மேலும் அறிய

அரசின் மின்கட்டண உயர்வால் 600 ஜவுளி ஆலைகள் மூடல்: அன்புமணி இராமதாஸ் கடும் கண்டனம்!

தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 600-க்கும் மேற்பட்ட ஜவுளி ஆலைகளும், 2 லட்சத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகளும் மூடப்பட்டுள்ளன என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன

சென்னை: தமிழ்நாட்டில் 600 ஜவுளி ஆலைகள், 2 லட்சம் விசைத்தறிகள் மூடப்பட்டுள்ளது எனவும், மின் கட்டணத்தை உயர்த்தி வயிற்றில் அடித்த திமுகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவர் என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,. 

தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 600-க்கும் மேற்பட்ட ஜவுளி ஆலைகளும், 2 லட்சத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகளும் மூடப்பட்டுள்ளன என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ஊழல் மற்றும் மக்கள் விரோத கொள்கைகளால் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை திமுக அரசு சீரழித்திருப்பது கண்டிக்கத்தக்கது.

மத்திய ஜவுளித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி 2021-22 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் 2773 ஆக இருந்த ஜவுளி ஆலைகளின் எண்ணிக்கை அடுத்த இரு ஆண்டுகளில் அதாவது 2023-24ஆம் ஆண்டில் 2455 ஆக குறைந்திருக்கிறது. 2023-24ஆம் ஆண்டுக்கு பிந்தைய இரு ஆண்டுகளில் மேலும் 300 ஜவுளி ஆலைகள் மூடப்பட்டு விட்டதாக ஜவுளி ஆலைகள் சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்ததாக தி இந்து ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டிருக்கிறது. அதேபோல், கடந்த இரு ஆண்டுகளில் மட்டும் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் மூடப்பட்டிருப்பதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜவுளி ஆலைகளும், விசைத்தறிகளும் மூடப்பட்டதற்கு முதன்மைக் காரணம் மின்கட்டண உயர்வு தான் என்று கூறப்படுகிறது. திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் மட்டும் 42% அளவுக்கு, அதாவது ரூ.45,000 கோடி அளவுக்கு மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் ஜவுளி ஆலைகள் கடுமையான நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளன. ஜவுளி ஆலைகள் அதிகம் அமைந்துள்ள அண்டை மாநிலங்களுடன் ஒப்பிடும் போது தமிழ்நாட்டில் மின் கட்டணம் ஒரு யூனிட்டுக்கு ரூ1 கூடுதலாக இருப்பதாகவும், மின்சாரத்திற்காக இவ்வளவு செலவு செய்து தயாரிக்கப்படும் துணி வகைகளை சந்தையில் பிற மாநில ஆலைகளுடன் போட்டியிட்டு விற்க முடியாது என்பதால் தான் ஜவுளி ஆலைகளும், விசைத்தறிகளும் மூடப்பட்டு விட்டதாக ஜவுளித்துறையினர் தெரிவித்துள்ளனர்.

திமுக ஆட்சிக்கு வந்த நாள் முதலாகவே தொழில்துறையினர் மீது திட்டமிட்டு மின் கட்டண உயர்வு உள்ளிட்ட தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதை சமாளிக்க முடியாமல் தான் ஜவுளி ஆலைகளும், பிற சிறு, குறு மற்றும் தடுத்தர நிறுவனங்களும் தங்களின் ஆலைகளை மூடி விட்டு வெளி மாநிலங்களுக்கு ஓடுகின்றனர். இதனால் தமிழ்நாட்டில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் பெருமளவில் குறைந்து விட்டன.

நிர்வாகத் திறன் இல்லாத, ஊழலில் மட்டுமே திளைக்கக் கூடிய திமுக அரசுக்கு தொழில் துறையை பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் எல்லாம் இல்லை. அதனால் தான் தமிழ்நாட்டில் தொழில்துறை சீரழிந்து வருகிறது. இதனால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்துத் தரப்பு மக்களும் வரும் தேர்தலில் திமுகவுக்கு மறக்க முடியாத பாடத்தைப் புகட்டுவார்கள் என்பது உறுதி. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

