Vijay Cabinet: CM விஜய்க்கு சினிமா வருமானம் - 9 அமைச்சர்களின் தொழில் என்ன? யார் இவர்கள்? - அரசியல் பின்புலம்
Vijay Cabinet Ministers: முதலமைச்சர் விஜய் உடன் சேர்ந்து அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்ட என்.ஆனந்த் உள்ளிட்ட 9 பேரின் தொழில் மற்றும் வருமானம் உள்ளிட்ட விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

Vijay Cabinet Ministers: முதலமைச்சர் விஜய் உடன் சேர்ந்து அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்ட என். ஆனந்த் உள்ளிட்ட 9 பேரின் அரசியல் பின்புலமும் கீழே விவரிக்கப்பட்டுள்ளது.
விஜய் உடன் பதவியேற்ற 9 அமைச்சர்கள்:
60 ஆண்டுகால நீண்ட நெடிய பயணங்களுக்குப் பிறகு, தமிழ்நாட்டில் முதல்முறையாக திராவிட கட்சிகள் தலைமை தாங்காத ஆட்சி தமிழ்நாட்டில் அமைந்துள்ளது. அதன்படி, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார். அதோடு, அமைச்சரவையில் அவருடன் பணியாற்ற உள்ள தவெகவைச் சேர்ந்த 9 பேரும் பதவிப் பிரமானம் ஏற்றனர். விஜய் சினிமா மூலம் பல கோடிகளை ஊதியமாக பெறுபவர் என்பது அனைவரும் அறிந்ததே. அதேநேரம், அவருடன் பொறுப்பேற்ற 9 பேரின் அடிப்படை தொழில்? வருமானம்? அரசியல் பின்புலம் குறித்து அறிய பலரும் ஆர்வம் காட்டுகின்றனர். ஆந்த வகையில் நேற்று அமைச்சர்களாக பொறுப்பேற்ற என். ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், செங்கோட்டையன், ஆர். நிர்மல் குமார், வெங்கடரமணம், ராஜ்மோகன், டி.கே. பிரபு மற்றும் கீர்த்தனா ஆகியோரின் அடிப்படை விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
விஜயின் 9 அமைச்சர்களும்..! விவரங்களும்..!
1. என். ஆனந்த்
புஸ்ஸி ஆனந்த் (62) என அடையாளம் காணப்படும் என். ஆனந்த், தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளராக இருக்கிறார். கட்சியின் இரண்டாவது தலைமையாக உள்ள இவர் அரசியல் முக்கியத்துவம் பெறுவதற்கு முன்பாக, விஜய் மக்கள் இயக்கத்தின் தலைவராகவும், சமூக சேவை நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பவராகவும் இருந்துள்ளார். முன்னதாக புதுச்சேரியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்த இவர், விஜயுடன் இணைந்தபிறகு கட்டமைத்த நெட்வொர்க் தான் தவெகவின் மிகப்பெரிய பலமாக மாறியது.
2. ஆதவ் அர்ஜுனா
சட்டமன்றத்திற்கு முதன்முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஆதவ் அர்ஜுனா (42), தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளராக உள்ளார். இந்திய கூடைப்பந்து சம்மேளனத்தின் தலைவரான இவர், முன்னதாக அரசியல் ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார். இவரது வகுத்து கொடுத்த வியூகங்கள் தவெகவின் வெற்றிக்கு மிக முக்கிய பங்காற்றியதாக கூறப்படுகிறது.
3. அருண் ராஜ்
46 வயதான அருண் ராஜ் மருத்துவ படிப்பை முடித்துள்ளதோடு, இந்திய வருவாய் அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர்களில் ஒருவான இவர், திருச்செங்கோடு தொகுதியில் இருந்து சட்டமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். அரசு பணியை துறந்து விஜயின் கட்சியில் இணைந்தார். வருவாய்த்துறையிலும், ஐடி மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றிய அனுபவமும் தவெகவில் அருண்ராஜிற்கு முக்கிய இடத்தை ஏற்படுத்தி கொடுத்துள்ளது.
