TN Assembly Session Today LIVE: சட்ட பேரவையில் கேள்வி நேரம் தொடங்கியது..!

TN Assembly Session Today LIVE: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று நடைபெறவுள்ள நிகழ்வுகள் குறித்து உடனுக்குடன் தெரிந்து கொள்ள ஏபிபி நாடுவுடன் இணைந்து இருங்கள்.

த. மோகன்ராஜ் மணிவேலன் Last Updated: 24 Mar 2023 11:45 AM
ஒப்பந்தத்தை பின்பற்றாத என்.எல்.சி - வேல்முருகன் எம்.எல்.ஏ கவன ஈர்ப்புத் தீர்மானம்..!

 என்.எல்.சி நிர்வாகம் அரசுடன் போட்ட ஒப்பந்தத்தினை பின்பற்றவில்லை என வேல்முருகன் எம்.எல்.ஏ பேசி கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்துள்ளார். 

தேர்வு எழுதாத மாணவர்கள்..!

தேர்வு எழுதாத மாணவர்களைக் கண்டறிந்து அவர்களை தேர்வுக்கு தயார் செய்யும் பணி நடைபெற்றுவருகிறது என  அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார். 

வாழ்த்து சொல்வது மட்டும் வேலை இல்லை..!

பொதுத் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு வாழ்த்துச் சொல்வது மட்டும் எனது பணி அல்ல என அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார். 

அமைச்சர் பதில்,

பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எதிர்கட்சிகள் கொண்டுவந்த கவன ஈர்ப்புத் தீர்மானத்திற்கு பதில் அளித்து வருகிறார். 

எதிர்க்கட்சிகளின் கவன ஈர்ப்புத் தீர்மானம்..!

அதிமுக, காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள், பாமக உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் 12வகுப்பு மாணவர்களில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தமிழ் தேர்வு எழுதாத நிலையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்துள்ளனர். 

வினா-விடை நேரம் முடிந்தது..!

சட்டப்பேர்வையில் வினா விடை நேரம் முடிவடைந்ததாக சபாநாயகர் அறிவித்துள்ளார். 

அமைச்சர்கள் பதில்..!

சட்டமன்ற உறுப்பினர்கள் கேட்கும் கேள்விக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். 

கேள்வி நேரம்..!

சட்டபேரவையில் கேள்வி நேரம் தொடங்கி நடைபெற்றுவருகிறது.  

Background

சட்டசபையில் இன்று பட்ஜெட் மீதான விவாதம் தொடங்குகிறது. கடந்த 20ஆம் தேதி நிதிநிலைக்கான பட்ஜெட்டை நிதி துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். அதற்கு அடுத்த நாள் வேளாண் துறைக்கான் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில் பல்வேறு சிறப்பு அறிவிப்புகள் வெளியானது. இந்த நிலையில் இன்று பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறுகிறது.


முதலில் இரங்கல் தீர்மானத்தை சபா நாயகர் அப்பாவு வாசித்தார். அதில் மறைந்த பாடகி  வாணி ஜெய்ராம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இன்று கேள்வி நேரம் இல்லாமல், நேரமில்லா நேரம் முதலில் நடத்தப்பட்டது. அதில் மக்கள் பிரச்சனைகள் குறித்து பேசப்பட்டது. முக்கியமாக ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா இரண்டாவது முறையாக நிறைவேற்றப்பட்டது. சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர், “ஆன்லைன் ரம்மி தடைச் சட்டம் அறிவால் மட்டுமல்ல இதயத்தாலும் உருவாக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார். மேலும், இதுவரை 41 பேர் ஆன்லைன் சூதாட்டம் மூலம் உயிரிழந்துள்ளதாக தெரிவித்து மீண்டும் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை தாக்கல் செய்தார். 


இந்த தடை சட்ட மசோதா ஒரு மனதாக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.  இதனை முதலமைச்சர் மீண்டும் ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கிறார்.


ஏற்கெனவே நிறைவேற்றப்பட்ட மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. ஆனால் ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் தமிழ்நாடு அரசு போதிய விளக்கங்கள் அளிக்கவில்லை என கூறி திருப்பி அனுப்பியது பெரும் அதிர்ச்சியையும் அதிருப்தியையும் தமிழ்நாடு அரசியலில் ஏற்படுத்தியது.


இதனிடையே இதை பற்றி விளக்கம் அளித்த மத்திய அமைச்சர் அனுராக்சிங் தாக்கூர், ஆன்லைன் சூதாட்டம் பற்றி சட்டம் இயற்ற அரசியலமைப்பு சட்டத்தின் 7வது அட்டவணையில் 34வது பிரிவின் அடிப்படையில் அனைத்து அதிகாரமும் உள்ளது என குறிப்பிட்டார்.


ஏற்கனவே ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் மீண்டும் திருப்பி அனுப்பிய நிலையில், கடந்த சில தனங்களுக்கு முன் முதலமைச்சர் தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் இன்று நடைபெறும் பட்ஜெட் மீதான விவாதத்தின் போது இரண்டாவது முறையாக சட்ட மசோதா தாக்கல் செய்யப்படும் என குறிப்பிட்டிருந்தார். ஆன்லைன் சூதாட்டம் மூலம் தமிழ்நாட்டில் பல உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்கும் விதமாக இந்த தடை மசோதா நிறைவேற்றப்பட்டது. இம்முறை இந்த தடை சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளிப்பார் என நம்பப்படுகிறது.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.