Anbumani Vs Thirumavalavan: "அத்துமீறல் என்பதற்கு பல அர்த்தங்கள் உள்ளது" - அன்புமணிக்கு பதிலடி கொடுத்த திருமா
ஜாதி, மத பெருமை பேசுவது வெற்றியல்ல. ஆண்ட கட்சி என்று பேசுவது பெருமை அல்ல. கட்சியில் உள்ள அனைவரும் அரசியல் பேசவேண்டும். அரசியல் கோட்பாடுகள் தெரிந்திருக்க வேண்டும் அதுதான் வெற்றி என்றார்.

வக்புவாரிய திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக திருச்சியில் நடைபெறும் பேரணிக்கான, சேலம் மண்டல நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியது, விடுதலை சிறுத்தைகள் கட்சி கூட்டத்தில் எல்லாத்தையும் மீறி மேடையில் தொண்டர்கள் ஆக்கிரமித்து உள்ளார்கள். எதுக்காக திரண்டு இருக்கிறோம் என்பதற்கு அடையாளம் என்னவென்றால் கட்சியின் கட்டுப்பாடுகளை மதிக்கிறோம் என்பது தான் அடையாளம். எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் மேடைக்கு எதிராக அமர வேண்டும் என்று ஆயிரம் முறைக்கு மேல் சொல்லி இருக்கிறேன். அதை பின்பற்றுவதில்லை, எனவே அனைவரும் இதை பின்பற்ற வேண்டும் என்று கூறினார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைமை கூறுவதற்கு ஒத்துழைப்பு வழங்குவது தான் நமது கட்சியின் வளர்ச்சிக்கான அடையாளம் எனவும் அறிவுறுத்தல் வழங்கினார். மக்கள் அமைப்பாக திரண்டால் தான் வன்கொடுமைக்கும், அனைத்துவித சுரண்டலுக்கும் எதிராக விடுபட முடியும். குறிப்பாக அத்துமீறல் என்பதற்கு பல அர்த்தங்கள் உள்ளது. இது ஒரு ஜாதிக்கானது அல்ல. அனைத்து ஜாதி, மதம், தேசத்திற்கும் பொதுவானது. உரிமையை பெறுவதற்கு தடைகள் வந்தால் அதை மீறுவது தான் அத்துமீறலுக்கான பொருள் என்றும் பேசினார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி கூட்டம் நடத்தும்போது பெயர் வைக்க சொல்லுவது, புத்தகத்தில் கையெழுத்து பெறுவது உள்ளிட்டவைகளில் ஈடுபடக்கூடாது. இவையெல்லாம் அவை கூறிய மதிப்பு இல்லை. கட்சிக்குள் ஒரு கட்டுப்பாடு இருக்க வேண்டும். என்னுடைய கவலை எல்லாம், ஒரு அமைப்பாக திரளாதவர்களால் எதுவும் சாதிக்க முடியாது எனவும் தெரிவித்தார்.
ஒரு கட்சி ஆட்சிக்கு வர வேண்டும் என்றால் அதிர்ஷ்டத்தால் வந்து விட முடியாது. முறையாக மக்களை சந்தித்து, மக்களின் நன்மதிப்பையும், ஆதரவையும் பெற்று தான் ஒரு இடத்திற்கு வரமுடியும். நன்மதிப்பை பெற்று வருகிறோம் என்பதற்கு சான்று நமது சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தான் சான்று. உங்களையும் மக்கள் ஏற்றுவிட்டார்கள் என்று நீங்களும், ஒரு மாநில கட்சி தான் என்று தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியுள்ளது. எனவே அமைப்பாக திரண்டால் மட்டுமே ஆட்சிக்கு வர முடியும் என்றும் கூறினார்.
மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் கூட்டத்தில் தினசரி நசுக்கப்படுவான் நான் தான். அனைத்து பக்கமும் நசுக்குகிறார்கள். ஒரு டன் அளவிற்கு நம் கட்சியினரை நசுக்கி இருக்கிறார்கள் என்று நையாண்டியாக பேசினார்.