4. செங்கோட்டையன்
தவெகவில் உள்ள மிக மூத்த அரசியல் தலைவராக செங்கோட்டையன் (78) கருதப்படுகிறார். 10வது முறையாக சட்டமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதோடு, ஜெயலலிதா, எடப்பாடி ஆகியோரை தொடர்ந்து விஜய் என மூன்றாவது முதலமைச்சரின் அமைச்சரவையிலும் இடம்பெற்றுள்ளார். தவெக உயர்மட்ட குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளராக உள்ளார்.
5. ஆர். நிர்மல் குமார்
தவெகவின் இணை பொதுச்செயலாளர், முக்கியமான செய்தி தொடர்பாளர்களில் ஒருவரான ஆர். நிர்மல் குமார் (44) திருப்பரங்குன்றம்தொகுதியில் இருந்து சட்டமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். முதன்முறையாக சட்டமன்ற உறுப்பினராகியுள்ள இவர், ஏற்கனவே பாஜக மற்றும் அதிமுகவில் ஐடி விங்கை தலைமை தாங்கி வழிநடத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கரூர் துயரம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் கட்சி சார்பில் நீதிமன்றத்தில் ஆஜராகியதும் இவரே ஆவார்.
6. ராஜ்மோகன்
முதல்முறையாக சட்டமன்ற உறுப்பினராகியுள்ள ராஜ்மோகன் (39), எழும்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். சமூக பிரச்னைகள் தொடர்பான வீடியோக்களை வெளியிட்டு பிரபலமான யூடியூபராக இவர் அறியப்படுகிறார். தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்களில் பணியாற்றியுள்ளதோடு, பொதுவெளியில் பல்வேறு பிரச்னைகளில் தவெகவின் குரலாகவும் ஒலித்துள்ளார்.
7. வெங்கடரமணன்
மயிலாப்பூர் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 48 வயதான வெங்கடரமணன், தவெகவின் பொருளாளராக உள்ளார். கடந்த 60 ஆண்டுகளில் தமிழக அமைச்சரவையில் இடம்பெறும் இரண்டாவது பிராமணம் இவர் ஆவார். தொழில் ரீதியாக வழக்கறிஞரான இவர், வணிகம், தொழில் நிர்வாகம் மற்றும் சட்டம் ஆகியவற்றில் கைதேர்ந்தவர் ஆவார். மயிலாப்பூர் தொகுதியில் வென்று அமைச்சராவது இதுவே முதல்முறையாகும்.
8. டி.கே. பிரபு
அரசியல் பின்புலம் கொண்ட குடும்பத்தில் பிறந்து வளர்ந்த டி.கே. பிரபு (41) காரைக்குடி தொகுதியில் இருந்து முதல்முறையாக சட்டமன்ற உறுப்பினராக தேர்வாகியுள்ளார். வெளிநாடுகளில் படித்து பட்டம் பெற்ற கைதேர்ந்த பல் மருத்துவராக உள்ள இவர், ரீல்ஸ் டாக்டர் என்றும் அறியப்படுகிறார். சமூக சேவைகள் மூலமாகவும் மக்களிடையே பிரபலமாக உள்ளார். சட்டமன்ற தேர்தலில் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானையே வீழ்த்தியதின் மூலம் கவனம் ஈர்த்துள்ளார்.
9. எஸ்.கீர்த்தனா
புதிய சட்டப்பேரவையில் மிகவும் இளம் சட்டமன்ற உறுப்பினர்களில் ஒருவரான கீர்த்தனா (29), விருதுநகர் மாவட்டத்தின் சிவகாசி தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கணிதப்பிரிவில் முதுகலை பட்டம் பெற்று, பன்மொழி கற்றவராகவும் விளங்குகிறார். ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் எம்.கே. ஸ்டாலின் ஆகியோரின் தேர்தல் வியூக பணிகளிலும் இவர் பணியாற்றிய அனுபவம் கொண்டுள்ளார்.
Before You Go
DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
ட்ரெண்டிங் செய்திகள்






















