Vijay Z+ Security: உச்சகட்ட பாதுகாப்பு வளையத்தில் CM விஜய் - NSG, CRPF, CISF - 55 பேர் அடங்கிய குழு, 24*7 மானிட்டரிங்
CM Vijay Z+ Security: தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்க்கு உச்சகட்ட பாதுகாப்பு நடவடிக்கையாக Z+ பாதுகாப்பு ஏற்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

CM Vijay Z+ Security: தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்க்கு தேசிய கமாண்டோ படை வீரர்கள் உள்ளிட்ட 55 பேர் அடங்கிய குழுவின் Z+ பாதுகாப்பு ஏற்பாடுகள் வழங்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் விஜய்க்கு Z+ பாதுகாப்பு:
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்க்கு உச்சகட்ட பாதுகாப்பு நடவடிக்கையான Z+ பாதுகாப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக அவருக்கு Y பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது. இதையடுத்து நேற்று முதலமைச்சராக பொறுப்பேற்ற தவெக தலைவருக்கு இன்று காலை முதல் Z+ பாதுகாப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர்கள், உச்சநீதிமன்ற நீதிபதிகள் மற்றும் மாநில முதலமைச்சர்கள் ஆகியோருக்கு மட்டுமே இத்தைய உச்சகட்ட பாதுகாப்பு வழங்கப்படுகிறது. அதிகப்படியான ஆபத்து மற்றும் மிரட்டல்கள் இருப்பதை கருத்தில் கொண்டு இந்த பாதுகாப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது. முதலமைச்சர் விஜய் உயிருக்கு ஆபத்து இருப்பதாக, அண்மையில் காங்கிரஸ் தரப்பு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Z+ பாதுகாப்பு என்றால் என்ன?
இந்திய நாட்டில் மத்திய அரசால் ஒருவருக்கு வழங்கப்படும் அதிகப்படியான பாதுகாப்பு நடவடிக்கையாக Z+ உள்ளது. இதில் 10-க்கும் அதிகமான தேசிய பாதுகாப்பு படை கமாண்டோக்கள் உட்பட CRPF மற்றும் CISF போன்ற தனித்துவமான பாதுகாப்பு படையை சேர்ந்த 55 வீரர்கள் இடம்பெற்று, முதலமைச்சர் பாதுகாப்பினை உறுதி செய்வர். அதிநவீன இயந்திர துப்பாக்கி உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்களை கொண்டு, நாள் முழுவதும் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. குண்டு துளைக்காத வாகனங்களில் மட்டுமே முதலமைச்சர் பயணிக்க அனுமதிக்கப்படுவர். பாதுகாப்பு பணியில் ஈடுபடுபவர்கள் பல்வேறு பிரிவுகளில் சிறந்த பயிற்சி பெற்றவராக இருப்பதோடு, தற்காப்பு கலைகளிலும் சிறந்தவர்களாக விளங்குவர்.
பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மதிப்பாய்வு செய்யப்படுகிறது. அச்சுறுத்தல் பகுப்பாய்வின் அடிப்படையில் பாதுகாப்பைத் திரும்பப் பெற, மாற்றியமைக்க அல்லது நீட்டிக்க மத்ஹிய அரசுக்கு உரிமை உண்டு. முன்னதாக முதலமைச்சர் விஜய்க்கு வழங்கப்பட்டு வந்த Y பிரிவில் இரண்டு தனி பாதுகாவலர்கள் மட்டுமே விஜயுடன் பயணித்து வந்தது குறிப்பிடத்தக்கது. இரண்டுக்கும் நடுவில் உள்ள Z பிரிவில் 4 முதல் 6 தேசிய பாதுகாப்பு படை கமாண்டோக்கள் மற்றும் போலீசாரெ உட்பட 22 பேர் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்வார்கள்.
Before You Go
DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
ட்ரெண்டிங் செய்திகள்






















