மேலும் அறிய

Senthil Balaji : ’அச்சடிச்ச மாதிரி ஒரே விண்ணப்பம்’ 400 கோடி ஊழலை செந்தில் பாலாஜி செய்தது எப்படி?

’விசாரணைக்கு சிபிஐ அழைக்கும் நேரத்தில் செந்தில்பாலாஜி கைது செய்யப்படக் கூட வாய்ப்பிருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது’

திமுக ஆட்சியில் மின்சாரத்துறை அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி மீது அடுக்கடுக்கான ஊழல் குற்றச்சாட்டுகள் அப்போதே எழுந்தன. அதிலும் அதிமுக ஆட்சியில் அவர் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது பண மோசடி செய்த வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு பல மாதங்கள் சிறையில் இருந்தார். இதனையடுத்து, அவர் சிறையில் இருந்து வெளியே வந்ததும் அவருக்கு மீண்டும் மின்சாரத்துறையை அன்றைய திமுக அரசு கொடுத்து அமைச்சர் ஆக்கியது. இந்நிலையில், அவர் அமைச்சராக இருந்தபோது மின்சாரத்துறையில் மிகப்பெரிய அளவில் ஊழல் செய்துள்ளதாக கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் புதிய வழக்கு பதிவு செய்திருக்கிறது சிபிஐ.

என்ன ஊழல்? எப்படி செய்தார் செந்தில்பாலாஜி ?

டிரான்ஸ்பார்மர் எனப்படும் மின்மாற்றிகளை கொள்முதல் செய்வதில் செந்தில்பாலாஜி 400 கோடி வரை ஊழல் செய்துள்ளதாக வழக்கு பதிவு செய்திருக்கிறது சிபிஐ. பொதுவாக ஒரு அரசிடமிருந்து ஒரு டெண்டரை நிறுவனங்கள் எடுக்க வேண்டுமென்றால் அவர்கள் தனித் தனியாக அந்த டெண்டருக்கான தொகையை குறிப்பிட்டு விண்ணப்பம் செய்வார்கள். ஒருவர் 5 ஆயிரம் குறிப்பிட்டிருந்தால் ஒருவர் 4,999 குறிப்பிட்டிருப்பார். அதில் யார் குறைந்த அளவில் விண்ணப்பம் செய்திருக்கிறார்களோ அவர்களுக்கு அந்த டெண்டர் தரப்படும். ஆனால், செந்தில்பாலாஜி செய்திருக்கும் இந்த ஊழலில் டெண்டர் அப்ளிகேஷனிலேயே முறைகேடு நடைபெற்றிருக்கிறது. குறிப்பாக, இந்த டிரான்ஸ்பார்மர் டெண்டர் எடுக்க போட்டியிட்ட 34 பேரும் ஒரே தொகையை விண்ணப்பத்தில் குறிப்பிட்டு மனு செய்துள்ளனர்.  அதாவது ஒரு மின்மாற்றி கொள்முதலுக்கு போட்டியிட்ட அத்தனை பேரும் 7 லட்சத்து 51 ஆயிரத்து 660 ரூபாயை ஒரே மாதிரியாக குறிப்பிட்டு விண்ணப்பித்துள்ளனர்.  வழக்கமாக ஒவ்வொருவரும் ஒவ்வொரு தொகையை குறிப்பிட்டு விண்ணப்பம் செய்வதே பழக்கமாகவும் வழக்கமாகவும் இருந்து வரும் நிலையில், போட்டியாளர்கள் அனைவரும் இந்த முறை ஒரே மாதிரியான தொகையை குறிப்பிட்டு விண்ணப்பம் செய்திருந்தது செந்தில்பாலாஜியின் திட்டமிட்ட செட்டிங் என்கிறது அறப்போர் இயக்கம்.

4 லட்ச ரூபாய் டிரான்ஸ்ஃபார்மரை 7 லட்சத்திற்கு கொள்முதல் செய்த செந்தில்பாலாஜி

விண்ணப்பத்தின் அடிப்படையில் அதில் ஒரு நிறுவனம் செந்தில்பாலாஜியால் தேர்வு செய்யப்பட்டு, ஒரு மின்மாற்றியை கொள்முதல் செய்ய 7 லட்சத்து 29 ஆயிரம் நிர்ணயம் செய்யப்படுகிறது. ஆனால், அந்த மின்மாற்றியின் சந்தை விலை என்னவோ 4 லட்சத்து 20 ஆயிரம் மட்டுமே. ஆக, ஒரு டிரான்ஸ்பார்மரை கொள்முதல் செய்வதில் மட்டுமே கிட்டத்தட்ட 3 லட்ச ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. டிரான்ஸ்பார்மரின் பவரின் அடிப்படையில் கோரப்பட்ட வெவ்வேறு டெண்டர்களிலும் அச்சடித்த மாதிரி ஒரே விலையை அத்தனை போட்டியாளர்களும் விண்ணப்பித்து கிட்டத்தட்ட 400 கோடி ரூபாய் டிரான்ஸ்பார்மர் கொள்முதலில் மட்டுமே செந்தில்பாலாஜி ஊழல் செய்திருப்பதாக அறப்போர் இயக்கம் கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்த புதிய வழக்கை சிபிஐ பதிவு செய்திருக்கிறது.