இந்தியாவில் எந்த ஒருகட்சிக்கும் விடுதலை சிறுத்தை கட்சியின் அளவிற்கு ஆதரவு இல்லை. இதை முறைப்படுத்தி, ஒழுங்குபடுத்திய அமைப்பாக மாறினால் யாருடைய தயவும் தேவையில்லை என்றார்.

மாநில கட்சியாக அங்கீகாரம் பெற்ற நிலையிலும் கொடிக்கம்பம், மாநாடு, பொதுக்கூட்டம் உள்ளிட்ட அனைத்திலும் நெருக்கடி வருகிறது. அதற்கு என்ன தீர்வு என்றால் விடுதலை சிறுத்தைகள் கட்சி இன்னும் வலிமை பெறவேண்டும் என்று கூறினார். ஜாதி, மத பெருமை பேசுவது வெற்றியல்ல. ஆண்ட கட்சி என்று பேசுவது பெருமை அல்ல. கட்சியில் உள்ள அனைவரும் அரசியல் பேசவேண்டும். அரசியல் கோட்பாடுகள் தெரிந்திருக்க வேண்டும் அதுதான் வெற்றி என்றார். மேலும் அதிகாரத்தை நோக்கி நகரவேண்டும் என்றால், நம்மை வளமை, செழுமை, வலிமைப்படுத்தி கொள்ளவேண்டும் என்றும் தெரிவித்தார்.
வக்புவாரிய சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் வலியுறுத்தி மட்டும் விட்டுவிட வேண்டும். அதற்குப் பிறகு தமிழ்நாடு முழுவதும் சேலம் உட்பட அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. தோழமைக் கட்சிகள் நடத்துகின்ற கண்டண கூட்டங்களில் பங்கேற்று உரையாற்றுகிறேன் என்றார்.
சினிமாக்காரர்கள் போன்று கதை சொல்லத் தெரியாது. இளம் வயதில் பிரபாகரன் மீது கொண்ட ஈர்ப்பு கொண்டவன் என்று கூறினார். பிரபாகரனை சந்திப்பது சாதாரணமல்ல. அவரே தன்னை சந்திப்பதற்கு அழைப்பு விடுத்தார் என்று பெருமிதம் தெரிவித்தார். இருப்பினும் பிரபாகரன் போன்று ஆயுதங்கள் ஏந்தி போராடாமல், இந்திய அரசியலமைப்புச் சட்டம் மூலம் புரட்சி செய்தவர் அம்பேத்கர் என்றும் கூறினார்.
இந்தியாவில் நடைபெறும் விவாதங்கள், அரசியல் நகர்வு அனைத்துமே அம்பேத்கரை மையப்படுத்தி நடக்கிறது. குறிப்பாக காந்தி, நேதாஜி உள்ளிட்ட யாரும் ஜாதி ஒழிய வேண்டும் என்று கூறவில்லை. ஆனால் அம்பேத்கர் மட்டுமே ஜாதி ஒழித்தால் மட்டுமே புரட்சி மலரும் என்றும் கூறினார். அதற்காக உருவாக்கப்பட்டது தான் அரசியலமைப்பு சட்டம். அனைத்தையும் தகர்த்து எறிய வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டது தான் இந்திய அரசியலமைப்பு சட்டம். எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதுதான் அதற்கான காரணம் என்று தெரிவித்தார்.
பாஜகவின் எண்ணம் பாரதத்தில் உள்ள பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இதையெல்லாம் இணைத்து அகண்ட பாரத அமைப்போம் என்பது பாஜகவின் குறிக்கோளாக உள்ளது என்றும் பேசினார்.
திமுகவுக்கு கொத்தடிமையாக இருப்பதாக பேசுகிறார்கள். நமக்கு இருக்கும் புரிதல், அவர்களுக்கு இல்லை. அரசியலமைப்பு சட்டத்தை எதிர்க்கும் பாஜகவை வீழ்த்த வேண்டுமென்றால் பாஜகவிற்கு எதிராக நிற்கும் அனைத்துக் கட்சிக்கும் துணை நிற்க வேண்டும் அதற்காகத்தான் திமுகவுடன் கூட்டணியும், மத்தியில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரசுடன் இருப்பதாக கூறினார்.





















