மேலும் அறிய

VanniArasu: ஆணவ படுகொலைக்கு தனிசட்டம், புது காவல் படை.. TVK அரசு செய்யும் - அமைச்சர் வன்னி அரசு

Minister Vanniyarasu: தமிழ்நாட்டில் ஆணவப் படுகொலைகளை தடுக்க தனிச்சட்டம் கொண்டுவரப்படும் என அமைச்சர் வன்னியரசு தெரிவித்துள்ளார்.

Minister Vanniyarasu: சாதி அடிப்படையிலான பிரச்னைகளை கையாள காவல்துறையில் தனிப்பிரிவு உருவாக்கப்படும் என்றும் அமைச்சர் வன்னியரசு தெரிவித்துள்ளார்.

அமைச்சர் வன்னியரசு நேரில் ஆறுதல்

திருநெல்வேலி மாவட்டம்  ஆலங்குளம், மானூா் பகுதிகளில் நடைபெற்ற அாிவாள் வெட்டு சம்பவங்களில் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை அமைச்சர் வன்னியரசு நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். தொடர்ந்து செய்தியாளர்களிடையே பேசுகையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் ஆண்டாண்டு காலங்களாக இத்தகைய சம்பவங்கள் தொடர்கின்றன. இதற்கு நிரந்த தீர்வு இல்லையா? என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அமைச்சர், “ஏற்கனவே நெல்லை, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களை வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும் என விசிக கோரிக்கை விடுத்து இருந்தது. இதுதொடர்பாக முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று, அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை அறிவிப்போம். இது ஒரு முக்கியமான பகுதியாகவும், இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டும் உள்ளன. தடுத்து நிறுத்துவதற்கான அவசர நடவடிக்கைகள் விரைந்து எடுப்போம்” என அமைச்சர் வன்னியரசு உறுதியளித்தார்.

காவல்துறையில் தனிப்படை

சாலையில் செல்வபவர்களை தாக்கும் புது கலாச்சாரம் வளர்ந்து வருகிறதா? என்ற கேள்விக்கு, “இத்தகைய சம்பவங்கள் ஏற்கனவே நடந்துள்ளன. போகிற போக்கில் இந்த சம்பவங்கள் ஏதும் நடைபெறவில்லை. காவல்துறை அதிகாரிகளின் கவனத்திற்கும் இந்த விவகாரத்தை கொண்டு சென்றுள்ளோம். புறச்சூழல்களையும் கண்டறிந்துள்ளோம். தொடர்ந்து இத்தகைய நிழவுகளை தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுப்போம். சாதி தொடர்பான பிரச்னைகளை கையாள தனி காவல்படை அமைக்க வேண்டும் என்பது தொடர்பான கோரிக்கை குறித்தும் முதலமைச்சர் உடன் கலந்தாலோசிக்க உள்ளோம். சாதி அடிப்படையிலான மோதல்கள் அடிக்கடி நடக்கும் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்றுவது குறித்து பரிசீலிப்போம். குற்றவாளிக்ள் மீது கடுமையான பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, கடுமையான தண்டனை பெற்றுக் கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். இளைஞர்களுக்கு வேலவாய்ப்புகள் போன்றவற்றை ஏற்படுத்திக் கொடுத்தி, சமூக நல்லிணக்கத்தை பேணுவதையும் அரசு உறுதிகொண்டுள்ளது” என அமைச்சர் வன்னி அரசு கூறினார்.

ஆணவப் படுகொலைக்கு தனிச்சட்டம்

ஆணவ படுகொலைகளை தடுக்க தனிச்சட்டம் கொண்டு வரப்படுமா? என்ற கேள்விக்கு, “சட்டப்பேரவையில் பேசும்போது எனது முதல் உரையிலேயே இதுதொடர்பாக கோரிக்கை வைத்தேன். ஆணவ படுகொலைகள் தடுப்புச் சட்டம் கொண்டுவருவதற்கு நீதியரசர் பாட்ஷா தலைமையில் அமைக்கப்பட்ட குழு வழங்கும் அறிக்கை தொடரும். அதன் அடிப்படையில் வருகின்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரிலேயே புதிய சட்டம் கொண்டு வருவதற்காக கட்டாயம் நடவடிக்கை எடுப்போம்.? என அமைச்சர் வன்னி அரசு பதிலளித்துள்ளார்.

தவெக அரசு சாதிக்குமா?

ஆணவப் படுகொலை தடுக்க தனிச்சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்பது பல்வேறு அமைப்புகளின் நீண்டகால கோரிக்கைகளாக உள்ளது. திமுக மற்றும் அதிமுக மாறி மாறி ஆட்சிக்கு வந்தாலும், அதனை நடைமுறைப்படுத்தவில்லை. சமூக ரீதியான வாக்குகளை இழந்துவிடுவோமோ என்ற அச்சமும் அதற்கு காரணமாக கூறப்பட்டது. இந்நிலையில் தான், கடந்த ஆண்டு இதுதொடர்பாக ஆணையம் ஒன்றை அமைப்பதாக அப்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார். இந்நிலையில், விரைவில் ஆணவப் படுகொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்றப்படும் என அமைச்சர் வன்னி அரசு அறிவித்துள்ளார். இதனை முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு சாதிக்குமா? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

DMK: கொஞ்சம் கூட மரியாதை கொடுக்கல..! தவெக-வை தரம் தாழ்ந்து பேசிய முன்னாள் திமுக அமைச்சர் - நீங்களே பாருங்க
DMK: கொஞ்சம் கூட மரியாதை கொடுக்கல..! தவெக-வை தரம் தாழ்ந்து பேசிய முன்னாள் திமுக அமைச்சர் - நீங்களே பாருங்க
Seeman on Maridhas Arrest : ’அதிகார திமிரின் உச்சம்' மாரிதாஸூக்காக பொங்கி எழுந்த சீமான்..!
’அதிகார திமிரின் உச்சம் – அரசியல் பழிவாங்கல்’ மாரிதாஸூக்காக பொங்கி எழுந்த சீமான்..!
C. Vijayabasker : 'திமுகவில் இணைகிறார் அதிமுக C. விஜயபாஸ்கர்?’ விரைவில் அறிவிப்பு..!
'திமுகவில் இணைகிறார் அதிமுக C. விஜயபாஸ்கர்?’ விரைவில் அறிவிப்பு..!
Vijay vs Nainar Nagendran : பொம்மை, பொம்மை, பொம்மை பார்.! ஜோசப் விஜய் எனும் முதல்வர் பொம்மை பார்- இறங்கி அடிக்கும் நயினார் நாகேந்திரன்
பொம்மை, பொம்மை, பொம்மை பார்.! ஜோசப் விஜய் எனும் முதல்வர் பொம்மை பார்- இறங்கி அடிக்கும் நயினார் நாகேந்திரன்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

C Vijayabaskar: திமுக போகும் விஜயபாஸ்கர்? கட்சியில் முக்கிய பொறுப்பு ஸ்டாலின் கணக்கு என்ன?
Dindigul TVK | ”மா.செ-வை உடனே மாத்துங்க” தவெகவில் கோஷ்டி பூசல்! அமைச்சரை சந்திப்பதில் சண்டை
Perambur murder | துண்டு துண்டாக கிடந்த கணவர்!உள்ளாடையால் சிக்கிய மனைவி!கள்ளக்காதலனுடன் சதித்திட்டம்
DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji Vs CBI: செந்தில் பாலாஜிக்கு சிக்கலுக்கு மேல் சிக்கல்.! புதிய முறைகேடு வழக்கு பதிந்த சிபிஐ - எதற்காக தெரியுமா.?
செந்தில் பாலாஜிக்கு சிக்கலுக்கு மேல் சிக்கல்.! புதிய முறைகேடு வழக்கு பதிந்த சிபிஐ - எதற்காக தெரியுமா.?
போன், நெட் வசதிக்கு நோ, ஜூன் 21 தனிமை: நீட் தேர்வு வினாத்தாள் குழுவுக்கு டைட் செக்யூரிட்டி!
போன், நெட் வசதிக்கு நோ, ஜூன் 21 தனிமை: நீட் தேர்வு வினாத்தாள் குழுவுக்கு டைட் செக்யூரிட்டி!
Masoud Pezeshkian: 'நாங்கள் பின்வாங்க மாட்டோம்' அச்சுறுத்தல்களுக்கு எதிராக நாட்டை பாதுகாப்போம் - ஈரான் அதிபர் சூளுரை
'நாங்கள் பின்வாங்க மாட்டோம்' அச்சுறுத்தல்களுக்கு எதிராக நாட்டை பாதுகாப்போம் - ஈரான் அதிபர் சூளுரை
ஒரே சார்ஜில் 160 கிலோமீட்டர் வரை மைலேஜ்! மாஸா, ஸ்டைலா போறதுக்கு OPG Mobility Faast F4 இ ஸ்கூட்டர் - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 160 கிலோமீட்டர் வரை மைலேஜ்! மாஸா, ஸ்டைலா போறதுக்கு OPG Mobility Faast F4 இ ஸ்கூட்டர் - விலை எவ்ளோ?
Minister Nirmal Kumar: மின்வாரிய ஊழியர்களுக்கு ஜாக்பாட்.! பதவி உயர்வு, ஆள் சேர்ப்பு - அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்புகள்
மின்வாரிய ஊழியர்களுக்கு ஜாக்பாட்.! பதவி உயர்வு, ஆள் சேர்ப்பு - அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்புகள்
25 வயது இளம் பெண் மீது 65 முதியவருக்கு ஆசை !! தனிமையில் இருந்த இளம் பெண் வெட்டி கொலை
25 வயது இளம் பெண் மீது 65 முதியவருக்கு ஆசை !! தனிமையில் இருந்த இளம் பெண் வெட்டி கொலை
’’வெட்கமா இல்லையா விஜய் அரசே? தினமும் ஸ்டிக்கர் ஒட்டுவதை நிறுத்து’’ வெளுத்துவாங்கும் திமுக!
’’வெட்கமா இல்லையா விஜய் அரசே? தினமும் ஸ்டிக்கர் ஒட்டுவதை நிறுத்து’’ வெளுத்துவாங்கும் திமுக!
Trump Warns Israel Iran: “இஸ்ரேலும், ஈரானும் தாக்குதல்களை உடனே நிறுத்த வேண்டும்“ - ட்ரம்ப்பின் லேட்டஸ்ட் எச்சரிக்கை
“இஸ்ரேலும், ஈரானும் தாக்குதல்களை உடனே நிறுத்த வேண்டும்“ - ட்ரம்ப்பின் லேட்டஸ்ட் எச்சரிக்கை
Embed widget