TN Assembly: ”கசப்பான விஷயம் நடந்துச்சு” பேரவையில் CM விஜய்க்கு சூசகமாக மெசேஜ் சொன்ன அமமுக MLA - வீடியோ
TN Assembly CM Vijay: தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதமைச்சர் விஜய் முன்னிலையில், கசப்பான சில விஷயங்கள் நடந்துவிட்டதாக அமமுக எம்.எல்.ஏ., காமராஜர் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

TN Assembly CM Vijay: அமமுக எம்.எல்.ஏ., காமராஜரின் ஆதரவை பெற முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக டிடிவி தினகரன் குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது.
முதலமைச்சர் விஜய் மீது அமமுக குற்றச்சாட்டு
சட்டமன்ற தேர்தல் முடிவில் விஜய் தலைமயிலான தவெக தனிப்பெரும்பான்மை பெறாத நிலையில், பல்வேறு கட்சிகளின் ஆதரவை நாடினார். அந்த வகையில் அமமுக சார்பில் வெற்றி பெற்ற ஒரே ஒரு எம்.எல்.ஏ.,வான காமராஜ், தவெகவிற்கு ஆதரவளிப்பதாக ஆளுநரிடம் விஜய் கடிதம் வழங்கி இருந்தார். ஆனால், அது ஒரு போலியான கடிதம் எனவும், பெரும்பான்மையை பெற தவெக குதிரை பேரத்தில் ஈடுபடுவதாகவும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குற்றம்சாட்டினார். இது தமிழக அரசியலில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், சட்டப்பேரவையில் முதமைச்சர் விஜய் முன்னிலையில், கசப்பான சில விஷயங்கள் நடந்துவிட்டதாக அமமுக எம்.எல்.ஏ., காமராஜர் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
”முதலமைச்சர் விஜய் நல்லாட்சி வழங்குவார்”
புதியதாக தேர்வு செய்யப்பட்ட சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் மற்றும் துணை சபாநாயகர் ரவிகுமார் ஆகியோருக்கு வாழ்த்து தெரிவித்து அமமுக எம்.எல்.ஏ., கமராஜ் பேசினார். அப்போது, “போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் ஆகியோருக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள். இந்த அரசு ஐந்து ஆண்டுகாலம் அமைய வேண்டும். பல்வேறு அரசியல் கட்சி தலைவர் இங்குள்ளனர். குறிப்பாக இளைஞர்கள் அதிகளவில் இங்கு இடம்பெற்றுள்ளனர். ஒரு நாட்டின் எதிர்காலம் இளைஞர்கள் கையில் இருப்பதாக கூறுவார்கள். முதலமைச்சர் நல்ல இளைஞராக இருப்பதன் காரணத்தினால், நிச்சயமாக ஒரு சிறந்த ஆட்சியை ஏற்படுத்தி தருவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அதனால் தான் உங்களை ஆதரித்து பேசுகிறேன்.
”கசப்பான விஷயங்கள் நடந்திருச்சு”
சில கசப்பான சம்பவங்களும் நடந்ததுண்டு. அது அன்றைக்கு இருந்த அரசியல் சூழல். இன்று முதலமைச்சரால் தான் ஒரு திறமையான ஆட்சியை வழங்க முடியும். நீங்கள் முதலில் கையெழுத்துபோட்ட மூன்று அறிவிப்புகளும் தமிழ்நாட்டிற்கு மிகவும் உதவுகின்றன திட்டங்கள். மூன்று நாட்களாக சென்னையில் இருக்கிறேன். கடந்த காலங்களுடன் ஒப்பிடும்போது சென்னை இப்போது மிகவும் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் இருக்கிறது. காவல்துறை எப்படி சிறப்பாக செயல்படுகிறது என்பதை பார்க்கிறேன். 75 ஆண்டுகளில் 50 ஆண்டுகாலம் ஆண்டவர்களுக்கு நீங்கள் முன்னுதாரணமாக இருக்க வேண்டும். தமிழ்நாட்டு இளைஞர்கள் உங்களை நம்புகிறார்கள், நாங்கள் உங்களை நம்புகிறோம். முதல் அறிவிப்பிலேயே இலவச அறிவிப்புகள வழங்குவீர்கள் என மக்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால், உண்மையாக மக்களுக்கு உதவுகிற திட்டங்களை அறிவித்த உங்களுக்கு பாராட்டுகள் வாழ்த்துகள். இதன் மூலம் உங்களுடைய ஆட்சிக்கு எனது ஆதரவினை நான் தெரிவித்துக் கொள்கிறேன்” என அமமுக எம்.எல்.ஏ., காமராஜ் பேசியுள்ளார்.
Before You Go
Raghava Lawrence | TARGET விஜய்!TEAM அண்ணாமலை?லாரன்ஸ் மெகா ட்விஸ்ட்
ட்ரெண்டிங் செய்திகள்






















