தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது, 


"ஒரு கட்சியில் உள்ளவர்கள் மற்றொரு கட்சிக்கு செல்வது நல்லது தானே. பா.ஜ.க.வில் இருந்து ஆட்களை எடுக்க வேண்டிய நிலையில் திராவிடக் கட்சிகள் உள்ளன. பா.ஜ.க.வின் இரண்டாம் கட்ட மூன்றாம் கட்ட தலைவர்களை திராவிடக் கட்சிகள் இழுக்கின்றன.  பாஜகவில் இருந்து ஆட்களை சேர்த்தால் தான் திராவிடக் கட்சிகள் வளரும் என்ற நிலை தமிழ்நாட்டில் உருவாகியுள்ளது.


இட்லி, தோசை சுட வரவில்லை


தமிழ்நாட்டிற்கு நான் தோசை இட்லி சுட வரவில்லை, நான் எடுக்கும் முடிவுக்கு பாஜக தொண்டர்கள் கட்டுப்படுவார்கள். திராவிடக் கட்சிகளின் இந்த செயல் பாஜகவின் வளர்ச்சியைக் காட்டுகிறது. பாஜகவில் இருந்து ஆட்களை கூட்டிச் சென்றுதான் திராவிட கட்சிகளை வளர்க்க வேண்டிய கட்டாயம் வந்திருக்கிறது."


இவ்வாறு அவர் கூறினார். அதிமுகவில் பாஜக மாநில ஐடி விங் தலைவர் நிர்மல்குமார் உள்ளிட்டோர் இணைந்தது குறித்து  பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார். 


திமுக ஆட்சியை கவிழ்க்க சதித்திட்டம் தீட்டப்படுகிறது என முதலமைச்சர் கூறியுள்ளாரே என கேட்கப்பட்ட கேள்விக்கு, ”முதலமைச்சர் முதலில் தூங்க வேண்டும். அவருக்கு ஓய்வு வேண்டும். தமிழகத்தில் சாதியத்தை பிரிவினையை கொண்டு வந்த பெருமை திமுகவையே சேரும். தமிழ்நாட்டில் கொங்கு, தென் தமிழ்நாடு என பிரிவினையை உண்டாக்குகிறார்கள். உதயநிதி ஸ்டாலின் தான் அருண் ஜெட்லி மற்றும் சுஷ்மா சுவராஜை கொன்றது பிரதமர் போடி என கூறினார் ஆனால், அவரை அமைச்சராக மாற்றி உள்ளார்கள். கமலஹாசன் கூறியதை போல எதைப் பார்த்தாலும் பயம் என்பது போல முதலமைச்சர் இருக்கிறார் என பதில் அளித்துள்ளார். 


முதலமைச்சர் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் மற்ற மாநில தலைவர்கள் அவரை சிறந்த ஆளுமை எனக் கூறுகிறார்களே அது பற்றி உங்கள் கருத்து என்ன என கேட்கப்பட்ட கேள்விக்கு, ” அரசியலில் தேஜஸ்வி யாதவ் ஒரு பள்ளி மாணவர்.  அவரைப் பேசச் சொல்லி பெருமை வாங்குகிறார் என்றால் முதலமைச்சர் எவ்வளவு இறங்கி போய் இருக்கிறார் என பார்த்துக் கொள்ளுங்கள். தெலுங்கானா முதல்வர் கே சி ஆர், பீகார் முதல்வர் நிதீஷ்குமார், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மேற்கு வங்க மம்தா பானர்ஜி போன்றவர்கள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாளுக்கு ஏன் வரவில்லை. மோடி ஆட்சியில் யாரைப் பார்த்தும் எதற்கும் பயம் இல்லை. தேஜஸ்வி யாதவ் எனும் குழந்தையை அழைத்து வைத்து அவர் வாயினால் ஸ்டாலின் சிறந்த தலைவர் என கூற வைக்கிறீர்கள். இரண்டாம் கட்ட தலைவர்களை அழைத்து வைத்து தமிழக மக்களை அசிங்கப்படுத்துகிறீர்கள் என பதில் அளித்துள்ளார். 


மேலும், முல்லைப் பெரியார் அணை விஷயத்தில் இரண்டு முதலமைச்சர்களும் அதாவது தமிழ்நாடு முதலமைச்சரும், கேரள முதலமைச்சரும்  ஏமாற்றுகிறார்கள். அவர்களே அணையை திறந்து விடுவது போல் நடிப்பார்கள். மு.க ஸ்டாலினும் பினராயி விஜயனும் சதி திட்டத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள். 2024 தேர்தலில் சதித்திட்டம் நடைபெற உள்ளது. ஸ்டாலினுக்கு தமிழகம் முக்கியம் இல்லை பினராய் விஜயனுக்கு கேரளா முக்கியமில்லை. வைக்கம் போராட்டத்தைப் பற்றி விரைவாக பேசுகிறேன் எனவும் அந்த செய்தியாளர் சந்திப்பில் அண்ணாமலை பேசியுள்ளார். 


மேற்கொண்டு பாஜகவில் இருந்து நிர்வாகிகள் அதிமுகவிற்கு செல்கிறார்களே அது பற்றி உங்கள் கருத்து என்ன என கேட்கப்பட்ட கேள்விக்கு, ”ஒரு கட்சியில் இருப்பவர்கள் மற்றொரு கட்சிக்குச் செல்வது நல்லது தானே. திராவிட கட்சியில் இருப்பவர்கள் பாஜகவிற்கு வருகிறார்கள் என்கிற நிலை போய் பாஜகவில் இருந்து திராவிட கட்சிக்கு செல்கிறார்கள். அவர்களுடைய அனுபவம் வயதை விட எங்களுக்கு குறைவு ஆனால் தற்போது பாஜக வளர்ந்து வருகிறது. சிந்தனை இருப்பவர்கள் கொள்கை இருப்பவர்கள் இங்குதான் இருப்பார்கள்.. யாரை வேண்டுமானாலும் அழைத்துச் செல்லுங்கள். ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு. இதற்கும் எதிர்வினை உண்டு அதற்கான நேரமும் காலமும் விரைவில் வரவுள்ளது” என கூறினார்.


மேலும், “ அண்ணாமலை தமிழ்நாட்டிற்கு தோசை சுட இட்லி சுட வரவில்லை. அண்ணாமலை இங்கு தலைவராக வந்துள்ளேன். தலைவராக இருப்பவர்கள் தலைவராகத்தான் முடிவு எடுப்பார்கள். நான் ஜெயலலிதா கருணாநிதி போன்றவன். நான் ஒரு தலைவன். தலைவனுக்கு ஏற்றார் போல் தான் முடிவெடுப்பேன். தலைவர்கள் முடிவெடுத்தால் நான்கு பேர் கோபித்துக்கொண்டு வெளியே வருவார்கள். Annamalai is a leader ஆயிரக்கணக்கான லட்சக்கணக்கான தொண்டர்களுக்கு தலைவராக இருக்கிறேன். திட்டிவிட்டு செல்பவர்கள் விவசாயம் செய்யவா செல்கிறார்கள். வேறு கட்சியில் இணையத்தானே சென்றுள்ளனர்” என கூறியுள்ளனர்.