முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய், 51 வயதிலும் தனது உடலை மிகவும் கட்டுக்கோப்பாகப் பராமரித்து வருகிறார். அவரது இந்த சுறுசுறுப்பிற்கும், இளமையான தோற்றத்திற்கும் அவர் பின்பற்றும் சீரான உணவுப் பழக்கமே முக்கியக் காரணம். அவர் ஒரு நாளில் என்னென்ன உணவுகளைச் சாப்பிடுகிறார் என்பது குறித்துப் பார்க்கலாமா?
காலைஉணவு
முதலமைச்சர் விஜய் தனது நாளைத் தொடங்கும்போது, உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்வதில் அதிக கவனம் செலுத்துகிறார். தினமும் காலையில் எழுந்தவுடன் தண்ணீர் அல்லது இளநீர் குடிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
அதனைத் தொடர்ந்து காலை உணவாக, மிகவும் எளிமையான தென்னிந்திய உணவுகளான இட்லி அல்லது தோசையுடன் சட்னி சாப்பிடுவதையே அவர் அதிகம் விரும்புகிறார். வழக்கமாக 2 இட்லி, தேங்காய் சட்னி என்பது அவரின் ஃபேவரிட்டாக உள்ளது.
மதியஉணவு
மதிய வேளைகளில், பெரும்பாலும் வீட்டில் சமைக்கப்பட்ட ஆரோக்கியமான உணவுகளையே அவர் தேர்ந்தெடுக்கிறார். 200 கிராம் பிரவுன் ரைஸ், காய்கறிகள் மற்றும் புரதச்சத்துக்காக சிக்கன் அல்லது ஃப்ரெஷ் மீன் ஆகியவை அவரது மதிய உணவில் இடம்பெறும்.
சீட் டே
அதேசமயம், விஜய்க்கு மிகவும் பிடித்த உணவுகளில் ஒன்று மட்டன் பிரியாணி. படப்பிடிப்புத் தளங்களில் இருக்கும்போதோ அல்லது சிறப்பு நாட்களிலோ அவர் பிரியாணியை விரும்பிச் சாப்பிடுகிறார். அதேபோல சிக்கன் குழம்பில் தோய்த்த மொறுமொறுப்பான தோசை அவரின் அடுத்த ஃபேவரிட் உணவு.
மாலைநேரச்சிற்றுண்டி
மாலை நேரங்களில் பசி எடுத்தால், ஆரோக்கியமற்ற நொறுக்குத் தீனிகளை விஜய் முற்றிலும் தவிர்த்து விடுகிறார். அதற்குப் பதிலாக, பாதாம், வால்நட் போன்ற உலர் பருப்பு வகைகள் மற்றும் ஆப்பிள், மாதுளம்பழம், ஆரஞ்சு, வாழை உள்ளிட்ட பழங்களையே சிற்றுண்டியாக எடுத்துக்கொள்கிறார்.
இரவுஉணவு
இரவு நேரங்களில் உணவு செரிமானம் ஆக எளிமையாக இருக்க வேண்டும் என்பதற்காக, மிகவும் லைட்டான உணவுகளையே அவர் உண்கிறார். பெரும்பாலும் சப்பாத்தி, காய்கறி சாலட் அல்லது சூப் போன்றவையே அவரது இரவு உணவாக இருக்கும். தூங்குவதற்கு முன்பு அதிகமாகச் சாப்பிடுவதை அவர் தவிர்த்து விடுகிறார்.
பிடித்த இனிப்பு
பொதுவாக உணவு விஷயத்தில் விஜய் மிகவும் கண்டிப்பாக இருந்தாலும், இனிப்பு வகைகளில் அவருக்கு ஒரு தனி விருப்பம் உண்டு. குறிப்பாக, சர்க்கரைப் பொங்கல் என்றால் அவருக்கு மிகவும் பிடிக்கும் என்கிறார் அவரின் அம்மா ஷோபா சந்திரசேகர். தனக்கு விருப்பமான நேரங்களில் அவர் சர்க்கரைப் பொங்கலை விரும்பிச் சாப்பிடுகிறார்.
எவ்வளவுதான் பிடித்த உணவாகவே இருந்தாலும், அதை அளவோடு சாப்பிடுவதுதான் விஜய்யின் ஆரோக்கிய ரகசியம். அத்துடன் துரித உணவுகளைத் தவிர்த்து, வீட்டிலேயே சமைக்கப்பட்ட உணவுகளைச் சாப்பிடுவதுமே அவரது பிட்னஸ் சீக்ரெட்.