சிக்கலில் மீண்டும் செந்தில்பாலாஜி

இந்த வழக்கில் விரைவில் சிபிஐ செந்தில்பாலாஜிக்கு சம்மன் அனுப்பி விசாரணைக்கு ஆஜராக உத்தரவிடவிருக்கிறது. அதோடு, மின்சாரத்துறையில் மின்மாற்றி விவகாரம் மட்டுமின்றி வேறு எந்தெந்த வகையில் செந்தில்பாலாஜி ஊழல் செய்திருக்கிறார் என்பதையும் சிபிஐ தனியாக விசாரிக்க திட்டமிட்டிருக்கிறது. இதனால், செந்தில்பாலாஜிக்கு மீண்டும் சிக்கல் எழுந்திருக்கிறது. விசாரணைக்கு சிபிஐ அழைக்கும் நேரத்தில் அவர் கைது செய்யப்படக் கூட வாய்ப்பிருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.

Advertisement

தலைப்பு செய்திகள்

CM Vijay:
CM Vijay: "இந்த பக்கமே வரக்கூடாது.." கூட்டணி கட்சிகளை விரட்டிவிட்ட முதலமைச்சர் விஜய் - எதற்காக?
TVK: பழனி கோயில் விவகாரம்.. லாக்கப் மரணம்.. தவெக ஆட்சிக்கு அடுத்தடுத்து நெருக்கடி!
TVK: பழனி கோயில் விவகாரம்.. லாக்கப் மரணம்.. தவெக ஆட்சிக்கு அடுத்தடுத்து நெருக்கடி!
EPS Vs Manickam Tagore: கழுதை தேய்ந்து கட்டெறும்பானது காங்கிரஸா.? அதிமுக-வா.? EPS-ஐ கிழித்து தொங்கவிட்ட மாணிக்கம் தாகூர்
கழுதை தேய்ந்து கட்டெறும்பானது காங்கிரஸா.? அதிமுக-வா.? EPS-ஐ கிழித்து தொங்கவிட்ட மாணிக்கம் தாகூர்
EPS:
EPS: "விஜய்தான் களவாணி.." தவெக ஆட்சியை தாறுமாறாக விமர்சித்த இபிஎஸ்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

CM Vijay : சிங்கப்பூராக மாறும் பெரம்பூர்!1000 கோடியில் மெகா திட்டம்..கீரின் சிக்னல் கொடுத்த CM விஜய்
Farmers beat Officers | அதிகாரிகளை துடைப்பத்தை வைத்து அடித்த விவசாயிகள்
Madurai Accident : அசுர வேகத்தில் ஆம்னி பேருந்து! அடுத்து நடந்த கொடூர விபத்து.. 5 பேர் பலியான சோகம்
Chief Minister special cell petition | ”உடனே பண்ணி கொடுங்க CM
Karnataka govt bus | GOVT BUS-ல் அத்துமீறிய நபர்! கண்ணம் சிவக்க பளார் பளார்! பொளந்தெடுத்த இளம்பெண்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay:
CM Vijay: "இந்த பக்கமே வரக்கூடாது.." கூட்டணி கட்சிகளை விரட்டிவிட்ட முதலமைச்சர் விஜய் - எதற்காக?
TVK: பழனி கோயில் விவகாரம்.. லாக்கப் மரணம்.. தவெக ஆட்சிக்கு அடுத்தடுத்து நெருக்கடி!
TVK: பழனி கோயில் விவகாரம்.. லாக்கப் மரணம்.. தவெக ஆட்சிக்கு அடுத்தடுத்து நெருக்கடி!
EPS Vs Manickam Tagore: கழுதை தேய்ந்து கட்டெறும்பானது காங்கிரஸா.? அதிமுக-வா.? EPS-ஐ கிழித்து தொங்கவிட்ட மாணிக்கம் தாகூர்
கழுதை தேய்ந்து கட்டெறும்பானது காங்கிரஸா.? அதிமுக-வா.? EPS-ஐ கிழித்து தொங்கவிட்ட மாணிக்கம் தாகூர்
Netanyahu Warns Iran: இந்தா வந்துட்டார்ல.! ஈரானுக்கு புதிய எச்சரிக்கையை விடுத்த நெதன்யாகு; என்ன சொல்லி இருக்கார்.?
இந்தா வந்துட்டார்ல.! ஈரானுக்கு புதிய எச்சரிக்கையை விடுத்த நெதன்யாகு; என்ன சொல்லி இருக்கார்.?
உசிலம்பட்டி சூதாட்ட கும்பல் கைது: 4.21 லட்சம் பறிமுதல், 7 பேருக்கு வலைவீச்சு!
உசிலம்பட்டி சூதாட்ட கும்பல் கைது: 4.21 லட்சம் பறிமுதல், 7 பேருக்கு வலைவீச்சு!
TVK vs ADMK:
TVK vs ADMK: "திமுக-வுடன் கூட்டுக்களவாணி ஆட்சி.. கொடநாடைப் பேசினால் நடுங்குபவர்.." இபிஎஸ்-ஐ விளாசிய தவெக!
Special Bus: வார லீவு.. ஊருக்கு போறீங்களா? ஸ்பெஷல் பஸ் ரெடியா இருக்குது! எங்கே இருந்து எவ்வளவு பேருந்துகள்?
Special Bus: வார லீவு.. ஊருக்கு போறீங்களா? ஸ்பெஷல் பஸ் ரெடியா இருக்குது! எங்கே இருந்து எவ்வளவு பேருந்துகள்?
MG Hybrid SUV India launch: No டென்ஷன்.! டேங்க்க ஃபில் பண்ணா 1,000 கிமீ போய்ட்டே இருக்கலாம்; புதிய ஹைப்ரிட் SUV-ஐ இறக்கும் MG
No டென்ஷன்.! டேங்க்க ஃபில் பண்ணா 1,000 கிமீ போய்ட்டே இருக்கலாம்; புதிய ஹைப்ரிட் SUV-ஐ இறக்கும் MG
Embed widget