திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு வெற்றி கிடைக்குமா? தமிழிசை சௌந்தரராஜன் பரபரப்பு குற்றச்சாட்டு!
"அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வடமாநில தொழிலாளர்களை அமைச்சர் கொச்சைப்படுத்தி பேசுவது நல்லதல்ல என தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்."

காங்கிரசுக்கும் திமுகவிற்கும் ஜெயிக்குமா என்ற நம்பிக்கை இல்லை, ஆகையால் தான் காங்கிரஸ் கட்சியினர் விசில் அடித்து வருகிறார்கள். தேசிய ஜனநாயக கூட்டணி உறுதியாகிக் கொண்டு இருக்கிறது இந்தியா கூட்டணி உதிரியாகிக் கொண்டே இருக்கிறது என காஞ்சிபுரத்தில் நெசவாளர்களை சந்தித்து தேர்தல் அறிக்கையில் கோரிக்கைகளை கேட்க வந்த தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
காஞ்சிபுரத்தில் தமிழிசை சௌந்தரராஜன்
2026 சட்டமன்ற தேர்தல் நெருங்குவதை ஒட்டி தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சி தலைவர்களும் கூட்டணி விவகாரம் குறித்தும் தொகுதி நிலவரம் குறித்தும் உறுதி செய்து வருகின்றனர். இந்நிலையில், 2026 சட்டமன்றத் தேர்தலில் எதிர்கொள்ள முக்கிய பங்காக விளங்கும் தேர்தல் அறிக்கையை தயார் செய்வதற்காக அந்தந்த கூட்டணி கட்சியினர் குழு அமைத்து பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டு அறிந்து வருகின்றனர்.
நெசவாளர்களை சந்தித்த தமிழிசை சௌந்தர்ராஜன்
அந்த வகையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பாஜக சார்பில் முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் தேர்தல் அறிக்கையில், நெசவாளர்களுக்கு தேவையான திட்டங்கள் மற்றும் அரசு போன்றவை குறித்து காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட முருகன் காலனி மற்றும் அண்ணா குடியிருப்பு காலனி உள்ளிட்ட பகுதிகளில் நெசவாளர்களை நேரடியாக சந்தித்த தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்களிடம் தேவையான குறைகள் மற்றும் திட்டங்கள் குறித்து கேட்டறிந்து தேர்தல் வாக்குறுதிகளில் சேர்ப்பது குறித்து கலந்துரையாடினார்.
செய்தியாளர்கள் சந்திப்பு:
இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், மத்திய அரசு திட்டங்கள் எதுவும் தமிழக மக்களுக்கு கிடைக்கக்கூடாது என்பதற்காகவும், திட்டங்கள் முழுவதும் கலைஞர் பெயர்களை வைக்க வேண்டும் என்பதற்காகவும், தமிழக அரசு அரசியல் செய்து கொடூரம் மனம் படைத்தவராக தமிழக முதலமைச்சர் செய்து வருகிறார்.
துணை முதலமைச்சர் படிப்படியாக வந்திருந்தால் உழைப்பவர்களின் அருமை தெரிந்திருக்கும், அரசியல் கட்சித் தலைவர்களை மதிக்க தெரிந்திருக்கும், நேரடியாக துணை முதலமைச்சர் பதவிக்கு வந்ததால் எடப்பாடி பழனிசாமி பார்த்து முரட்டு அடிமை என்று கூறி இருக்க மாட்டார். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் எமர்ஜென்சி என்ற பெயரில் அடிமைப்படுத்தி தந்தையை ஜெயிலுக்கு அனுப்பிய காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்திருக்கிறீர்களே இது என்ன அடிமைத்தனம்.வடமாநில தொழிலாளர்களை கொச்சைப்படுத்தி அமைச்சர் பேசினார் என குற்றச்சாட்டை முன் வைத்தார்
கார்ல் மார்க்ஸ் யார் என்பதை கம்யூனிஸ்காரர்களே மறந்து விட்டார்கள், தமிழ்நாட்டிற்கு காரல் மாஸ் என்ன செய்தார் தமிழ்நாட்டுக்கும் தமிழ் கலாச்சாரத்திற்கும் எதிரானவர் தான் காரல் மாஸ்க் அவருக்கு எதற்கு சிலை வைத்தார்கள்?. வடமாநில தொழிலாளர்களை கொச்சைப்படுத்தி பேசிய அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு வேற்றுமையில் ஒற்றுமைக்கான வேண்டுமே தவிர இதுபோன்ற பேச்சு நல்லதல்ல என தெரிவித்தார்.
காங்கிரஸுக்கே திமுக ஜெயிக்குமா என்ற நம்பிக்கை இல்லை, ஆகையால் சூரியனை வணங்குவதற்கு முன்பு விசில் அடித்து வருகிறார்கள், ஆகையால் தான் திமுகவும் சரி காங்கிரசும் சரி யோசனை செய்து வருகிறது. தேசிய ஜனநாயக கூட்டணி வளர்ந்து கொண்டே வருகிறது இந்தியா கூட்டணி உதிரி ஆகிக்கொண்டே வருகிறது என காஞ்சிபுரத்தில் தேர்தல் அறிக்கைக்காக நெசவாளர் அவர்களிடம் குறை கேட்க வந்த முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.























