்பாகிட்ட சொல்லி இருக்கலாமே” உதயநிதியை ரவுண்டு கட்டிய தவெக பாய்ஸ்
Udhayanidhi DMK Vs TVK: முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசை ரீல்ஸ் ஆட்சி என குறிப்பிட்ட உதயநிதிக்கு பதிலடி தரும் விதமாக, சமூக வலைதளங்களில் திமுகவின் விளம்பரங்களை தவெகவின் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

Udhayanidhi DMK Vs TVK: விளம்பரங்களை மட்டுமே நம்பி 5 ஆண்டுகள் திமுக ஆட்சி செய்துள்ளதாக, தவெக தரப்பு கடுமையாக விமர்சித்துள்ளது.
உதயநிதியின் ”ரீல்ஸ்”விமர்சனம்:
சட்டப்பேரவையில் நேற்று நடைபெற்ற முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி உரையாற்றினார். அப்போது, ”ரீல்ஸ் ஆட்சியாக இல்லாமல் மக்களுக்கான ஆட்சியை முதலமைச்சர் நடத்த வேண்டும்” என விமர்சித்து இருந்தார். அதற்கு தமிழக வெற்றிக் கழகத்தின் கடும் எதிர்வினையாற்றி வருகின்றனர். விளம்பரங்களை மட்டுமே நம்பி 5 ஆண்டுகள் ஆட்சி செய்து விட்டு, முதலமைச்சரை உதயநிதி விமர்சிக்கலாமா? என கேள்வி எழுப்பியுள்ளனர். இதுபோக சமூக வலைதள பிரபலங்களை கொண்டு கடந்த ஆட்சியின் போது திமுக எப்படியெல்லாம் விளம்பரங்களை மேற்கொண்டது என்பது தொடர்பான பல விவரங்களையும் வெளியிட்டு கடுமையாக சாடி வருகின்றனர்.
ரவுண்டு கட்டப்பட்ட உதயநிதி..!
Reels மோகத்தை நம்பி இப்போ ஏமாந்து தோத்து போனது நீங்கதான் உதய் 😂😂😂
— கோடீஸ்வரன் (@KodeeswaRaja_) May 13, 2026
சும்மா பாயிண்ட் by பாயிண்ட் டா அடிக்குறாங்க 😂😂😂👌👌 pic.twitter.com/n4RkHnB77v
Insta reels atchi🤣🤣🤣
— Sindhu TVK (@sindhu_515) May 13, 2026
pic.twitter.com/Yorp8JjY2u
Insta la influencer kitta kaasa kuduththu reels potu katchi nadaththina unakku @Udhaystalin 🤡😁 indha pechellam thevaiyaa...🤦🤣🤣 pic.twitter.com/FQ8U2LLNtU
— TVK Virtual Warriors HQ (@TVKWarriorsHQ) May 13, 2026
.@Udhaystalin யாரு ஐயா instagram-ல reels ஆட்சி நடத்துவது 🤣?#dmkfails #dmktroll #voiceofsarath pic.twitter.com/9v3upeSUoo
— Voice Of Sarath (@voiceof_sarath) May 13, 2026
இன்ஃப்ளூயன்சர்ஸ் ஆட்சியா?
Insta Reels மன்னன் உதயநிதி😂😂 pic.twitter.com/Ld8NTfGbQl
— Suresh (@Suresh199104) May 13, 2026
Insta reels 😂😂 pic.twitter.com/fHw1kRn5RO
— Leo Prabu Shanmugam (@leoprabu) May 13, 2026
”உங்கள் அப்பாவிடம் சொல்ல மறந்துட்டீங்களா?”
உதயநிதிக்கு பதிலடி தரும் வகையிலான வீடியோக்களை மட்டுமின்றி, பல அதிரடியான கேள்விகளையும் நெட்டிசன்கள் மற்றும் தவெக தரப்பினர் எழுப்பி வருகின்றனர். அதில், “ முதலமைச்சர் ஸ்டாலினே சமூக வலைதளங்களில் பிரபலமான இரண்டு சிறுவர்களை அழைத்து வந்து, முதலமைச்சர் அறையிலேயே வைத்து ரீல்ஸ் எடுத்தது எல்லாம் மறந்துவிட்டீர்களா? கரூரில் மிகப்பெரிய சம்பவம், கரூரில் மிகப்பெரிய சம்பவம் என அனைத்து சமூக வலைதள பிரபலங்களுக்கும் ஒரே கண்டெண்டை கொடுத்து, திமுக மாநாடு குறித்து வீடியோ போட வைத்தது நியாபகம் இல்லையா? பேசி பேசியே வளர்ந்த கட்சி என கூறப்பட்ட திமுகவில் ஆளே இல்லாததை போன்று, ஜூலி போன்ற ஆட்களை இறக்கி பேசவிட்டு இன்று கூப்பில் அமர்ந்து இருப்பது நீங்கள் தான். ரீல்ஸ் ஆட்சி வேண்டாம் என உங்கள் தந்தையிடம் சொல்லி இருந்தால், திமுக இப்படி ஆட்சியை இழந்து இருக்காது, அவரும் கொளத்தூரில் தோல்வி கண்டு இருக்கமாட்டார்” என தீவிரமான விமர்சனங்களையும் முன்வைத்து வருகின்றனர்.
Before You Go
DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
ட்ரெண்டிங் செய்திகள்






















