2024ஆம் ஆண்டில் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராகும் வகையில் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் பட்டியலை மாநிலத் தலைவர் அண்ணாமலை மாற்றி உள்ளார். இதன்படி மாநிலத் துணைத்தலைவராகவும், பாஜக சட்டமன்ற குழு தலைவராகவும் இருந்த நயினார் நாகேந்திரன், ஒரு நபருக்கு ஒரு பதவி என்பதன் அடிப்படையில், துணைத்தலைவர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். மாநிலத் துணைத்தலைவர்கள் பொறுப்பில், எம்.சக்ரவர்த்தி, வி.பி.துரைசாமி, கே.பி.ராமலிங்கம், கே.எஸ்.நரேந்திரன், கரு.நாகராஜன், சசிகலா புஷ்பா, பேரசிரியர் கனகசபாபதி, நாராயணன் திருப்பதி, டால்பின் ஸ்ரீதர், ஏ.ஜி.சம்பத், ஆர்.சி.பால்கனகராஜ் என 11 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 


மாநிலப்பொதுச்செயலாளர்கள் பொறுப்பில், எம்.முருகானந்தம், பேராசிரியர் ராம.ஸ்ரீனிவாசன், பொன்.வி.பாலகணபதி, ஏ.பி.முருகானந்தம், பி.கார்த்தியாயினி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மாநில செயலாளர்கள் பொறுப்பில், கராத்தே தியாகராஜன், கே.வெங்கடேசன், சுமதி வெங்கடேசன், டி.மலர்கொடி, எஸ்.மீனாட்சி, வினோஜ் பி செல்வம், சரவணகுமார், அஸ்வத்தாமன், அனந்த பிரியா, ப்ரமிளா சம்பத், எஸ்.சதீஷ்குமார், எஸ்.ஜி.சூர்யா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மாநில பொருளாளராக எஸ்.ஆர்.சேகரும், இணை பொருளாளராக எம்.சிவசுப்ரமணியனும்,மாநில அலுவலக செயலாளராக எம்.சந்திரனும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 


மாநில அணிகளின் தலைவர்கள்:- 



  1. மகளிர் அணி- ஆர்.உமாரதி

  2. இளைஞர் அணி - எம்.ரமேஷ் சிவா

  3. விவசாய அணி - ஜி.கே.நாகராஜ்

  4. எஸ்.சி.அணி - தடா.பெரியசாமி

  5. எஸ்.டி.அணி -எஸ்.சிவபிரகாசம்

  6. சிறுபான்மையினர் அணி - டெய்சி சரண்

  7. ஓபிசி அணி - எஸ்.சாய்சுரேஷ்


மாநில செய்தி தொடர்பாளர்கள்:- 



  1. சி.நரசிம்மன்

  2. எஸ்.கே.கார்வேந்தன்

  3. எஸ்.ஆதவன் 


மற்றும் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு தலா ஒரு நபர் என 39 தேசிய பொதுக்குழு உறுப்பினர்கள், 60 மாவட்ட பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.