வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழ்நாட்டில் பல மாவட்டங்களும் வெள்ளக்காடாய் காட்சியளிக்கிறது. குறிப்பாக, தலைநகர் சென்னை 2015ம் ஆண்டுக்கு பிறகு மிக மோசமான பாதிப்பைச் சந்தித்துள்ளது. வெள்ளசேதங்களை சீரமைத்தல் மற்றும் மீட்பு, நிவாரண பணிகளை மாநில அரசு துரிதமாக செயல்படுத்தி வருகிறது.


இந்த நிலையில், பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் தமிழ்நாட்டுக்கு பேரிடர் நிவாரண நிதியாக ஆண்டுக்கு ரூபாய் 1,360 கோடியை ஒன்றிய அரசு தருவது வழக்கம். இந்தாண்டுக்கான (2020-21)ம் ஆண்டுக்கான பேரிடர் நிவாரண நிதியில் ரூபாய் 300 கோடி நிலுவையில் உள்ளது என்று கூறியிருந்தார்.








இந்த நிலையில், தமிழக பா.ஜ.க. அமைச்சர் அண்ணாமலை தனது டுவிட்டர் பக்கத்தில், அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரனின் பேட்டியை குறிப்பிட்டு, “ மாண்புமிகு அமைச்சர் அவர்களே…! தமிழ்நாடு பேரிடர் நிவாரண நிதியை பற்றி முதலில் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். இது 75 சதவீதம் மத்திய அரசும், 25 சதவீதம் மாநில அரசும் கொடுக்கின்ற நிதி. 2020-21ம் ஆண்டுக்கான பேரிடர் நிவாரண நிதி ரூபாய் 1,360 கோடி. இதில் மத்திய அரசு தனது பங்கான ரூபாய் 1,020 கோடியை ஜூலை 31-ந் தேதி அளித்துவிட்டது.








நம்முடைய மாநில அரசு கொடுக்காத ரூபாய் 300 கோடியை பற்றி நீங்கள் பேசிக்கொண்டிருக்கிறீர்கள். உடனடியாக நம்முடைய முதலமைச்சரிடம் முறையிட்டு இந்த தொகையை பெற்றுக்கொள்ளுங்கள். உங்களுடைய புரிதலுக்காக சில குறிப்புகள் இணைத்துள்ளேன். நன்றி! வணக்கம்!”


இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.


அண்ணாமலை இந்த பதிவுடன் மத்திய அரசு ஒவ்வொரு நிதிஆண்டும் பேரிடர் நிவாரண நிதிக்காக ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒதுக்கிய தொகைக்கான பட்டியலையும் இணைத்து வெளியிட்டுள்ளார்.  


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண