எப்போது அரசியல் கட்சியை நடிகர் விஜய் அறிவிக்க போகிறார் என்ற பெரும் எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வகைக்கும் விதமாக ‘தமிழக வெற்றி கழகம்’(Tamizhaga Vetri Kazhagam) என்ற தன்னுடைய கட்சியை அறிவித்து அரசியலுக்கு காற்புள்ளி வைத்திருக்கிறார் விஜய்.






அஷ்டமியில் அறிவிப்பு வெளியிட்ட விஜய்


அரசியல் கட்சி குறித்த தனது அறிக்கையில், அரசியல் மற்றொரு தொழில் அல்ல, இது புனிதமாமான மக்கள் பணி என குறிப்பிட்டுள்ள விஜய் அஷ்டமி தினமான இன்று தன்னுடைய அரசியல கட்சி பெயரை அறிவித்து மூட நம்பிக்கைகளை உடைத்தெறியும் பகுத்தறிவு பாதையில் பயணிக்கத் தொடங்கியிருக்கிறார்.


அழுத்தங்களை தாண்டிய அறிவிப்பு


பல்வேறு கால கட்டத்தில் அரசியல் கருத்துகளை பகிர்ந்து வந்த விஜய்க்கு பல்வேறு தரப்பில் இருந்தும் நெருக்கடிகள் அதிகரித்து வந்தன. ஆனால், அது குறித்து வெளிப்படையாக அவர் இதுவரை எந்த கருத்துகளையும் தெரிவிக்கவில்லை. அதே நேரத்தில் தமிழ்நாட்டின் தலையெழுத்தை இதுவரை தீர்மானித்து வந்த இயக்கங்கள் தங்களுடைய கட்சியில் ‘கழகம்’ என்ற வார்த்தையை சேர்ப்பதை வழக்கமாக வைத்திருந்தனர். அதே மாதிரியான ஒரு பாணியை தன்னுடைய கட்சி அறிவிப்பிலும் சேர்த்து தமிழக வெற்றி கழகம என்று அறிவித்திருக்கிறார்.


எல்லா நாளும் நல்ல நாளே கான்சப்ட்


நல்ல நாள் பார்த்து, முன் கூட்டியே இன்று அரசியல் அறிவிப்பு என்று பெரிய அறிவிப்புகளை வெளியிட்டு, ஊடகங்களை எல்லாம் அழைத்து பிரம்மாண்டமாகதான் தன்னுடைய கட்சி அறிவிப்பையும், அரசியல் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் நடிகர் விஜய் வெளியிடுவார் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில், அப்படிப்பட்ட ஒரு வழக்கத்தை மாற்றி மிக எளிமையாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இப்படிப்பட்ட ஒரு முக்கிய அறிவிப்பை நடிகர் விஜய் வெளியிட்டிருப்பது பல்வேறு தரப்பினரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.


பலரும் செய்யத் துணியாத செயல்


வழக்கமாக பலரும் அஷ்டமி தினத்தில் சுப காரியங்களையோ, முக்கிய முடிவுகளையோ, முக்கிய பணிகளையோ மேற்கொள்ள தயக்கம் காட்டும் நிலையில், அதையெல்லாம் நடிகர் விஜய் உடைத்தெறிந்து, அரசியல் கட்சியை வெளியிட்டிருக்கிறார்.