மேலும் அறிய

Udhayachandran IAS : ’கட்டம் கட்டிய முதல்வர் விஜய்? காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட உதயசந்திரன் ஐ.ஏ.எஸ் - பின்னணி என்ன?

”விஜய் தலைமையிலான அரசு, உதயசந்திரன் போன்ற ஆளுமைகளை, விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டு தக்க வைக்கும் என்று கூறப்பட்ட நிலையில், யார் சொல்வதையோ கேட்டுக்கொண்டு அவரை அவசர, அவசரமாக மாற்றியிருக்கிறது”

திமுக ஆட்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின், தனிச் செயலாளராகவும் பின்னர் நிதித்துறை செயலாளராகவும் நியமிக்கப்பட்ட உதயசந்திரன் ஐ.ஏ.எஸை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி விஜய் தலைமையிலான தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவிட்டிருக்கிறது.

என்ன காரணம் ?

திமுக ஆட்சியில் முக்கிய முடிவுகளையெல்லாம் உதயசந்திரனே எடுத்ததாகவும், அவர்தான் திமுக ஆட்சியையே நடத்தியதாகவும் அவர் மீது கடுமையான விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டது. குறிப்பாக, திமுக ஆட்சி நீடிக்க வேண்டும் என்று அதிகாரிகள் மூலம் உதயசந்திரன் பெரும் முயற்சித்ததாகவும் கூறப்பட்ட நிலையில், விஜய் முதலமைச்சராகியதும் வெளியாகியுள்ள முதல் மாற்றத்திலேயே உதயசந்திரனை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

அதிமுக ஆட்சியில் ஓரங்கட்டப்பட்ட உதயசந்திரன்

அதிமுக ஆட்சியில் பள்ளிக் கல்வித்துறை செயலாளராக உதயசந்திரன் சிறப்பாக செயல்பட்டபோது அவரின் செயல்பாடுகளை பிடிக்காத அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரு அவருக்கு தடை ஏற்படுத்துவதற்காகவே பள்ளிக் கல்வித் துறைக்கு முதன்மை செயலாளர் என்ற புதிய பதவியை உருவாக்கி, அதற்கு பிரதீப் யாதவ் ஐ.ஏ.எஸ் என்பவரை நியமனம் செய்தனர். பள்ளிக் கல்வித் துறையை முழுமையாக தனது கட்டுப்பாட்டில் வைத்து சிறப்பான திட்டங்களை செயல்படுத்திக்கொண்டிருந்த உதயசந்திரன், அதன்பின்னர் பாடத்திட்டம் தொடர்பான பணிகளை மட்டுமே கவனிப்பார் என்றும் அவர் பிரதீப் யாதவிற்கு கீழ் பணியாற்றுவார் என்றும் அறிவிக்கப்பட்டு, அவர் ஓரங்கட்டப்பட்டார்.

திமுக ஆட்சியில் முக்கியத்துவம்

இந்நிலையில், திமுக ஆட்சி அமைந்ததும் உதயசந்திரனை தனது தனிச் செயலாளராக நியமித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அதனடிப்படையிலேயே பள்ளிக் கல்வித்துறை உள்ளிட்ட முக்கிய துறைகளில் அதிரடி மாற்றங்கள், பேசப்படும் திட்டத்திற்கான அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டது. இப்படியான மிகப்பெரிய ஒரு புரட்சிக்கு வித்திட்டவராக உதயசந்திரன் திமுக ஆட்சியில் பாராட்டப்பட்ட நிலையில், உதயசந்திரனை பிடிக்காத அதிகாரிகள் மற்றும் அவரின் கண்டிப்பான அனுகுமுறைகளை வெறுத்த அமைச்சர்கள், உதயசந்திரன் மீது தொடர் குற்றச்சாட்டுகளை முதல்வர் மு.க.ஸ்டாலிடம் அடுக்கத் தொடங்கினர். அதனை விரும்பாத உதயசந்திரன் ஐ.ஏ.எஸ் தன்னை வேறு துறைக்கு மாற்றும்படி அன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் பலமுறை வலியுறுத்தினார். ஆனால், விடாப்பிடியாக இருந்த மு.க.ஸ்டாலின், உதயசந்திரனையே தன்னுடைய செயலாளராக தக்கவைத்துக்கொண்டார்.

நிதித்துறை செயலாளராக நியமனம்

அதன்பின்னர், பிடிஆர் பழனிவேல்தியாகராஜன் நிதித்துறை அமைச்சர் பொறுப்பில் இருந்து மாற்ற்றப்பட்டு, தங்கம் தென்னரசு நிதித்துறை அமைச்சராக நியமிமிக்கப்பட்டபோது, அந்த துறையின் செயலாளராக பொறுப்பேற்றுக்கொண்டார் உதயசந்திரன். குறிப்பாக, தமிழ்நாட்டின் நிதிச்சுமையை குறைப்பதற்கும், வருவாய்களை பெருக்குவதற்கும் பல்வேறு திட்டங்களையும், பல கடுமையான கட்டுப்பாடுகளை தன்னுடைய பணிக்காலத்தில் உதயசந்திரன் விதித்திருந்தார்.

காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட உதயசந்திரன்

இந்நிலையில், புதிதாக பொறுப்பேற்றுக்கொண்டுள்ள விஜய் தலைமையிலான அரசு, உதயசந்திரன் போன்ற ஆளுமைகளை விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டு தக்க வைக்கும் என்று கூறப்பட்ட நிலையில், யார் சொல்வதையோ கேட்டுக்கொண்டு அவரை அவசர, அவசரமாக மாற்றி, காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றியிருக்கிறது என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Vijay: 6 மாசம் கேட்டுட்டு... அரை மணி நேரத்துல புலம்பல்.. ஸ்டாலினை பொளந்தெடுத்த முதல்வர் விஜய்
CM Vijay: 6 மாசம் கேட்டுட்டு... அரை மணி நேரத்துல புலம்பல்.. ஸ்டாலினை பொளந்தெடுத்த முதல்வர் விஜய்
"விஜய் சார்.. வெரி ராங் சார்!" - ஐந்து ஏக்கர் வாக்குறுதியை கையில் எடுத்து மயிலாடுதுறையில் கொதித்தெழுந்த விவசாயிகள்!
”பேப்பர் லீக், பசங்க வாழ்க்கை நாசமாகுது.. இவரு மாங்கா தோட்டம் பத்தி பேசிட்டு இருக்கார்” - மோடியை சாடும் காங்.,
”பேப்பர் லீக், பசங்க வாழ்க்கை நாசமாகுது.. இவரு மாங்கா தோட்டம் பத்தி பேசிட்டு இருக்கார்” - மோடியை சாடும் காங்.,
ஆதவ் அர்ஜூனா பதவிக்கு சிக்கல்.! தவெகவினரை அலற விடும் அதிமுக- ஏன் தெரியுமா.?
ஆதவ் அர்ஜூனா பதவிக்கு சிக்கல்.! தவெகவினரை அலற விடும் அதிமுக- ஏன் தெரியுமா.?
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement

வீடியோ

Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”
Nara Lokesh on Keerathana | Troll-ல் சிக்கிய கீர்த்தனா! சந்திரபாபு மகன் Support
Vijay warns Ministers |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: முதல்வர் விஜய் அணியும் கோட் சூட் ரகசியம் தெரியுமா.? திருச்சியில் அவரே கொடுத்த விளக்கத்த பாருங்க
முதல்வர் விஜய் அணியும் கோட் சூட் ரகசியம் தெரியுமா.? திருச்சியில் அவரே கொடுத்த விளக்கத்த பாருங்க
Delimitation Bill: மீண்டும் தொகுதி மறுவரையறை மசோதா, ஒரே நாடு ஒரே தேர்தல்- மத்திய அரசு மும்முரம்!
Delimitation Bill: மீண்டும் தொகுதி மறுவரையறை மசோதா, ஒரே நாடு ஒரே தேர்தல்- மத்திய அரசு மும்முரம்!
US Iran Attacks: போட்டு சாத்திய அமெரிக்கா; பதிலுக்கு அடித்த ஈரான்; மத்திய கிழக்கில் மீண்டும் போரா.? நடப்பது என்ன.?
போட்டு சாத்திய அமெரிக்கா; பதிலுக்கு அடித்த ஈரான்; மத்திய கிழக்கில் மீண்டும் போரா.? நடப்பது என்ன.?
”பேப்பர் லீக், பசங்க வாழ்க்கை நாசமாகுது.. இவரு மாங்கா தோட்டம் பத்தி பேசிட்டு இருக்கார்” - மோடியை சாடும் காங்.,
”பேப்பர் லீக், பசங்க வாழ்க்கை நாசமாகுது.. இவரு மாங்கா தோட்டம் பத்தி பேசிட்டு இருக்கார்” - மோடியை சாடும் காங்.,
’’1800 அரசு பள்ளிகளில் HM இல்லை; 20 DEO காலியிடங்கள்- அவலத்துக்கு முடிவு எப்போ?’’அன்புமணி ஆதங்கம்!
’’1800 அரசு பள்ளிகளில் HM இல்லை; 20 DEO காலியிடங்கள்- அவலத்துக்கு முடிவு எப்போ?’’அன்புமணி ஆதங்கம்!
DMK: கொத்தடிமைகள்.. உபி... கொத்துஸ்! இளைஞர்களிடம் இப்படியா கட்சியை கொண்டு போவீங்க? கொதிக்கும் திமுக உடன்பிறப்புகள்
DMK: கொத்தடிமைகள்.. உபி... கொத்துஸ்! இளைஞர்களிடம் இப்படியா கட்சியை கொண்டு போவீங்க? கொதிக்கும் திமுக உடன்பிறப்புகள்
TNEA 2026: பொறியியல் படிக்கணுமா? மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு- விண்ணப்பிப்பது எப்படி?
TNEA 2026: பொறியியல் படிக்கணுமா? மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு- விண்ணப்பிப்பது எப்படி?
Annamalai: உண்மையான B டீமை இறக்கும் பாஜக..! அண்ணாமலையின் புதிய கட்சி - ஆப்ரேஷன் “கிறிஸ்துவ மிஷினரி”
உண்மையான B டீமை இறக்கும் பாஜக..! அண்ணாமலையின் புதிய கட்சி - ஆப்ரேஷன் “கிறிஸ்துவ மிஷினரி”
Embed widget