சென்னையில் நேற்று நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய ஆதவ் அர்ஜுனா, திருமாவளவன் மேடையில் இல்லை, ஆனால் அவரது மனசாட்சி இங்கு தான் இருக்கிறது. பாஜகவை தமிழ்நாட்டில் ஒழித்துவிட்டோம். 2026ல் தமிழ்நாட்டில் மன்னர் ஆட்சியை ஒழிக்க வேண்டும். தமிழ்நாட்டில் இனி பிறப்பால் முதலமைச்சர் உருவாகக் கூடாது. தமிழ்நாட்டில் ஒரு பொதுத்தொகுதியில் இன்று வரை ஒரு தலித் வேட்பாளரை நிறுத்த முடியவில்லை, ஆட்சி அதிகாரத்தில் பங்கு என ஏன் சொல்லக் கூடாது?. விஜய் வேங்கை வயலுக்கு செல்ல வேண்டும். நீங்க களத்துக்கு வாங்க” என ஆதவ் அர்ஜுனா பேசினார்.
விஜய் பரபரப்பு பேச்சு
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய விஜய், “தேர்தல் நேர்மையாக, வெளிப்படையாக நடக்க வேண்டும் என்றால் தேர்தல் ஆணையர்கள் ஒருமித்த கருத்தால் நியமிக்கப்பட வேண்டும். சம்பிரதாயத்திற்காக மழை தண்ணீரில் நின்று போட்டோ எடுக்கும் அரசியல்வாதி நான் அல்ல. மக்களோடு என்றும் நான் இருப்பேன். விடுதலை சிறுத்தை தலைவரான திருமாவளன், அம்பேத்கரின் புத்தக வெளியீட்டு விழாவிலேயே கலந்து கொள்ள முடியாத அளவுக்கு கூட்டணி கட்சியின் அழுத்தம் இருந்தாலும். அவரது மனம் முழுவதும் இங்கதான் இருக்கும். திருமாவிற்கு கொடுக்கப்படும் அழுத்தத்தை என்னால் முழுமையாக உணர முடிகிறது” என பேசினார். இந்தநிலையில் சென்னை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
விசிக தலைவர் தொல் திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டி
விழாவில் பங்கேற்ற இயலாமல் போனதற்கு எந்த அழுத்தமும் காரணமில்லை. சுதந்திரமாக நான் எடுத்த முடிவு. நான் கலந்து கொண்டிருந்தால் இதை வைத்து அரசியல் செய்யும் சிலர் இதை திசை திருப்புவதற்கும் திரிபுவாதம் செய்வதற்கும் வாய்ப்புள்ளது. பணிந்து, முடிவெடுக்க இயலாமல் தேங்கி நிற்கிற நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இல்லை என தெரிவித்தார்.
எந்த ஒரு முறையான அறிவிப்பு வெளியாகும் முன்னரே ஒரு நாளிதழ் தலைப்புச் செய்தியாகிவிட்டது. அப்பொழுதுதான் முதல்முறையாக இந்த சர்ச்சை உருவானது. ஆதவ் அர்ஜுனா பேசிய கருத்திற்கு எனக்கு உடன்பாடு இல்லை. அந்தக் கருத்தை நானும், விடுதலை சிறுத்தைகள் கட்சியும் மறுக்கிறது. ஆதவ் அர்ஜுனாவிடம் உயர்நிலைக் குழுவின் சார்பில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும்.
போராட்டத்தை முன்னெடுக்கவில்லை
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாதது எனக்கு எந்த நெருடலும் இல்லை. கட்சியின் நலன் மற்றும் கூட்டணி நலன் கருதி சனாதன சக்திகளின் சூழ்ச்சியில் சிக்காமல் இருக்க உறுதிப்பாட்டுடன் எடுக்கப்பட்ட முடிவு. குற்றவாளிகளை மூடி மறைப்பதற்கு தமிழ்நாடு அரசிற்கு எந்த ஒரு தேவை இல்லை என்பது அதிகாரிகள் விளக்கி இருக்கிறார்கள்.
வேங்கைவையில் குறித்து பேசும் விஜய் எந்த ஒரு போராட்டத்தையும் முன்னெடுக்கவில்லை. எதிர்க்கட்சிகள் எங்கே போராட்டம் நடத்தி இருக்கிறார்கள் அவர்கள் ஏன் போராட்டம் நடத்தவில்லை என யாரும் கேள்வி கேட்கவில்லை திருமாவளவன் ஏன் போராட்டம் நடத்தவில்லை என்று கேள்வி கேட்கிறார்கள்.
மணிப்பூர் விவகாரத்தில் போராட்டம் நடத்தி இருக்கிறோம். இந்திய ஒன்றிய அரசு மணிப்பூர் விவகாரத்தில் எவ்வளவு மெத்தனமாக இருந்தது என்று தெரியும். திமுக அரசை குறை கூற வேண்டும், அதை மட்டும் கூறினால் சரியாக இருக்காது என தெரிந்து அவ்வப்பொழுது பிஜேபியும் தொட்டு காட்டுகிறார்கள் சிலர் என மறைமுகமாக விஜய்யை விமர்சித்துள்ளார் என தெரிவித்தார்.