TMC Rift: ”கட்சிக்கு நீங்க தான் தலைவர், ஆனா சட்டமன்றத்த நாங்க பாத்துக்குறோம்” மம்தாவுக்கு ஆர்டர் போடும் MLAக்கள்
TMC Rift: திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு தலைவராக தொடருங்கள் ஆனால், சட்டமன்ற குழு தலைவரை நாங்கள் தேர்வு செய்கிறோம் என எம்.எல்.ஏக்கள் கூறுவது மம்தா பானர்ஜியை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

TMC Rift: திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அபிஷேக் பானர்ஜி கட்டுப்பாட்டில் இயங்குவதை, 60 எம்.எல்.ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அதிருப்தியில் 60 எம்.எல்.ஏக்கள்
திரிணாமூல் காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களான ரிதாப்ரதா பானர்ஜி மற்றும் சந்திபன் சாஹா ஆகியோர், மம்தா பானர்ஜியை கட்சியின் தலைவராக தொடர வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். அதேநேரம், தன்னை கட்சியின் சட்டமன்றக் குழு தலைவராக நியமிக்க வேண்டும் என வலியுறுத்தி, 58 எம்.எல்.ஏக்களின் கையொப்பம் அடங்கிய ஆதரவு கடிதத்தை சபாநாயகரிடம் ரிதாப்ரதா பானர்ஜி வழங்கியுள்ளார். அவருக்கு ஆதரவு தெரிவிக்க மேலும் இரண்டு திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது. கட்சியை ஒரு கார்ப்ரேட் நிறுவனத்தை போன்று நடத்தும் அபிஷேக் பானர்ஜிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவே இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக ரிதாப்ரதா பானர்ஜி தரப்பினர் தெரிவிக்கின்றனர். இதன் மூலம், தனது மருமகன் அல்லது கட்சியின் பெரும்பான்மையான சட்டமன்ற உறுப்பினர்கள், இரண்டில் எதை மம்தா தேர்வு செய்வார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கட்சிழையே இழக்கும் அபாயம்..!
மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தல் முடிவில், 15 ஆண்டுகளாக ஆளுங்கட்சியாக இருந்த திரிணாமுல் காங்கிரஸ் வெறும் 80 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. அதில் 60 எம்.எல்.ஏக்கள் தற்போது கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ரிதாப்ரதா பானர்ஜியும் சந்திபன் சாஹாவின் ஆதரவில் உள்ளனர். இதனால், மூன்றில் இரண்டு பங்கு என்ற பெரும்பான்மையானவர்களின் ஆதரவு இருப்பதால், கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கையும் எடுக்க முடியாது. ஒருவேளை, அதிருப்தியாளர்களின் கோரிக்கையை மம்தா பானர்ஜி நிராகரித்தால் திரிணாமுல் காங்கிரஸ் இரண்டாக உடையும் சூழல் உள்ளது. சட்டமன்றத்தில் கட்சிக்கு 80 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ள நிலையில், மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மைக்குத் தேவையான சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 53 ஆக உள்ளது. அதன்படி அவர்கள் கட்சிக்கு உரிமை கோரினால் கட்சி மற்றும் சின்ன என அனைத்தையும் மம்தா பானர்ஜி இழக்க நேரிடும்.
போலி கையொப்பம் பிரச்னை..
முன்னதாக எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் தலைமைக் கொறடா ஆகியோரின் பெயர்களைக் குறிப்பிடும் கட்சியின் தீர்மான ஆவணத்தில், தங்களுடைய கையொப்பம் உட்பட பல திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் கையொப்பங்கள் போலியாகப் போடப்பட்டதாக ரிதாப்ரதா, சந்திபன் சாஹா ஆகியோர் குற்றம்சாட்டி இருந்தனர். இதுதொடர்பாக சபாநாயகரிடமும் புகார் அளித்து இருந்தனர். இதன் காரணமாக அவர்கள் இருவரும் உடனடியாக கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். ஆனால் அவர்கள் இருவருமே பல திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுடன் தொடர்பில் இருப்பதாக கூறப்பட்டது. அதனை உணர்த்தும் விதமாகவே தற்போது பெரும்பான்மையான எம்.எல்.ஏக்களின் ஆதரவு கடிதத்தையும் சமர்பித்துள்ளார்.
தனித்துவிடப்படும் மம்தா பானர்ஜி?
சமீபத்தில் நடந்த தேர்தலில் ஆட்சியை இழந்த பிறகு, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி தனது கட்சி எம்.எல்.ஏக்களின் ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்து இருந்தார். ஆனால் கட்சியின் 80 சட்டமன்ற உறுப்பினர்களில் , பெரும்பாலும் பழைய தலைவர்களான எட்டு பேர் மட்டுமே வந்திருந்தனர். தொடர்ந்து நேற்று அவர் நடத்திய அரசுக்கு எதிரான தர்ணாவிலும் ஒற்ற்2
ட்ரெண்டிங் செய்திகள்






