BJP on TVK Vijay: கூட்டணிக்கு வரும் தவெக? ஓபிஎஸ் முடிவு சாபமா? குழாயடி சண்டை, கூட்டணி மாற்றம்: பாஜக பரபர!
BJP on TVK Vijay: கூட்டணிக்கு வரும் தவெக? ஓபிஎஸ் முடிவு சாபமா? குழாயடி சண்டை, கூட்டணி மாற்றம்: பாஜக பரபர!
தேர்தலில் போட்டியில்லை… ஆனால் திமுகக்கு முழு ஆதரவு – பெரியார் கழகம் விளக்கம்
தேர்தலில் போட்டியில்லை… ஆனால் திமுகக்கு முழு ஆதரவு – பெரியார் கழகம் விளக்கம்
TN Election Rewind: ஜெயலலிதாவையே தோற்கடித்த பர்கூர்.. அதிமுகவை அலறவிட்ட 1996 சட்டமன்ற தேர்தல்!
TN Election Rewind: ஜெயலலிதாவையே தோற்கடித்த பர்கூர்.. அதிமுகவை அலறவிட்ட 1996 சட்டமன்ற தேர்தல்!
’கொள்கை எதிரியுடன் கூட்டணியா?’ விஜய் எடுக்கப்போகும் முடிவு என்ன? –பரபரப்பில் தமிழக அரசியல்..!
’கொள்கை எதிரியுடன் கூட்டணியா?’ விஜய் முடிவு என்ன? –பரபரப்பில் தமிழக அரசியல்..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

கிருத்திகா போட்ட ட்வீட்
Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்
Parthiban Trisha | பொளந்தெடுத்த த்ரிஷா! ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்! ”பெண்ணே ஆகப்பெரும் சக்தி”
Trisha vs Parthiban | ”உங்க தரம் தெரிஞ்சிருச்சு! இதெல்லாம் JOKE-ஆ” பார்த்திபனை பொளந்த த்ரிஷா
ஜனநாயகன் ரிலீஸ் தேதி ரசிகர்களுக்கு GOOD NEWS குறுக்க இந்த தேர்தல் வந்தா...

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
BJP on TVK Vijay: கூட்டணிக்கு வரும் தவெக? ஓபிஎஸ் முடிவு சாபமா? குழாயடி சண்டை, கூட்டணி மாற்றம்: பாஜக பரபர!
BJP on TVK Vijay: கூட்டணிக்கு வரும் தவெக? ஓபிஎஸ் முடிவு சாபமா? குழாயடி சண்டை, கூட்டணி மாற்றம்: பாஜக பரபர!
MP-க்களான அன்புமணி, எல்.கே.சுதீஷ்; 6 பேர் போட்டியின்றி தேர்வு- அதிகாரப்பூர்வ அறிவிப்பு
MP-க்களான அன்புமணி, எல்.கே.சுதீஷ்; 6 பேர் போட்டியின்றி தேர்வு- அதிகாரப்பூர்வ அறிவிப்பு
BJP on TVK Vijay: விஜய்க்கு தங்கம் விலை தெரியுமா? டிவியை உடைத்தவர் இலவசங்கள் வாக்குறுதி தருவதேன்?- பொளந்த பாஜக!
BJP on TVK Vijay: விஜய்க்கு தங்கம் விலை தெரியுமா? டிவியை உடைத்தவர் இலவசங்கள் வாக்குறுதி தருவதேன்?- பொளந்த பாஜக!
’கொள்கை எதிரியுடன் கூட்டணியா?’ விஜய் எடுக்கப்போகும் முடிவு என்ன? –பரபரப்பில் தமிழக அரசியல்..!
’கொள்கை எதிரியுடன் கூட்டணியா?’ விஜய் முடிவு என்ன? –பரபரப்பில் தமிழக அரசியல்..!
’’எங்கும் கொலை, எப்போதும் கொலை; நீங்கள் ஆண்டதும், மக்கள் மாண்டதும் போதும்’’- திமுகவை வறுத்தெடுத்த ஈபிஎஸ்
’’எங்கும் கொலை, எப்போதும் கொலை; நீங்கள் ஆண்டதும், மக்கள் மாண்டதும் போதும்’’- திமுகவை வறுத்தெடுத்த ஈபிஎஸ்
TN Election Rewind: ஜெயலலிதாவையே தோற்கடித்த பர்கூர்.. அதிமுகவை அலறவிட்ட 1996 சட்டமன்ற தேர்தல்!
TN Election Rewind: ஜெயலலிதாவையே தோற்கடித்த பர்கூர்.. அதிமுகவை அலறவிட்ட 1996 சட்டமன்ற தேர்தல்!
2026 பொதுத் தேர்வு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு- கூடுதல் நேரம் வழங்கி உத்தரவு!
2026 பொதுத் தேர்வு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு- கூடுதல் நேரம் வழங்கி உத்தரவு!
மருதமலை கோவிலில் செல்போன் தடை… நாளை முதல் அமலுக்கு வரும் அதிரடி அறிவிப்பு
மருதமலை கோவிலில் செல்போன் தடை… நாளை முதல் அமலுக்கு வரும் அதிரடி அறிவிப்பு
Embed widget