TVK Cabinet Ministers: அமைச்சர் பதவியை பெறாத 19 மாவட்டங்கள் - MLAக்கள் இருந்தும் இலாகா இல்லை - விஜய் அமைச்சரவை
TVK Cabinet Ministers Details: முதலமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் 19 மாவட்டங்களில் இருந்து ஒருவர் கூட அமைச்சராக தேர்ந்தெடுக்கப்படவில்லை.

TVK Cabinet Ministers Details: சட்டமன்ற தேர்தல் முடிவில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்திற்கு, 8 மாவட்டங்களில் இருந்து ஒரு எம்.எல்.ஏ., கிடைக்கப்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு அமைச்சரவை விரிவாக்கம்:
முதலமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதுநாள் வரை 10 பேர் மட்டுமே இடம்பெற்று இருந்த அமைச்சரவையில், இன்று புதியதாக 23 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் 2 பேர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் ஆவர். இந்நிலையில், மாநிலத்தின் 38 மாவட்டங்களில் வெறும் 19 மாவட்டங்களைச் சேர்ந்தவர்களே அமைச்சர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 20 மாவட்டங்களைச் சேர்ந்த யாரும் அமைச்சரவையில் இடம்பெறவில்லை. சில மாவட்டங்களில் சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தும் அவர்களுக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. சட்டமன்ற தேர்தல் முடிவிலேயே விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்திற்கு, 8 மாவட்டங்களில் இருந்து ஒரு எம்.எல்.ஏ., கிடைக்கப்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
19 மாவட்டங்கள்.. 33 அமைச்சர்கள்..
தமிழ்நாட்டிலேயே அதிகபட்சமாக தலைநகர் சென்னையை சேர்ந்த, முதலமைச்சர் விஜய் உள்ளிட்ட 7 எம்.எல்.ஏக்கள் அமைச்சர்களாக பொறுப்பேற்றுள்ளனர். அதனை தொடர்ந்து நாமக்கல் மாவட்டத்தில் இரண்டாவது அதிகபட்சமாக 3 பேர் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர். காஞ்சிபுரம், விருதுநகர், ஈரோடு, மதுரை, தூத்துக்குடி மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் இருந்து இரண்டு அமைச்சர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். திருப்பூர், தஞ்சாவூர், ராமநாதபுரம், கடலூர், ராணிப்பேட்டை, கன்னியாகுமரி, சேலம், திருச்சி, சிவகங்கை, புதுக்கோட்டை மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இருந்து தலா ஒருவர் அமைச்சரவைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அமைச்சர்கள் இல்லாத மாவட்டங்கள்:
- திருவள்ளூர்
- திருப்பத்தூர்
- திருவண்ணாமலை
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- அரியலூர்
- கடலூர்
- கரூர்
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- பெரம்பலூர்
- திருவாரூர்
- தர்மபுரி
- கிருஷ்ணகிரி
- நீலகிரி
- திண்டுக்கல்
- தேனி
- தென்காசி
- திருநெல்வேலி
எம்.எல்.ஏக்கள் இருந்தும்.. அமைச்சர்கள் இல்லை..
சட்டமன்ற தேர்தல் முடிவில் தனிப்பெருங்கட்சியாக தவெக உருவெடுத்தாலும், 8 மாவட்டங்களில் ஒரு தொகுதியை கூட கைப்பற்றவில்லை. அதன்படி, தென்காசி, கன்னியாகுமரி, அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், நீலகிரி, திருவாரூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் ஒரு தொகுதியை கூட தவெக கைப்பற்றவில்லை. அதேநேரம், திருவள்ளூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், கரூர், பெரம்பலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், தேனி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தும், அமைச்சரவையில் யாரும் தேர்வு செய்யப்படவில்ல்லை.
திருவள்ளூர் மாவட்டத்திற்கு ஏமாற்றம்:
தமிழக வெற்றிக் கழகம் வென்ற 108 இடங்களில் பெரும்பாலானவை வடமாவட்டங்களை சேர்ந்த தொகுதிகளாகும். அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் 9 தொகுதிகளை ஆளுங்கட்சி தான் வென்றது. ஆனால், அந்த மாவட்டத்திற்கு ஒரு அமைச்சரவை பதிவி கூட ஒதுக்காதது ஏமாற்றத்தை அளித்துள்ளது. இதேபோன்று திருநெல்வேலி மாவடட்த்தில் உள்ள 5 தொகுதிகளில் 3 தொகுதிகளையும், வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளில் 4 தொகுதிகளையும் தமிழக வெற்றிக் கழகம் தான் கைப்பற்றியுள்ளது. அப்படி இருந்தும் அந்த மாவட்டங்களில் இருந்து யாருமே அமைச்சரவையில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ட்ரெண்டிங் செய்திகள்






















