சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பலரை, காவல்துறையினர் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.


பாஜகவிலுள்ள பெண் நிர்வாகிகளை, திமுகவினர் தரக்குறைவாக பேசி வருவதாக பாஜகவினர் வள்ளுவர் கோட்டத்தில்  போராட்டத்தில் ஈடுபட்டனர். 




இப்போராட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்று  பாஜக நிர்வாகிகள் கரு. நாகராஜன், சசிகலா புஷ்பா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


கொட்டும் மழையிலும் பாஜகவினர், போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக, பாஜகவினரை காவல்துறையினர் கைது செய்தனர்.


 










அப்போது, காவல் துறையினர் கைது செய்ததால் வள்ளுவர் கோட்டத்தில் பாஜக பெண்களுக்கும் காவல் துறையினருக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டது.