செந்தில் பாலாஜி ஜாமீன் விவகாரத்தில் அரசியல் காழ்புணர்ச்சி இல்லை என்று மாநில பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
கரூரில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பு.
பெரம்பலூரில் நடந்த பாஜக நிர்வாகி தாக்குதலுக்கு எதிரானவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், பாஜக சார்பில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடைபெறும். பாஜகவினரை வன்முறையை நோக்கி திமுகவினர் தள்ள வேண்டாம்.
தமிழக அரசு ஆளுநருக்கு அனுப்பி வைத்த 13 மசோதாக்களில், 12 மசோதாக்கள் பல்கலைக்கழகங்களில் தலைவர் பதவியில் ஆளுநரின் அதிகாரத்தை நீக்கிவிட்டு, முதல்வரை நியமிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் சென்றுள்ளனர். இது அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிரானது.
டிஎன்பிஎஸ்சி தலைவராக 61 வயது உள்ள சைலேந்திரபாபு நியமிக்க வேண்டும் என்று திமுக கூறுகிறது. வயது முதிர்வு காரணமாக அதற்கு ஆளுநர் அந்த நியமனத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
செந்தில் பாலாஜி ஜாமீன் விவகாரத்தில் அரசியல் காழ்புணர்ச்சி இல்லை. அவர் இன்னும் அமைச்சராக நீடிப்பதால், சாட்சிகளை களைக்க வாய்ப்புள்ளது. அவரது சகோதரர் அசோக்குமார் தலைமறைவாக இருக்கிறார். மேலும், வருமான வரி சோதனையின்போது அதிகாரிகளை திமுகவினர் தாக்கியுள்ளனர். அதனால் ஜாமீன் வழங்க முடியாது என்று நீதிபதியின் உத்தரவிலேயே உள்ளது. ஜாமீன் கேட்டு தற்போது உச்சநீதிமன்றம் சென்றுள்ளனர். பொறுத்திருந்து பார்ப்போம். இவ்வாறு கூறினார்.