நெருங்கும் தேர்தல்- சூடு பிடிக்கும் அரசியல் களம்

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்கள் மட்டுமே உள்ளது. இந்தநிலையில் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையை திமுக மற்றும் அதிமுக தொடங்கியுள்ளது. அந்த வகையில் அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, தமாகா உள்ளிட்ட கட்சிகள் தற்போது வரை உள்ளது. விரைவில் டிடிவி தினகரனின் அமமுக இணையும் எனவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் வருகிற 23ஆம் தேதி பிரதமர் மோடி கலந்து கொள்ளவுள்ள முதல் பிரச்சார கூட்டம் சென்னை அருகே நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் அதிமுக கூட்டணியில் இடம்பெறவுள்ள கட்சியின் தலைவர்கள் மேடையேறவுள்ளனர். எனவே கூட்டணியை இறுதி செய்யும் பணியில் அதிமுக தீவிரமாக உள்ளது. 

Continues below advertisement

திமுகவில் இணைய திட்டம் போட்ட தனியரசு

அந்த வகையில் அதிமுக பொதுச்செயலாளருடன் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு இன்று காலை சந்தித்து பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  கடந்த 2016ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ல் கடந்த சில வருடங்களாகவே அதிமுகவிற்கு எதிரான நிலைப்பாட்டை தனியரசு எடுத்திருந்தார்.  அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியையும் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். மேலும் திமுக தலைவர் ஸ்டாலினையும் அறிவாலயத்தில் சந்தித்து பேசியிருந்தார்.

Continues below advertisement

அதிமுகவிற்கு பல்டி அடித்த தனியரசு

எனவே திமுக கூட்டணியில் இணைந்து வருகிற சட்டமன்ற தேர்தலில் தனியரசு போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தனியரசு கூட்டணி தொடர்பாக பேசியுள்ளதாக தகவல் வெளியானது. அப்போது சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்து போட்டியிடுவது குறித்து இபிஎஸ்சுடன் தனியரசு ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்பட்டது. ஆனால் இந்த தகவலை தனியரசு மறுத்துள்ளார். அப்படி யாரையும் சந்திக்கவில்லையெனவும், கூட்டணி தொடர்பாக பேசவில்லையென கூறியுள்ளார். 

இதனிடையே அதிமுக கூட்டணியை பலப்படுத்த அமமுக, ஐஜேக,புதிய நீதி கட்சிகள்  அதிமுக கூட்டணியில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதல் தேமுதிக மட்டும் அதிமுகவிற்கு ஓகே சொல்லாமல் இழுத்தடித்து வருவதாக கூறப்படுகிறது.