சேலம் மாவட்டம் எடப்பாடி பயணியர் மாளிகையில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் எடப்பாடி நகராட்சியில் 12 வது வார்டு திமுக கவுன்சிலர் ரவி தலைமையில் நூற்றுக்கு மேற்பட்டோர் திமுகவில் இருந்து விலகி அதிமுக கட்சியில் இணைந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியது, ஆன்லைன் சூதாட்டத்தால் திமுக அரசு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் கூட்டப்பட்டு அதில் ஆன்லைன் ரம்மியை தடை செய்ய சட்டம் இயற்றப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது. இதை வேகமாக துரிதமாக நிறைவேற்றினால் இனி விலைமதிப்பற்ற உயிர்களை காப்பாற்றலாம் இதை உணர்ந்து அரசு செயல்பட வேண்டும். தமிழகத்தில் முக்கிய பொறுப்பில் உள்ள மூத்த அமைச்சர் பொதுக் கூட்டத்தில் கருத்தை வெளியிடுவது வருந்ததக்கது. ஏழை, எளிய பெண்கள் தான் நகர பேருந்தில் கட்டணம் இல்லாமல் பயணம் செய்து வருகிறார்கள். அவர்களை கொச்சைப்படுத்தி பேசுவது சரியல்ல வருந்தத்தக்கது. இதேபோன்று பல திமுக அமைச்சர்கள் மக்களை அவமானப்படுத்தும் விதமாக பேசுவது கண்டிக்கத்தக்கது.



திமுகவிற்கு நிர்வாகக்கோளாறு, நிர்வாக திறமையற்ற முதலமைச்சர் தமிழகத்தை ஆண்டு கொண்டு உள்ளார். இது நிரூபணமாகியுள்ளது. சென்னை மாநகரில் மழைகளில் பணி செய்தால் தண்ணீர் ஆங்காங்கே தேங்கி மக்கள் பாதிக்கப்படுபவர்கள். இதுமுறையாக கடைபிடிக்கப்படாததால் சென்னை மாநகரில் பல்வேறு வீதிகளில் பள்ளத்தை தோண்டி விட்டு பணிகளை தொடராமல் உள்ளது வேதனைக்குரியது. இதே திட்டமிட்டு செயல்படுத்தி இருக்கவேண்டும். ஆனால் திமுகவிற்கு அதுபோன்ற செயல்பாடுகள் காணமுடியவில்லை, திட்டமிட்டு பணிகள் செய்வதில்லை வருகின்ற பருவமழையின் போது நிச்சயம் சென்னை மாநகரம் பாதிக்கக்கூடும் என்றும் கூறினார். குடிமராமத்து திட்டபணிக்காக திமுக அரசு எந்த ஒரு நிதியையும் ஒதுக்கவில்லை. நீர் பற்றாக்குறையான தமிழகத்தில் ஒரு சொட்டு தண்ணீரை கூட வீணாக்காமல் சேமிப்பது நமது கடமை. அரசியல் பார்க்காமல் மக்கள் நலனுக்காக குடிமராமத்து திட்ட பணியை தொடர வேண்டும். மக்கள் நலனுக்காக அதிமுக அரசு கொண்டு வந்த நல்ல திட்டங்களை, திமுக அரசு தற்போது முடக்கி வருகிறது. அதிமுக கட்சியை சிலர் திட்டமிட்டு, சிலபேரின் தூண்டுதல்பெயரில் பிளக்கவோ, உடைக்கவோ, முடக்கவோ பார்க்கிறார்கள்; அது ஒருபோதும் நடக்காது உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணை விரைவில் முடியும், முடிந்தபிறகு பொதுச்செயலாளர் தேர்தல் நடைபெறும்.



அதிமுகவை முடக்க நினைப்பவர்கள் காற்றோடு கரைந்து போவார்கள். அதிமுகவில் இருந்து பிரிந்தவர்கள் மீண்டும் 100 சதவீதம் ஒன்றிணைப்பதற்கு வாய்ப்பே இல்லை. அதிமுகவுக்கு எதிராக செயல்படுபவர்கள் மற்றவர்கள் தூண்டுதல்பேரில் கருத்துக்களை கூறுகிறார்கள். அதிமுக அபரிவிதமாக விதமாக வளர்ச்சி கண்டுகொண்டிருக்கும் நிலையில் வேண்டுமென்றே சிலபேர் அதிமுகவிற்கு குந்தகம் விளக்கும் வகையில், அவதூறு பரப்பி வருகின்றனர். அவர்களுக்கு அதிமுகவில் இனி இடமில்லை, அதிமுகவை இனி தொண்டர்கள் தான் முன்னிருந்து கட்சியை நடத்துவார்கள் என்றும் பேசினார். தமிழகத்தில் சட்ட ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுவிட்டது. இதுதொடர்கதையாக உள்ளது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க மத்தியஅரசு தனிக்கவனம் செலுத்தவேண்டும் மற்றும் போதைபொருட்கள் நிறைந்த மாநிலமாக தமிழகம் திகழ்ந்து கொண்டு உள்ளது. இதை தடை செய்வதற்கு மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அமைச்சர் அமிஷாவிடம் கருத்துகளை தெரிவித்துள்ளதாக கூறினார்.