TVK Ministers Age: 40+ வயதில் 22 அமைச்சர்கள்..! 60 வயதை கடந்த 4 பேர் - சிஎம் விஜய் அமைச்சரவையின் வயது விவரம்
TVK Cabinet Ministers Age: முதலமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்று இருக்கும் பெரும்பாலானோர், 50-க்கும் குறைவான வயதிலேயே இருக்க இளம் அமைச்சரவை உருவெடுத்துள்ளது.

TVK Cabinet Ministers Age: முதலமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் செங்கோட்டையன் மட்டுமே 70 வயதை கடந்தவராக உள்ளார்.
தமிழ்நாட்டின் இளம் அமைச்சரவை?
தமிழ்நாடு அமைச்சரவையின் விரிவாக்கம் ஆளுநர் மாளிகையில் நடந்து முடிந்துள்ளது. 10 பேராக இருந்த முதலமைச்சர் தலைமையிலான அமைச்சரவை உறுப்பினர்களின் எண்ணிக்கை தற்போது 33 ஆக உயர்ந்துள்ளது. மீதமுள்ள இரண்டு இடங்கள் விசிக மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீகிற்காக காலியாக வைக்கப்பட்டுள்ளனவாம். அதேநேரம், அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள பெருபாலானோர்களின் வயது வரம்பானது 50-க்குள்ளாகவே உள்ளது. நிதியமைச்சராக பொறுப்பேற்றுள்ள செங்கோட்டையன் மட்டுமே 75 வயதை கடந்தவராக உள்ளார். இதனால் விஜய் தலைமையிலான அமைச்சாவை தமிழ்நாடு அரசு இதுவரை கண்டிராத இளம் அமைச்சரவையாக கருதப்படுகிறது.
வயதில் மூத்த அமைச்சர்கள்:
தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு 10வது முறையாக தேர்வாகியுள்ள செங்கோட்டையனுக்கு 78 வயதாகிறது. இவரே ஆளுங்கட்சியின் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள வயது மூப்பானவராக உள்ளார். அவரை தொடர்ந்து கட்சியின் பொதுச்செயலாளரும், நீர்வள அமைச்சருமான என். ஆனந்த் 62 வயதை எட்டியுள்ளார். காங்கிரஸ் சார்பில் மேலூர் தொகுதியில் போட்டியிட்டு வென்று அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள விஸ்வநாதனின் வயது 61 ஆகும். வேளச்சேரி எம்.எல்.ஏ., குமாருக்கு 60 வயதாகிறது. இந்த 4 பேர் மட்டுமே தவெகவின் அமைச்சரவையில் 60 வயதை கடந்தவர்களாக உள்ளனர்.
50+ வயது வரம்பில் எத்தனை பேர்..
- முதலமைச்சரும், தவெக தலைவருமான விஜய்க்கு 51 வயதாகிறது
- கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் அமைச்சருமான ராஜேஷ்குமார் 51 வயதை எட்டியுள்ளார்
- தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் ஸ்ரீநாத் 52 வயதை எட்டியுள்ளார்
- குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பினர் விஜயலட்சுமிக்கு 50 வயதாகிறது
- காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் ரஞ்சித்குமாருக்கு 50 வயதாகிறது
- அரக்கோணம் எம்.எல்.ஏ., காந்திராஜ் 52 வயதை எட்டியுள்ளார்
- சேலம் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் விஜய் தமிழன் பார்த்திபனுக்கு 50 வயதாகிறது
இதையும் படியுங்கள்: TVK Cabinet Ministers: சென்னைக்கு மட்டுமே 7 அமைச்சர்கள், மாவட்ட வாரியாக நிலைமை என்ன? - விஜய் அமைச்சரவை லிஸ்ட்
40+ வயது வரம்பில் எத்தனை பேர்..
- திருச்செங்கோட்டில் வென்ற அருண் ராஜிற்கு 46 வயதாகிறது
- வில்லிவாக்கம் தொகுதியில் வென்ற ஆதவ் அர்ஜுனாவிற்கு 42 வயதாகிறது
- திருப்பரங்குன்றம் தொகுதியில் வென்ற ஆர். நிர்மல்குமாருக்கு 44 வயதாகிறது
- மயிலாப்பூர் தொகுதியில் போட்டிட்யிட்டு வென்ற வெங்கடராமனுக்கு 48 வயதாகிறது
- காரைக்குடியில் போட்டியிட்டு வென்ற பிரபு 41 வயது
- சென்னை ஆர்.கே.நகரில் போட்டியிட்டு வென்ற மரிய வில்சனுக்கு 47 வயதாகிறது
- ஒட்டபிடாரம் சட்டமன்ற உறுப்பினர் மதன் ராஜாவின் வயது 41
- ராசிபுரம் எம்.எல்.ஏ., லோகேஷ் தமிழ் செல்வனுக்கு 42 வயதாகிறது
- கடலூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமாருக்கு வயது 46
- ராஜபாளையம் எம்.எல்.ஏ., ஜெகதீஸ்வரிக்கு 40 வயதாகிறது
- கோவை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் சம்பத் குமார் 47 வயதை எட்டியுள்ளார்
30+ வயது வரம்பில் எத்தனை பேர்..
- எழும்பூர் தொகுதியில் போட்டியிட்டு வென்ற ராஜ்மோகனுக்கு 39 வயது
- ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ தென்னரசு 37 வயதை எட்டியுள்ளார்
- திருவாடனையில் வெற்றி பெற்ற ராஜீவிற்கு 33 வயதாகிறது
- கும்பகோணம் எம்.எல்.ஏ வினோத்திற்கு 32 வயது மட்டுமே ஆகிறது
- ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் விஜய் பாலாஜிக்கு 39 வயதாகிறது
- ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் ரமேஷ் 31 வயதை எட்டியுள்ளார்
- கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் விக்னேஷ் வயது 38
- அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் மொஹமது பர்வேஸ் வயது 31
- தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் சரத்குமார் வயது 34
20+ வயது வரம்பில் எத்தனை பேர்..
- அவிநாசி தொகுதியில் வென்ற கமலி 28 வயதில் அமைச்சராகி மாநிலத்தின் இளம் அமைச்சராக உருவெடுத்துள்ளார்
- சிவகாசி தொகுதியில் போட்டியிட்டு வென்ற கீர்த்தனாவிற்கு 29 வயது
இளம் அமைச்சரவை:
இந்த இளம் அமைச்சரவையானது 1967ம் ஆண்டு திமுக ஆட்சி அமைத்தபோதும், 1977ம் ஆண்டு அதிமுக ஆட்சி அமைத்தபோதும் காணப்பட்டதை போன்று பல புதிய முகங்கள் நிறைந்ததாக காணப்படுகின்றன. 20 முதல் 30 வயதுக்குட்பட்டவர்களாக 2 பேரும், 30 முதல் 40 வயதுக்குட்பட்டவர்களாக 9 பேரும், 40 முதல் 50 வயதுக்குட்பட்டவர்களாக 11 பேரும், 50 முதல் 60 வயதுக்குட்பட்டவர்களாக 7 பேரும் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர்.
ட்ரெண்டிங் செய்திகள்






















