மேலும் அறிய

VCK Thiruma: 25 வருட காத்திருப்பு..! புறக்கணித்த (அ)திமுக - விசிகவை அமைச்சரவையில் இணைத்த CM விஜய்

VCK Thiruma TN Cabinet: விசிக சார்பில் வன்னியரசு முதலமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் இணைய உள்ளதாக, திருமாவளவன் அறிவித்துள்ளார்.

VCK Thiruma TN Cabinet: தமிழ்நாடு அமைச்சரவை வரலாற்றில் முதன்முறையாக விசிக அங்கம் வகிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

விஜய் அமைச்சரவையில் விசிக:

முதலமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் விசிகவும் இடம்பெற வேண்டும் என, ஆளுங்கட்சியான தவெக சார்பில் வெளிப்படையாக அழைப்பு விடுக்கப்பட்டது. இதுதொடர்பாக நிர்வாகிகளுடன் விரிவான ஆலோசனையில் திருமாவளன ஈடுபட்டார். அதன் முடிவில் பெரும்பாலான நிர்வாகிகளின் விருப்பத்தின் பேரில், தவெக அமைச்சரவையில் விசிக இடம்பெற உள்ளதாக திருமாவளவன் அறிவித்துள்ளார். அதன்படி, அக்கட்சி சார்பில் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களாக தேர்வான நிலையில், வன்னியரசு அமைச்சரவையில் இடம்பெறுவார் எனவும் தெரிவித்துள்ளார். இதன் மூலம், தமிழ்நாடு அமைச்சரவை வரலாற்றில் முதன்முறையாக விசிக அங்கம் வகிக்க உள்ளது. தொடர்ந்து, நாளை நடைபெறும் என கூறப்படும் பதவியேற்பு விழாவில்,  அமைச்சரவையில் காலியாக உள்ள ஆதிதிராவிடர் நலன்துறை விசிகவிற்கு ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

25 வருட காத்திருப்பு முடிந்தது..

ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்பது விசிகவின் முழக்கமாக உள்ளது. ஆனால், கடந்த 2001ம் ஆண்டு சட்டமன்ற பிரதிநிதித்துவத்தை பெற்றாலும் இதுவரை ஒருமுறை கூட விசிகவால் அமைச்சரவையில் இடம்பெற முடியவில்லை. திமுக மற்றும் அதிமுக கட்சிகளின் கூட்டணியில் மாறி மாறி அங்கம் வகித்தாலும், அமைச்சரவையில்கூட்டணி கட்சிகளுக்கான அங்கீகாரம் தொடர்ந்து மறுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தவெகவின் முதல் மாநாட்டில் பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய், கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்களிக்கப்படும் என அறிவித்தார். அப்போது அதனை யாரும் பொருட்படுத்தவில்லை.  ஆனால் அதனை உண்மையாக்கி தவெக உறுப்பினர்களுக்கு மட்டுமின்றி, ஆட்சி அமைக்க ஆதரவு அளித்துள்ள காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளுக்கும் அமைச்சரவையில் இடமளிப்பதை விஜய் உறுதி செய்துள்ளார். 

நாளை 2 அமைச்சர்கள் பதவியேற்பு:

முதலமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் கடந்த 10ம் தேதி 9 அமைச்சர்கள் பதவியேற்றனர். தொடர்ந்து இன்று தவெக தரப்பில் இருந்து 21 பேர், காங்கிரஸ் சார்பில் 2 பேர் என மொத்தம் 23 அமைச்சர்கள் புதியதாக பதவியேற்றனர். இதன் மூலம் அமைச்சரவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்தது. இந்நிலையில் விசிக சார்பில் வன்னியரசு மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் ஷாஜகான் ஆகியோர் நாளை காலை 10 மணிக்கு ஆளுநர் மாளிகையில் பொறுப்பேற்பார்கள் என கூறப்படுகிறது. அவர்களுக்கு முறையே ஆதிதிராவிடர் நலன் மற்றும் சிறுபான்மை நலன் இலாகாக்கள் ஒதுக்கப்பட உள்ளன. இதன் மூலம் தமிழ்நாடு அமைச்சரவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 35 ஆக உயர உள்ளது. மேலும் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள பட்டியலினத்தவரின் எண்ணிக்கை 8 ஆக உயர உள்ளது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Vijay: கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாள்; முக்கிய பதிவை வெளியிட்ட முதல்வர் விஜய்!
CM Vijay: கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாள்; முக்கிய பதிவை வெளியிட்ட முதல்வர் விஜய்!
TMC Rift: ”கட்சிக்கு நீங்க தான் தலைவர், ஆனா சட்டமன்றத்த நாங்க பாத்துக்குறோம்” மம்தாவுக்கு ஆர்டர் போடும் MLAக்கள்
”கட்சிக்கு நீங்க தான் தலைவர், ஆனா சட்டமன்றத்த நாங்க பாத்துக்குறோம்” மம்தாவுக்கு ஆர்டர் போடும் MLAக்கள்
கலைஞர் படம் ஏன் அகற்றப்பட்டது ? கலைஞர் இல்லாமல் தமிழ் உண்டா ? – வைரமுத்து ஆவேசம்
கலைஞர் படம் ஏன் அகற்றப்பட்டது ? கலைஞர் இல்லாமல் தமிழ் உண்டா ? – வைரமுத்து ஆவேசம்
தகுதி இருந்தும் அங்கீகாரமில்லை: மீன்வளப் பல்கலைக்கழகத்தின் மீது ராமதாஸ் அதிருப்தி!
தகுதி இருந்தும் அங்கீகாரமில்லை: மீன்வளப் பல்கலைக்கழகத்தின் மீது ராமதாஸ் அதிருப்தி!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”
Nara Lokesh on Keerathana | Troll-ல் சிக்கிய கீர்த்தனா! சந்திரபாபு மகன் Support

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாள்; முக்கிய பதிவை வெளியிட்ட முதல்வர் விஜய்!
CM Vijay: கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாள்; முக்கிய பதிவை வெளியிட்ட முதல்வர் விஜய்!
ஸ்கூலே முடிக்கலை, அதுக்குள்ளயா? ஐஐஎம்மில் வைபவ் மாடல்! ஐபிஎல்லில் அசத்தும் சூர்யவன்ஷி!
ஸ்கூலே முடிக்கலை, அதுக்குள்ளயா? ஐஐஎம்மில் வைபவ் மாடல்! ஐபிஎல்லில் அசத்தும் சூர்யவன்ஷி!
TMC Rift: ”கட்சிக்கு நீங்க தான் தலைவர், ஆனா சட்டமன்றத்த நாங்க பாத்துக்குறோம்” மம்தாவுக்கு ஆர்டர் போடும் MLAக்கள்
”கட்சிக்கு நீங்க தான் தலைவர், ஆனா சட்டமன்றத்த நாங்க பாத்துக்குறோம்” மம்தாவுக்கு ஆர்டர் போடும் MLAக்கள்
Central Minister on Hormuz: ஹார்முஸில் இப்போது ஒரே ஒரு இந்திய கப்பல் தான் வருகிறது.! ABP மாநாட்டில் மத்திய அமைச்சர் ஷாக் தகவல்
ஹார்முஸில் இப்போது ஒரே ஒரு இந்திய கப்பல் தான் வருகிறது.! ABP மாநாட்டில் மத்திய அமைச்சர் ஷாக் தகவல்
Trump New Tariff: மீண்டும் வரி ஆட்டத்தை தொடங்கிய ட்ரம்ப்; 60 நாடுகள் மீது கூடுதலாக 12.5%; US பரிந்துரையால் அதிர்ச்சி
மீண்டும் வரி ஆட்டத்தை தொடங்கிய ட்ரம்ப்; 60 நாடுகள் மீது கூடுதலாக 12.5%; US பரிந்துரையால் அதிர்ச்சி
ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.! யார் யார் எந்த மாவட்டத்திற்கு.? இதோ முழு லிஸ்ட்
ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.! யார் யார் எந்த மாவட்டத்திற்கு.? இதோ முழு லிஸ்ட்
Inverter Battery Tips: கோடைல இன்வெர்ட்டர் ரொம்ப முக்கியம் கண்ணு.! பேட்டரி வேகமா குறையுதா.? காரணமும், டிப்ஸும் இதோ
கோடைல இன்வெர்ட்டர் ரொம்ப முக்கியம் கண்ணு.! பேட்டரி வேகமா குறையுதா.? காரணமும், டிப்ஸும் இதோ
TN DGP: மக்களை அலறவிடும் குற்றங்கள்..! தினந்தோறும் தொடரும் சோகம் - புதிய டிஜிபி செய்யப்போவது என்ன?
மக்களை அலறவிடும் குற்றங்கள்..! தினந்தோறும் தொடரும் சோகம் - புதிய டிஜிபி செய்யப்போவது என்ன?
Embed widget