CM Vijay Stalin Meeting: ஸ்டாலின் வீட்டிற்கே நேரில் செல்லும் விஜய்.! அடுத்தடுத்து திருப்பம்- தமிழக அரசியலில் நடப்பது என்ன.?
CM Vijay MK Stalin Meeting: தமிழக சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை பிடித்துள்ளது தவெக, இதனையடுத்து தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள விஜய், முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலினை இன்று சந்தித்து பேச இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் ஆட்சியை பிடித்த தவெக
தமிழக சட்டமன்ற தேர்தலில் ஆளுங்கட்சியான திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் என கருத்து கணிப்புகள் வெளியாகி திமுகவினரை உற்காசகப்படுத்திய நிலையில், வாக்கு எண்ணிக்கையில் திடீர் திருப்பமாக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்துள்ளது. இதனையடுத்து ஆட்சி அமைக்க மேலும் 10 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், முதல் ஆளாக திமுகவுடன் கூட்டணியை முறித்துக்கொண்ட காங்கிரஸ், தவெகவுடன் இணைந்தது. அடுத்தாக விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக் கட்சிகளின் ஆதரவை பெற்ற தவெக ஆட்சி அமைத்தது. இதனையடுத்து முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றுக்கொண்டார்.
முதல் நாளே விஜய்யை விமர்சித்த ஸ்டாலின்
இதனையடுதுத முதலமைச்சர் விஜய்க்கு, திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்திருந்தார். அப்போது. தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பதவியேற்றதும் தாங்கள் கையெழுத்திட்டுள்ள அறிவிப்புகளையும் வரவேற்கிறேன் என கூறியிருந்தார். மேலும் தமிழ்நாடு அரசின் நிதிநிலை பற்றி கடந்த பிப்ரவரி மாத பட்ஜெட்லயே தெளிவா நாங்க சொல்லிட்டோம். அது உங்களுக்குத் தெரியாதா? என கேள்வி எழுப்பியிருந்த ஸ்டாலின், அதுக்குப் பிறகுதான நீங்க பல வாக்குறுதிகளை மக்களுக்குக் கொடுத்தீங்க? உங்களுக்கு வாக்களித்த மக்களை மீண்டும் ஏமாற்றி திசைதிருப்பாதீங்க! என விமர்சனம் செய்திருந்தார்.
“நடைமுறைக்கு சாத்தியமானதை மட்டுமே வாக்குறுதிகளாக அளிக்கிறேன்” எனக் கூறி ஆட்சிக்கு வந்துள்ள நீங்கள் இப்போதுதான் அரசு நிர்வாகத்துக்குள் அடியெடுத்து வைக்கிறீர்கள். கூடிய விரைவில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றலாம் எனும் நுணுக்கங்களையும் எங்களைப் போலவே நீங்களும் நிச்சயம் கற்றுக்கொள்வீர்கள் என நான் நம்புகிறேன். வாக்களித்த மக்களோடு, நானும் அதையே எதிர்பார்க்கிறேன். தங்களின் ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணம் தொடர மீண்டும் எனது வாழ்த்துகள்! என பதிவிட்டிருந்தார்.
ஸ்டாலினை நேரில் சந்திக்கும் விஜய்
இந்த நிலையில் நேற்று மாலை திராவிடர் கழகம் அலுவலகத்திற்கு சென்ற விஜய், பெரியார் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். அடுத்தாக கி.வீரமணியை சந்தித்தும் வாழ்த்து பெற்றார். இந்த நிலையில் இன்று மதியம் திமுக தலைவர் ஸ்டாலினை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் முதலமைச்சர் விஜய் சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்போது தமிழகத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் படி கேட்டுக்கொள்வார் என கூறப்படுகிறது. இந்த சந்திப்பிற்கு பிறகு மதிமுக பொதுச்செயலாளர் வைகோவையும் முதலமைச்சர் விஜய் சந்திக்க உள்ளார். முதலமைச்சர் விஜய்யின் அடுத்தடுத்த செயல்பாடுகளால் தவெகவினர் உற்சாகத்தில் உள்ளனர்.
Before You Go
DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
ட்ரெண்டிங் செய்திகள்





















