விழுப்புரம் : தமிழகத்தில் ஆட்சி மாற்றம் கொண்டு வர வேண்டும் என நோக்கத்தோடு அனுப்பபட்ட ஆளுநர் நோக்கத்தை நிறைவேற்றமுடியாமல் தோல்வி அடைந்து இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் திமுக கூட்டணியில் சேர்த்து கொள்ள இடமே இல்லை அந்த அளவிற்கு இடநெருக்கடி உள்ளதாக எம்.பி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்திலுள்ள பூங்காவில் பத்து லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட பொதுமக்கள் அமரும் குடில்களை விழுப்புரம் தொகுதி எம் பி ரவிக்குமார் ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் திறந்து வைத்தனர். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த விழுப்புரம் விசிக எம் பி ரவிக்குமார் தமிழக ஆளுநராக இருந்த ரவி மேற்கு வந்த ஆளுநராக இடம்மாற்றம் செய்யபப்ட்டுள்ளது வரவேற்கதக்கது அதற்கு இந்திய உள் துறை அமைச்சகத்துக்கு நன்றியை தெரிவித்து கொள்வதாகவும் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் கொண்டு வர வேண்டும் என நோக்கத்தோடு அனுப்பபட்ட ஆளுநர் நோக்கத்தை நிறைவேற்றமுடியாமல் தோல்வி அடைந்து இடமாற்றம் செய்யப்பட்டு திரும்பி சென்றிருக்கிறார். ஆளுநரின் இடமாற்றம் திமுக அரசு அமையப்போகிறது என்பதை முன்னோடியாக கருதுவதாகவும் இதை பாஜக ஒப்புக்கொண்டுள்ளதின் வெளிப்பாடு தான் ஆளுநர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது என கூறினார்.

திமுக தமிழகத்தில் 200 க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் ஆளுநரினால் தான் மாநில அரசின் உரிமைகள் என்ன என்பது தெரிய நீதிமன்றத்தின் மூலம் வாய்ப்பு ஏற்பட்டதாகவும் துணை வேந்தர்களை மாநில முதலமைச்சர் நியமிக்கலாம் என்ற தீர்ப்பு ஏற்பட்டது. ஆளுநர் ரவி தமிழகத்தில் எவ்வளவுவோ குழப்பத்தை ஏற்படுத்த முயற்சித்தார். அவரை ஒரு மாநிலத்தின் ஆளுநராக நியமித்தால் மக்கள் எப்படி ஆளும் அரசுக்கு ஆதரவாக திரும்புவார்கள் என்பதற்கு தமிழ்நாடே உதாரணம் என கூறினார். மேற்கு வங்கத்திற்கு ரவி ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளதால் மம்தா பேனர்ஜி பதவியேற்பார் என்பதற்கு ஒரு சான்று ஒன்றிய அரசு ஆக்கபூர்வமான செயல்களில் ஈடுபட வேண்டுமென்று வலியுறுத்தினார். 

Continues below advertisement

கூட்டணிக்கு ஆள் பிடிக்கிற வேலையைதான் திமுக செய்வதாக டிடிவி தினகரன் விமர்சனம் செய்துள்ளது குறித்த கேள்விக்கு பதிலளித்த எம் பி ரவிக்குமார்திமுக கூட்டணியில் சேர்த்து கொள்ள இடமே இல்லை அந்த அளவிற்கு இடநெருக்கடி உள்ளதாகவும் அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறுவதற்கு இதை கூறியிருக்கலாம் என்றும் அதிமுக கூட்டணியில் எவ்வளவு இடங்கள் பகிரப்படுகிறது யார் தலைமை என்பது தெரியவில்லை எல்லாம் டெல்லியில் தான் பேசவேண்டி உள்ளது பாஜக தான் அவர்களின் கூட்டணிக்கு தலைமையாக மாறிவிட்டதாகவும், அதிமுகவை மிக மோசமான நிலைக்கு எடப்பாடி பழனிசாமி கொண்டு சென்றுவிட்டதால் டிடிவி தினகரன் இப்படி பேசி இருக்கலாம் என தெரிவித்த அவர் ராஜ்யசபா உறுப்பினர் இடம் கேட்கவில்லை அதனால் இது பற்றி கூற ஒன்றுமில்லை என ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.