CM Vijay: அப்செட்..! கடைசி நேரத்தில் கேரள பயணத்தை ரத்து செய்த CM விஜய் - இவ்ளோ காரணங்கள் இருக்கா?
CM Vijay Kerala Visit: பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக கேரளாவில் புதியதாக அமைய உள்ள ,காங்கிரஸ் ஆட்சியின் பதவியியேற்பு விழாவில் பங்கேற்பதை முதலமைச்சர் விஜய் தவிர்த்துள்ளார்.

CM Vijay Kerala Visit: முதலமைச்சர் விஜய் கேரள பயணத்தை ரத்து செய்ததற்கான காரணங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
கேரள பயணத்தை ரத்து செய்த சிஎம் விஜய்
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவில் தனிப்பெருங்கட்சியாக உருவெடுத்தாலும், ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மையை விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் எட்டிப் பிடிக்கவில்லை. அப்போது அவர்களுக்கு உடனடியாக ஆதரவளித்து காங்கிரஸ் கட்சி கூட்டணியில் இணைந்தது. இது தென்மாநிலங்களில் ஏற்பட்ட மிகப்பெரிய கூட்டணியாக கருதப்படுகிறது. இந்நிலையில் தான் 10 ஆண்டுகளுக்குப் பிறகு கேரளாவில் ஆட்சியை பிடித்த காங்கிரஸ் சார்பில், சதீஸன் என்பவர் இன்று முதலமைச்சராக பதவியேற்க உள்ளார். இதில் பங்கேற்க தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்க்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அவர் இன்றைய, கேரள பயணத்தை ரத்து செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கேரள பயணம் ரத்திற்கான காரணங்கள்:
எதிர்க்கட்சி தலைவர்களின் பங்கேற்புடன் பதிவியேற்பு நிகழ்ச்சியை பிரமாண்டமாக நடத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. விழாவை மேலும் சிறப்பாக்கும் வகையில் கேரளாவில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள, அண்மையில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் பங்கேற்றால் விழா மேலும் களைகட்டும் என காங்கிரஸ் எண்ணியது. ஆனால், புதியதாக பொறுப்பேற்றுள்ள அரசின் மீதுள்ள அதிகப்படியான பணிகள் மற்றும் பாதுகாப்பு காரணங்களால் இந்த கேரள பயணத்தை விஜய் ரத்து செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவரது கடந்தகால கேரள பயணங்கள் கட்டுக்கடங்காத கூட்ட நெரிசலைத் ஏற்படுத்தி, நிர்வாகச் சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளன. தேசியத் தலைவர்கள் மற்றும் அண்டை மாநில முதலமைச்சர்கள் கூடும் நிலையில், முதலமைச்சராக விஜய்யின் வருகை கட்டுப்படுத்த முடியாத கூட்டம் கூடி நெரிசலை ஏற்படுத்தலாம் எனவும், எதிர்பாராத விதமாக பதவியேற்பு நிகழ்ச்சிக்கே கூட சிக்கலை ஏற்படுத்தலாம் என்றும் உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதன் காரணமாக முதலமைச்சர் விஜய் தனது கேரள பயணத்தை ரத்து செய்துள்ளாராம். இதனால் அவரை காத்திருந்த ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
டெல்லிக்குப் பிறகு கேரளம்:
இதுபோக புதியதாக பொறுப்பேற்கும் எந்தவொரு மாநில முதலமைச்சரும் மரியாதை நிமித்தமாக, டெல்லி சென்று முதலில் குடியரசு தலைவர் மற்றும் பிரதமரை சந்திப்பது வழக்கம். அந்த வகையில் வெளிநாடு சுற்றுப்பயணங்களில் ஈடுபட்டுள்ள பிரதமர் மோடி நாடு திரும்பியதும், அவரை சந்தித்து மாநில நலன் தொடர்பான பல்வேறு கோரிக்கைகளுடன் டெல்லி செல்ல விஜய் திட்டமிட்டுள்ளார். அதன் பிறகு முறைப்படி கேரளம் சென்று புதியதாக பொறுப்பேற்க உள்ள முதலமைச்சர் சதீஸனை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கேரளத்திலும் தவெக..!
தமிழ்நாட்டில் உள்ள விஜய் ரசிகர்களுக்கு கடுமையான போட்டி அளிக்கும் விதமாக, சிறியவர்கள் தொடங்கி பெரியவர்கள் வரை என ஒரு பெரியரசிகர்கள் பட்டாளம் கேரளாவில் உள்ளது. இதன் காரணமாக அவர் தங்கள் கூட்டணியில் இருப்பது தமிழ்நாட்டில் மட்டுமின்றி கேரளா, புதுச்சேரியிலும் மிகப்பெரிய நன்மை பயக்கும் என காங்கிரஸ் விரும்புகிறது. அதேநேரம், தனது செல்வாக்கை அரசியல் பலமாக மாற்ற விஜயும் திட்டமிட்டுள்ளாராம். அதனை உறுதிப்படுத்தும் விதமாக கேரள மாநிலம் திருச்சூரிலும், அண்மையில் மாவட்ட அளவிலான முதல் கூட்டம் நடைபெற்று உறுப்பினர் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் தென்னிந்தியாவின் முக்கிய சக்தியாக தவெகவை வளர்க்கும் நோக்கில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளனவாம்.
Before You Go
DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
ட்ரெண்டிங் செய்திகள்






















