பாஜக தமிழ்நாடு முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கமல்ஹாசன் மற்றும் விஜய்யின் அரசியல் குறித்து அவர் கருத்து தெரிவித்துள்ளார். அது குறித்து தற்போது பார்க்கலாம்.

Continues below advertisement

“பாஜக-அதிமுக கூட்டணி பலமாக உள்ளது“

அரசியலில் தற்போது உள்ள சூழல் குறித்து பேசிய தமிழிசை சவுந்தரராஜன், இன்றைய காலகட்டத்தில் பாஜக-அதிமுக கூட்டணி பலமாக உள்ளதாகவும், ஆனால், காங்கிரஸ், திமுக, விடுதலை சிறுத்தைகள் கூட்டணியின் அங்கீகாரம் போய்விட்டது எனவும் தெரிவித்தார்.

மேலும், மக்கள் நீதி மய்யம், கொங்கு கட்சி, ஜவஹிருல்லா கட்சிகளுக்கு அங்கீகாரம் இல்லை என்று தெரிவித்த அவர், எங்களை பார்த்து பயப்படுவதாக சொன்னார்கள், இன்று அவர்கள் கூட்டணி போய்விடும் போல் உள்ளது என்று விமர்சித்தார்.

Continues below advertisement

அதோடு, “காங்கிரஸ் அதிகாரப் பகிர்வு வேண்டும் என்று சொல்கிறார்கள். திருமாவளவன் ஏற்கனவே சொல்லிவிட்டார். கம்யூனிஸ்டுகள் தற்போது பொட்டிப் பாம்பாய் அடங்கிவிட்டார்கள். தேர்தல் நெருங்க நெருங்க தேசிய ஜனநாயக கூட்டணி வலுப்பெறும்“ என்று அவர் கூறினார்.

“கமல்ஹாசன் மீது தாக்கு“

தொடர்ந்து, ஒரு சிலர் எந்த நோக்கமும் இல்லாமல் கட்சியை தொடங்குவதாகவும், ஆனால், எந்த அரசியல் நடவடிக்கைகளிலும் ஈடுபடுவதில்லை என்றும் தெரிவித்தார். 

ஆனால், அவர்கள் சுயநலத்திற்காகவே கட்சிகளை உருவாக்குவதாக குற்றம்சாட்டிய அவர், “உதாரணத்திற்கு நடிகர் கமல்ஹாசன் ஒரு அரசியல் கட்சியை தொடங்கினார். பிறகு அவ திமுக உடன் கூட்டணி வைத்து தற்போது எம்.பி ஆகிவிட்டார். தற்போது அவரை நம்பி வந்த அவரது தொண்டர்களின் நிலை என்ன.?“ என கேள்வி எழுப்பிய தமிழிசை, இதுபோன்ற அரசியல் கட்சிகள் ஒழிக்கப்பட வேண்டும் என்றும் சாடினார்.

மேலும், மக்கள் நீதி மய்யம் தேர்தல் ஆணையத்தால் கூட அங்கீகரிக்கப்பட முடியாத கட்சிகளில் 42-ல் ஒரு கட்சியாக அதை நீக்கி விட்டனர் என கூறினார். அதோடு, திராவிட கட்சிகளுக்கு எதிராக தான் அரசியல் வாழ்வை கொண்டு வருவேன் என கூயி அவர், திமுக எதை சொல்கிறதோ அதை கேட்க வேண்டியி நிலையில் உள்ளார் எனவும், அவருக்கு ஒரு எம்.பி பதவி கிடைத்த உடன், திமுக-வின் ஊதுகுழலாக மாறிவிட்டார் எனவும் தமிழிசை விமர்சித்தார்.

விஜய்யை விமர்சித்த தமிழிசை சவுந்தரராஜன்

மேலும், தவெக தலைவர் விஜய் குறித்து பேசிய அவர், விஜய் ஒரு நடிகர், அவருக்கு வருபவர்கள் எல்லாம் ஓட்டு போடுவார்களா என்று தெரியாது என்றும், அவரை வேடிக்கை பார்க்கவே கூட்டம் வருவதாகவும் கூறினார். 

ஒரு கட்சித் தலைவராக விஜய் தற்போதுதான் அரசியலுக்கு வந்துள்ளார், அரசியலில் போராட்டஃகளை அவர் நடத்தியது கிடையாது என கூறிய திமிழிசை, திமுகவிற்கு அவர் சவாலாக இருக்கட்டும், திமுகவிற்கு மீதான எதிர்ப்பை அவர் தீவிரப்படுத்தட்டும் என அறிவுறுத்தினார்.

மேலும், “விஜய் இரண்டு, மூன்று நாட்களாக பெரிய கூட்டத்தை கூட்டுகிறார், ஒன்று மட்டும் சொல்லிக் கொள்கிறேன், அவருக்கு ஸ்கிரிப்ட் எழுதிக் கொடுப்பவர் சரி பார்த்து எழுதிக் கொடுக்க வேண்டும என கேட்டுக்கொள்கிறேன்“ என தமிழிசை சவுந்தரராஜன் விமர்சித்தார்.

அதோடு, விஜய் எடுக்கப் போவது திமுக கூட்டணி ஓட்டுகளைத் தான் என குறிப்பிட்ட அவர், அதனால் திமுக அவர் எதிர்ப்பதில் ஒரு நியாயம் இருக்கிறது, ஆனால், பாஜகவையும் ஏதோ தொடுவோம் என அவர் பேசுகிறார், அது வேண்டாம் என்றும் தமிழிசை குறிப்பிட்டார்.